Friday, December 14, 2012

தடம் மாறிய தமிழ் படங்கள் 44


சந்தர்ப்ப சூழ்நிலையில் தான் காதலித்தவனின் தகப்பனை மணக்கிறார் நாயகி. தனக்கு இரண்டாம்  தாரமாக வாழ்க்கைப்பட்டவர் தன் மகனின்  காதலி என அறிகிறார் கணவன்.  தன்  சித்திதான் தனது அன்புக் காதலி என அறிகிறான் நாயகன். இப்படி எதிர்பாராத திருப்பங்களுடன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் எதிர்பாராதது.

வி. நாகையாவின் மகன் சிவாஜி கணேசன் தகப்பனுக்குத் தெரியாது பத்மினியைக் காதலிக்கிறார்.  மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்குச் செல்கிறார் சிவாஜி. விமான விபத்தில் சிவாஜி இறந்துவிட்டதாகத் தகவல் வருகிறது. இதனை அறிந்த காதலி பத்மினி சோகத்தில்  துடிக்கிறார். நடைப்பிணமான வி. நாகையா  நண்பரின் ஆலோசனைப்படி இரண்டாம் திருமணம் செய்ய  பெண் தேடுகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையில் மகன் சிவாஜியின் காதலி பத்மினி நாகையாவை மணக்கிறார்.

மணமான  முதல் இரவில் மனைவியை நெருங்குகிறான் நாகையா.  முதியவரான நாகையாவை  கணவனாக ஏற்றுக் கொள்ளாத பத்மினி  அப்பா என அலறியடிபடி காலில்  விழுகிறாள். தன்  கடந்த கால வாழ்க்கையையும் தன் காதலனின் புகைப்படத்தையும்  சிவாஜி  எழுதிய கடிதங்களையும்  காட்டுகிறார் பத்மினி.  தன் மகனின்  காதலியை  தான் மணந்ததை நினைத்து வருத்தப்படுகிறார் வி. நாகையா பத்மினி காதலித்தது  தன் மகன் தான் என்ற உண்மையைக் கூறாது வேறு  இளைஞனைத் திருமணம் செய்யும்படி அறிவுரை கூறி விட்டு திருத்தல யாத்திரை  சென்ற  வி. நாகையா தான் இறந்து விட்டதாகத் தகவல் அனுப்புகிறார்.

திருத்தல யாத்திரை சென்ற வி. நாகையா விபத்தில் கண்ணை இழந்த  மகன் சிவாஜியை   காண்கிறார்.  சிவாஜியின்  காதலை அறிந்த வி. நாகையா காதலி பத்மினியைத் திருமணம் செய்யும்படி கூறுகிறார்.

 தன் மனைவி மகனின் காதலி என்பதை அறியாது செய்த தவறினால் மனம் கலங்கி உயிரை விடுகிறார் வி. நாகையா.

தன் காதலி பத்மினியைத்  தேடி செல்லும் சிவாஜி  சிற்பி செதுக்காத பொற்சிலையே என்ற பாடலைப் பாடுகிறார். அந்தப் பாடலின் மூலம் வந்திருப்பது தன் காதலன் சிவாஜி என அறிகிறாள் பத்மினி. காதலிக்கும் போது பாடிய பாட்டு பிரிந்தவர்களைச்    சேர்க்கிறது.  சிவாஜி பாடிய தால் உணர்ச்சி வசப்பட்ட  பத்மினி ஓடி வருகிறாள்.  வந்திருப்பது தன் காதலிதான்  என்பதை அறிந்த சிவாஜி ஆசையோடு அவளைத் தொடுகிறார்.  தன் கணவனைத் தவிர வேறு ஒரு   ஆடவன் தன் தன்  மீது கை வைத்ததை ஏற்றுக் கொள்ளாத  பத்மினி சிவாஜியின் கன்னத்தில்  அறைகிறார்.

பத்மினியின்  அண்ணா சிவாஜிக்கு சிகிச்சை செய்கிறார். சிவாஜிக்கு பார்வை தெரியத் தொடங்குகிறது. நீண்ட நாட்களின் பின்  சந்தித்த சிவாஜியும் பத்மினியும் உணர்ச்சி வசப்படுகின்றனர். சிவாஜியையும் பத்மினியையும் சேர்த்து வைக்க பத்மினியின் அண்ணணும் அண்ணியும் முயற்சி செய்கின்றனர். நாகையா இறந்த செய்தியைக்  கேள்விப்பட்ட பத்மினி விதவைக் கோலம் பூணுகிறாள்.

100  நாட்கள் ஓடிய இப்படம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்ற அதேவேளை,  விமர்சகர்களின் கண்டனத்தையும் எதிர்நோக்கியது.  சிவாஜிக்கு பத்மினி அடித்த காட்சி சிவாஜியையும் படக் குழுவினரையும் மட்டுமல்லாது ரசிகர்களையும்  அதிர்ச்சியடைய வைத்தது. அந்தப் படப்பிடிப்பின் போது உணர்ச்சி வசப்பட்ட  பத்மினி சிவாஜிக்கு உண்மையாகவே அடித்தார்.

சிவாஜியை  அடிக்கும் காட்சி படமாக்கப்படப் போவதை அறிந்த பத்மினி முதலில்  மறுத்தார்.  இப்படத்தின் ஜீவ நாடியே இந்தக் காட்சிதான்  ஆகையினால் சிவாஜிக்கு அடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார் இயக்குனர் சி.எச். நாராயணமூர்த்தி. சிவாஜியின்  ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்று மறுத்து விட்டார். பத்மினி மறுத்ததும் இக்காட்சியைப் பற்றி பத்மினிக்கு விளக்கும்படி சிவாஜியிடம் வேண்டுகோள் விடுத்தார் இயக்குனர்.

அந்தக் காட்சியின்  முக்கியத்துவத்தை பத்மினிக்கு எடுத்துக் கூறிய சிவாஜி  கதாநாயகனைக் கதாநாயகி அடிக்கும் காட்சி   யின் முக்கியத்துவத்தை பத்மினிக்கு எடுத்துரைத்தார் சிவாஜி. கதாநாயகனை கதாநாயகி அடிக்கும் உள்நாட்டுப்படங்களையும் வெளிநாட்டுப்படங்களையும் போட்டுக்காட்டினார்.சிவாஜியின்  வற்புறுத்தலினால்  அக்காட்சியில் நடிக்க சம்மதித்தார்  பத்மினி.

பத்மினியின் கையை சிவாஜி  தொட்டதும்  எங்கிருந்துதான் அந்த ஆவேசம் பத்மினிக்கு  வந்ததோ தெரியாது. இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அடித்தார். அடியின் வலியைப் பொறுத்துக் கொண்ட சிவாஜி,  இயக்குனர் கட் சொல்வார்  என எதிர்பார்த்தார்.  அடியின் அகோரத்தினால்   சிவாஜியின்  மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தது. இனியும் பொறுக்க முடியாது எனக் கருதிய சிவாஜி பத்மினியின்  கையைப் பிடித்துக் கொண்டு கட் கட் என்று சத்தம் போட்டார். அதன் பின்னர் தான் இயக்குனரும் கட் கட் என்றார்.

படப்பிடிப்பு  முடிந்ததும் பத்மினியின் ஆவேசகம் அடங்கவில்லை. அவரை போர்வையால் போர்த்தி கை காலைத் தேய்த்தார்கள். டாக்டரை     அழைத்து வந்து பத்மினிக்கு ஊசி போட்டார்கள். அடிபட்ட சிவாஜி அப்பாவியா நிற்க. அடித்த பத்மினிக்கு வைத்தியம் பார்த்தார்கள்.

 பத்மினியின் உடல் நிலை காரணமாக படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெறவில்லை.

சிவாஜி கணேசன், பத்மினி வி. நாகையா எஸ்.பி. சகஸ்ரநாமம், பிரண்ட்ராமசாமி, துரைசாமி, எஸ்.ஏ. அசோகன்,  நாராயணசாமி, சந்தானம், என்.எஸ். பொன்னுத்துரை, டி.கே. ராமசாமி, எஸ். வரலட்சுமி, பேபி சரஸ்வதி, அங்கமுத்து ஆகியோர் நடித்தனர்.

கதை, வசனம் ஸ்ரீதர், பாடல்கள் பாபநாசம் சிவன், சுரபி, கே.பி. காமாட்சி, கே.எஸ். கோபால்,  கிருஷ்ணன் இசை சி.என். பாண்டுரங்கம் ஒளிப்பதிவு பி. ராமசாமி இயக்கம் சி.எச். நாராயணமூர்த்தி.
ரமணி
மித்திரன்  09/12/12

Thursday, December 13, 2012

தடம் மாறிய தமிழ் படங்கள் 43


மகளைப் போன்று பாசம் காட்டி வளர்க்கும் அப்பாவியான இளம் பெண்ணைத் தாயாக்கிய கதை தான் 1979 ஆம் ஆண்டு வெளியான நூல்வேலி.
துணை நடிகையான சியாமளாவின் மகள் சரிதா. உலகம் அறியாத அப்பாவியான வெகுளிப் பெண். இவர்களின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் குடியேறுகிறார் சரத்பாபு. அவரது மனைவி சுஜாதா எழுத்தாளர். இவர்களுக்கு தான் படப்பிடிப்புக்குச் செல்லும் போது சரத்பாவு சுஜாதா தம்பதியின் மகளுடன் விளையாடுவார் சரிதா. அப்பாவியான சரிதாவின் மீது பரிதாபப்பட்டு தன் வீட்டில் சுதந்திரமாகத் திரிவதற்கு அனுமதி வழங்குகிறார் சுஜாதா.
துணை நடிகையான சியாமளா இறந்த பின் அநாதரவாக நிற்கும் சரிதாவைத் தன் மகள் போல் வளர்க்கிறார் சுஜாதா. கணவர் சரத்பாவும் சரிதாவின் மீது பாசம் வைக்கிறார். தாய் இறந்த சோகம் தெரியாது சரிதாவின் மகளுடன் விளையாடுகிறார் வெகுளிப் பெண் சரிதா. ஒரு நாள் கொட்டும் மழையில் நனைந்த படி வீட்டிற்கு வருகிறார் சரிதா. மழையில் நனைந்த சரிதாவின் இளமை சரத்பாவுவின் மனதில் இருந்த மோகத்தீயை தீண்டி விடுகிறது. காமத்தால் நிலை தடுமாறிய சரத்பாபு சரிதா வெகுளியென்பதையும் தான் அவளை மகளைப் போல் வளர்ப்பதையும் மறந்து தன் காம வெறித்தீர்க்கிறார். இதனை அறிந்த சுஜாதா மகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
வெகுளிப் பெண்ணான சரிதா குழந்தையைப் பெற்றெடுத்து சரத்பாபுவிடமும் சுஜாதாவிடமும் ஒப்படைத்து விட்டு மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்கிறார்.
வெகுளிப் பெண்ணாக நடித்த சரிதா அற்புதமாக நடித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெறுகிறார். சுஜாதாவும் தன் பங்குக்குத் திறமையை வெளிப்படுத்தித் தனது முத்திரையைப் பதிக்கிறார். சரத்பாபு, ஆனந்த் ஆகியோரும். பாத்திரமறிந்து நடித்தனர். படிச்சவங்கல்லையா அவங்க சொன்னால் சரியாத்தான் இருக்கும் என்ற அவரின் வசனம் மிகப்பிரபலமானது.
இசை எம்.எஸ்.விஸ்வநாதன், பாடல்கள் கவியரசு கண்ணதாசன், இயக்கம் கே.பாலச்சந்தர், பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா ஆகியோர் பாடியுள்ளனர். பாலமுரளி கிருஷ்ணா பாடிய மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சியே என்ற பாடல் காலம் கடந்தும் மனதில் ரீங்காரமிடுகிறது.
ரமணி
மித்திரன்  02/12/12

Tuesday, December 11, 2012

திரைக்குவராதசங்கதி50


 தமிழ்நாட்டின்மிகச்சிறந்தஎழுத்தாளர்களில்ஒருவர்ஜெயகாந்தன்.அவருடையசிறுகதை,குறுநாவல்,நாவல்என்பனவாசகர்களிடையேபெரும்தாக்கத்தைஏற்படுத்தின.அகிலனுக்குபின்னர்சாகித்யஅகடமிவிருதுபெற்றஇரண்டாவதுதமிழ்எழுத்தாளர்.ஒருவன்நண்பர்களும்,கொம்யூனிஸ்கட்சித்தோழர்களும்,படமாக்கினார்கள்அப்படத்தைஜெயகாந்ந்தன்இயக்கினார்.வெளியாகியது.படம்படுஅடைந்தது. ஆனால்,விருதுகள் பல பெற்று சிறந்த படமென புகழப்பட்டது.
           பாகப்பிரிவினைபோன்றவெற்றிப்படங்களைதயாரித்தஜி.என்.வேலுமணிஒரேநேரத்தில்மூன்றுபடங்களைதயாரிக்கதிட்டமிட்டார்.அதில்ஒருபடம்ஹிந்திப்படம்.ஜெயகாந்தனின்யாருக்காகஅழுதான்என்றகதையையும்தயாரிப்பதற்குஜி.என்.வேலுமணிதிட்டமிட்டார்.யாருக்காகஅழுதான்என்றபடத்தை ஸ்ரீதர் இயக்கநடிகர்திலகம்கதாநாயகனாகநடிப்பார்எனஅறிவிக்கப்பட்டது.வெள்ளிவிழாஇயக்குநர்எனபுகழப்பட்டஸ்ரீதரின்இயக்கத்தில்யாருக்காகஅழுதான்வெற்றிபெறும்எனஅனைவரும் நம்பினர். "எனதுகதைகளை என்னைத்தவிரவேறுஎவரும்டைரக்ட்பண்ணிவெற்றிபெறமுடியாது எனஎழுத்தாளர்ஜெயகாந்தன்பேட்டியொன்றில்தெரிவித்திருந்தார்.ஜெயக்காந்தனின்அந்தபேட்டிஸ்ரீதரின்மனதைபாதித்தது.அதன்விளைவுயாருக்காகஅழுதான்என்றகதைபடமாக்கும்பணிகைவிடப்பட்டது
.யாருக்காகஅழுதான்என்றகதைபடமானதில்மின்னல்என்றதயாரிப்பாளருக்குகுந்தமனவருத்தத்தைகொடுத்தது.படத்தயாரிப்புபற்றிசெம்பியூμட்ஸ்என்றவிநியோகத்தருடன்படத்தைப்பற்றிக்கதைத்துக்கொண்டிருந்தபோதுயாருக்காகஅழுதான்படம்கைவிடப்பட்டதைகூறினார்.ஜெயகாந்தனால்தானேடத்தயாரிப்புநின்றுபோனது.அப்படத்தைஜெயக்காந்தனேஇயக்கினால்நன்றாகஇருக்கும்எனஅவர்கள்விரும்பினார்கள்.யாருக்காகஅழுதான்என்றதனதுகதையைஇயக்கஜெயகாந்தன்ஒப்புக்கொண்டார்.நாகேஷ்,டி.எஸ்.பாலையா,கே.ஆர்.விஜயா,சகஸ்ரநாமம்ஆகியோரின்நடிப்பில் "யாருக்காகஅழுதான்'படமாகியது. கே.விஜயன், மல்லியம்ராஜகோபால் ஆகியோரின்உதவியுடன் ஜெயகாந்தன்அப்படத்தைஇயக்கினார்.மூன்றுமாதத்தில்3லட்சம்ரூபாசெலவில்யாருக்காகழுதான்படமானது.படப்பிடிப்புமுடிந்ததும்அதனைவாங்கிவெளியிடயாரும்முன்வரவில்லை.அப்படததைதயாரித்தவர்களேதமிழகம்எங்கும்படத்தைதிரைரையிட்டனர்.நல்லகதைஎனபோற்றப்பட்டஅப்படம்படுதோல்வி அடைந்தது.
யாருக்காகஅழுதான்வெளியாகிபன்னிரμண்டுவருடங்களின்பின்னர்அலிபாபாஎன்றத்திரிகைக்குஜெயகாந்தன்வழங்கியபேட்டிஅப்படத்தைதயாரித்தவர்களுக்குஅதிர்ச்சியைக்கொடுத்தது.நண்பர்கள்படமாக்குவதற்காக தேர்ந்தெடுத்த "யாருக்காகஅழுதான்' கதைஎனக்குஅவ்வளவாகபிடிக்காதது. அதைபடிக்கும்போதுஉண்டாகும்பயனையும்உருக்கத்தையும்படத்தைபார்க்கும்போதுஏற்படுத்தாதுன்பதைநான்அறிவேன்என்றுஅப்பத்திரிகைக்குஜெயகாந்தன்கூறியிருந்தார்.உண்மையிலேயேஅந்தக்கதையைப்படிக்கும்போதுஏற்பட்டஉருக்கம்படத்தைபார்க்கும்போதுஏற்படவில்லை.திரைμப்படத்துக்கும்பொருத்தமில்லாதகதைஎனதெரிந்தும்அதனைஇயக்குவதற்குஒப்புக்கொண்டஜெகாந்தனின் மனதில் இருந்தஉண்மை 12 வருடங்களின் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
ரமணி
மித்திரன்  04/03/2007
110

Saturday, December 8, 2012

திரைக்குவராதசங்கதி 49


திரைப்படக்.கதையைத்தெரிவுசெய்துவிட்டுஅதற்குரியநடிகர்களைத்தேடுவார் க‌ள்.ஆனால்ஏ.வி.எம்நிறுவனம்தயாரித்தஅன்பேவாபடக்கதைஎம்.ஜி.ஆருக்காகவேஎழுதப்பட்டது.எம்.ஜி.ஆரின்படங்கள்வெற்றிபெறுவதால்அவரைக்கதாநாயகனாகவைத்துபடமொன்றைத்தயாரிக்கவேண்டும்எனஏ.வி.எம்.சரவணன்விரும்பினார்.இயக்குநர்ஏ.பி.திருலோகசந்தருடன்இதுபற்றிகலந்துரையாடினார்.ஏ.சி.திருலோகசந்தர் எம்.ஜி.ஆருக்காக கதை ஒன்றை தயார்செய்தார்.எம்.ஜி. ஆருக்காககதை ஒன்று தயாராக உள்ளது. அவரைவைத்துப் படமெடுக்கப் போகிறோம்என்றால்அவரதுதகப்பன்ஏ.வி.எம்.ஒப்புக்கொள்ளமாட்டார்.எம்.ஜி.ஆர்.இரட்டைவேடங்களில்நடித்தஎங்கவீட்டுப்பிள்ளைவெற்றிகரமாகஓடிக்கொண்டிருப்பதால்அவரைவைத்துபடமெடுக்கும்படிஏ.வி.எம்.மின்விநியோகஸ்தர்கள்கூறினார்கள்.இறுதியில்சரவணன்தைரியத்துடன்தகப்பனிடம்தனதுதிட்டத்தைக்கூறினார்.உடனேசம் ம‌தம் தெரிவித்துவிட்டார்.ஏ.வி.எம்..தகப்பன் சம்மதம் தெரிவித்ததும்ஏ.வி.எம். ச ர‌வணன் எம்.ஜி.ஆரின் வீட்டிற்குச் சென்றுகதைத்தார். ஏ.வி.எம். மின் படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர்.விரும்பினார்.
     அதேவேளைஆர்.எம்.வீரப்பனின்நான்ஆணையிட்டால்என்றபடத்தில்நடித்துமுடித்தபின்னர்தான்ஏ.வி.எம்.தயாரிக்கும்படத்தில்நடிப்பேன்என்றுமக்கள்திலகம்கூறினார்.1965ஆம்ஆண்டுஎங்கவீட்டுப்பிள்ளைவெளியாகிவெற்றிகரமாகஓடிக்கொண்டிருந்தது.1966பொங்கலுக்குஅன்பேவாபடத்தைவெளியிடஏ.வி.எம்.விரும்பினார்.அதற்குஆர்.எம்.வீரப்பனின்படம்தடங்கலாகஇருந்தது.ஆர்.எம்.வீரப்பனுடன்கதைத்துவிட்டுமுடிவுகூறுவதாகக்தெரிவித்தஎம்.ஜி.ஆர்.மூன்றுஇலட்சம்ரூபாதர‌வேண்டும்எனக்கேட்டார்.ஓரளவுவெற்றிபெற்றசந்தோஷத்துடன்ஏ.வி.எம்.ச ர‌வணன்தனது அலுவலகத்துக்குச் சென்றார். சிறிதுநே ர‌த்தில் ஆர்.எம்.வீர‌ப்பன்,அவரின்அலுவலகத்துக்குச்சென்றுஅன்பேவாவெளியானபின்னர்தனதுபடத்தைவெளியிடுவதாகக்கூறினார்.ஏ.வி.எம்.சரவணன்மிகவும்சந்தோசப்பட்டார்.அதேவேளை அன்பே வாவில் நடிப்பதற்கு மேலும் 25 ஆயிரம்ரூபாதரவேண்டும்எனஎம்.ஜி.ஆர்கேட்டதாகஆர்.எம்.வீரப்பன்கூறினார்.எம்.ஜி.ஆரின்கோரிக்கைஅவர்களுக்குஅதிர்ச்சியைக்கொடுத்தது.சரவணனின்தகப்பன்மனவருத்தப்பட்டார்.எம்.ஜி.ஆருக்குகதைபிடித்துவிட்டது.சிம்லாவில்கதைநடப்பதுபோலக்கதைமைக்கப்பட்டிருந்தது.ஐந்துநாட்கள்தான்சிம்லாவில்படப்பிடிப்புநடத்தினார்கள்.ஏனையகாட்சிகள்அனைத்தையும்ஊட்டியில்படமாக்கினார்கள்.சிம்லாவின்குளிரில்அனைவரும்நடுங்கிக்கொண்டிருக்கசர்வசாதா ர‌ணமாக வெறும் மேலுடன் எம்.ஜி.ஆர் காலையில்உடற்பயிற்சி செய்வார். சிம்லாவில் உள்ள இ ராணுவ முகாமுக்குச் சென்ற போது தமிழக வீ ர‌ர்கள் எம்.ஜி.ஆ ரை அடையாளம் கண்டு சந்தோஷப்பட்டார்கள். அங்கு நடந்த நிதிதி ர‌ட்டும் விழாவில் எம்.ஜி.ஆரும் ச ரோஜாதேவியும் பேசினார்கள்.அந்த நிகழ்ச்சியில் பேசிய எம்.ஜி.ஆர் இந்தநிகழ்ச்சியின்மூலம் எவ்வளவு தொகை சேர்க்கிறீர்களோ அதே தொகைøய நான் எனது தனிப்பட்ட அன்பளிப்பாக வழங்குகிறேன்என்று அறிவித்தார். அறிவித்ததுடன் நிற்காது அந்தத் தொகையை வழங்கி சிம்லா மக்கள் மனதில்இடம் பிடித்தார்.அன்பே வா படத்தில் டி.ஆர் ராமச்சந்தி ர‌னை ஒப்பந்தம்செய்வதற்குவிரும்பினார்கள்.தங்கவேலுவைஒப்பந்தம்செய்யும்படி எம்.ஜி.ஆர் ஆலோசனை கூறினார். எம்.ஜி.ஆரின் விருப்பத்துக்காகவே தங்கவேலை ஒப்பந்தம் செய்தனர்.மக்கள் திலகமும் ஏ.வி.எம் ச ர‌வணனும் மிகவும் நெருக்கமானார்கள். எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்குசில நே ர‌ம் செல்லும் ச ர‌வணன் அவ ரைக் கண்டுகதைப்பார். ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளையின்போதுமக்கள் திலகத்துடன் ஏ.வி.எம். ச ர‌வணன் கதைத்துக் கொண்டிருக்கும் போது தன்னை பார்ப்பதற்கு படப்பிடிப்பு நடக்கும்இடத்துக்கு வ ர‌ வேண்டாம் என மக்கள் திலகம்கூறினார்.மக்கள்திலகத்தின்வார்த்தையால்ஏ.வி.எம்.சர‌வணன்அதிர்ச்சியடைந்தார்.ஏ.வி.எம்.முக்கு எம்.ஜி.ஆர். ஒழுங்காக கால்ஷீட் கொடுக்கவில் லை. அதனால்தான் அவர் அடிக்கடி வந்து சந்திக்கிறார்என மற்றவர்கள் தப்பாக கதைப்பார்கள் என்னைக்காண வேண்டுமானால் வீட்டிற்கு வாருங்கள் அல்லது நீங்கள் கூறும் இடத்துக்கு நான்வருவேன் என்றார்.மற்றவர்கள் தப்பாக கதைப்பதற்கு சந்தர்ப் பம் கொடுக்காத எம்.ஜி.ஆரின் குணத்தைக்கண்டு ஏ.வி.எம்.சரவணன் வியப்படைந்தார்.
ரமணி
மித்திரன் 25/02/2007

109

Friday, December 7, 2012

தடம்மாறிய தமிழ்ப்படங்கள் 42


 மகனைப்போல் ளர்க்கும் பெண்ணைப் படுக்கை அறைக்கு அழைக்கும் ஆணைப்பற்றியவித்தியாசமான கதைக்கருவுடன் 1976 ஆம் ஆண்டு வெளியான படம் "உணர்ச்சிகள்."

   சென்னையில் உள்ள லொட்ஜ் ஒன்றில் ரூம் போயாகப்பணியாற்றுகிறார் கமல்.அந்த லொட்ஜில் பலரும் வந்து தங்கிச்செல்வார்கள். விபசாரியான ஸ்ரீ வித்யா அங்கு தங்கி இருந்தபோது பொலிஸார் சுற்றி வளைக்கின்றனர். அந்த இக்கட்டான நிலையில் ரூம் போயான கமல், ஸ்ரீ வித்யாவைக்காப்பாற்றுகிறார். பலிசிடமிருந்து தன்னைக்காப்பாற்றிய கமல் மீது ஸ்ரீ வித்யாவுக்குப்பாசம் பிறக்கிறது. கமலைத்தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று நல்ல உடைகள் வாங்கிக்கொடுத்துத்தனது மகன் போல் வளர்க்கிறார்.

   லுக்கு, ஸ்ரீ வித்யாமீது தாய்ப்பாச‌ம் இல்லை. விபச்சாரியான ஸ்ரீ  வித்யாவை அனுபவிக்கத்துடிக்கிறார். ஸ்ரீ வித்யாவைத்தேடி வீட்டுக்கு ஆண்கள் ருவார்கள். ஸ்ரீவித்யா  அவர்களுடன் செல்வார்.அப்போது லின் விரதாபம் அதிகரிக்கும். ஆசையை அடக்கமுடியாத ல் தன் மனதில் இருப்ப‌, ஸ்ரீ வித்யாவிடம் கூறி  ன் ஆசைக்கு இணங்கும் டி ற்புறுத்துகிறார்.விபச்சாரியாக இருந்தாலும் னைப்போல் ர்த்த லுடன் டுக்கையைப்பங்குபோட விரும்பாத ஸ்ரீ வித்யா,அவரை வீட்டை விட்டுத்துரத்துகிறார்.
 
  ஸ்ரீ வித்யாவின் வீட்டை விட்டு வெளியேறிய ல் ன் ஆசையைப்பூர்த்திசெய்வற்காக பெண்களுடன் தொடர்பு கொள்கிறார்.பெண்களின் தொடர்பு காரமாக லுக்குப்பாலியல் நோய் தொற்றுகிறது.காமவெறியினால் உயிரக்கொல்லும் வியாதி தொற்றியதை நினைத்து ல் துடிக்கிறார்.

  மல்ஹாசன்,ஸ்ரீ வித்யா,எல்.காஞ்சனா,மேஜர் சுந்தர்ராஜன்,வி.கோபாலகிருஷ்ணன்,எஸ்.வி.ராமதாஸ்,கோபி,சந்திரகாந்தா ஆகியோர் டித்தர்.தை,திரைக்கதை,வம்,இயக்கம் ஆர்.சி.க்தி.

  காமவெறியில் சிக்கிச்சீரழியும் பாத்திரத்தில் ல் சிறப்பாக டித்தார்.விபச்சாரியாக டித்த ஸ்ரீ வித்யா சிகர்களைக்கர்ந்தார்.னை இழந்து விர தாபத்தில் ஏங்கும் காட்சியில் எல்.காஞ்சனா ன்றாக டித்தார். ‌‌த்தின் தையும் கிளு கிளுப்பூட்டும் காட்சிகளும் சிகர்களைத்தியேட்டருக்கு இழுத்தது.

   "ராசலீலா" என்றபெயரில் ‌‌லையாளத்தில் வெளிவந்த இப்பம் 100நாட்களைக்கந்து வெற்றிபெற்றது.லையாளப்பத்திலும் லே தாநாயனாக டித்தார்.னை இழந்த பாத்திரத்தில் ஜெயசுதா டித்தார்.

ணி
மித்திரன் 25/11/12

திரைக்குவராதசங்கதி 48

ரஜினிஅண்மையில்நடித்துவெளிவந்த‌தர்மத்தின்தலைவன்,மன்னன்,குருசிஷ்யன்,சந்திர‌முகிஆகியஅனைத்தும்வெற்றிப்படங்கள்.தேவர்பிலிம்ஸ்படஅதிபர்சாண்டோசின்னப்பதேவரின்மறைவுக்குப்பின்னர்அந்தநிறுவன‌ம் பல பிர‌ச்சினைகளைச் சந்தித்தது.தேவரின் மறைவுக்குப் பின்னர் திரை உலகத்தில்இருந்துஒதுங்கிஇருந்ததேவரின்தண்டாயுதபாணிபிலிம்ஸ்மீண்டும்ஒருபடம்தயாரிக்கமுடிவுசெய்தது.கதாநாயகனாகதேவரின்மீதுமதிப்புவைத்திருக்கும்ரஜினினியைஒப்பந்தம்செய்தார்கள்.அப்படத்தின்இரண்டாவதுகதாபாத்திரத்துக்குபிர‌புவைஒப்பந்தம்செய்தனர்.பிரவுக்குஜோடியாக யாரை ஒப்பந்தம் செய்யலாம்எனயோசித்தவர்கள்புதியநடிகைஒருவரை தேடினார்கள்.த‌தெலுங்குப்படங்களில்நடித்துக்ண்டிருந்தகுஷ்புவைபிர‌புவின்ஜோடியாகஒப்பந்தம்செய்தனர்.தர்மத்தின்த‌லைவன்நடித்தபோதுகுஷ்புவுக்குஒருதமிழ்வார்த்தைகூடத்தெரியாது.பின்னர்தமிழ்நாட்டின்பெணாகவே குஷ்பு  மாறிவிட்டார்           குஷ்புவும், பிர‌புவும் அதன்பின்னர் பல படங்களில் ஜோடியாக நடித்து சிறந்த ஜோடி எனப் பெயர் பெற்றனர். இருவரின்வாழ்க்கையிலும் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. பிர‌பு குஷ்பு விவகார‌ம் கிசு கிசுவையும் தாண்டி திருமணம் வரைசென்றது.
ர‌ஜினிக்குபெயரைக்கொடுத்தபடங்களில்ஒன்று16வயதினிலே.சப்பாணிகமல்,மயிலுஸ்ரீதேவியுடன்,பர‌ட்டைர‌ஜினிஎன்றுவிமர்சகர்கள்புகழ்ந்துஎழுதினார்கள்.அப்படத்துக்குப்பின்னர்11வருடங்கள்கழித்துபார‌திராஜாவின்கொடிபறக்குதுபடத்தில்ர‌ஜினிநடித்தார்.அப்படத்தில்தான்இயக்குநர்மணிவண்ணன்முதல்முதலாகவில்லனாகநடித்தார்.ர‌ஜினிபடமும்இல்லாமல்பார‌திராஜாபடமுமில்லாதுவெளியானகொடிபறக்குது100நாட்கள்ஓடினாலும்வெற்றி பெறவில்லை.
         ர‌ஜினியும் பிர‌புவும் முதன்முதலில் நடித்த திரைப்படம்குருசிஷ்யன். இப்படத்தின்மூலம்தான்நடிகைகௌதமிதமிழ்ப்படத்தில்அறிமுகமானார்.பஞ்சுஅருணாசலத்துக்காகபடமொன்றுநடித்துக்கொடுக்கர‌ஜினிவிரும்பினார்.அதற்காகஸ்.பி.முத்துராமனுடன்ஆலோசனைசெய்தார்.இர‌ண்டுகதாநாயகன்உள்ளநகைச்சுவைகதைஉள்ளது.நீங்களும்பிர‌புவும்நடித்தால்நன்றாகஇருக்கும்எனஸ்.பி.முத்துμõமன்கூறினார்.ர‌ஜினியும்அதற்குஇணங்கினார்.25நாட்களில்படத்தைமுடித்துவிடுவேன்என்றார்எஸ்.பி.முத்துராமன்ஒருபடம்முடிவதற்கு25நாட்கள்தேவைஎனஎஸ்.பி.முத்துராமனின்திட்டத்தைர‌ஜினிமுதலில்நம்பவில்லை.சென்னையில்படப்பிடிப்புநடந்தால்தாமதமாகும் என்பதால்மைசூரில் படப்பிடிப்பு நடைபெற்றது.திட்டமிட்டதற்கு மாறாக23நாட்களில்படப்பிடிப்புடிந்தது.மேலதிகமானஇர‌ண்டுநாட்களும்படப்பிடிப்புக்குழுவினருடன்மைசூரில்தங்கிஇருந்தார்.
      ர‌ஜினிகாந்த்.ஏ.வி.எம்.தயாரிப்பில்வெளியானவெற்றிப்படம்மனிதன்.அப்படத்தின்கிளைமாக்ஸ்காட்சிகள்அனைத்தும்முடிந்தபின்னர்தயாரிப்பாளர்கள்படத்தைப்பார்த்தனர்.குகனுக்குகிளைமாக்ஸ்பிடிக்கவில்லை.தான்திர்பார்த்ததுபோன்றுகிளைமாக்ஸ்இல்லைஎன்றாலும்படம்வெளிவர‌ட்டும்என்றார்.மனிதன்வெளியாகும்நாள்அறிவிக்கப்பட்டுவிட்டது.நிலைமையைர‌ஜினியிடம்எடுத்துக்கூறியஇயக்குநர்எஸ்.பி.முத்துராமன்ஞாயிற்றுக்கிழமைஒருநாள்கால்ஷீட்தரும்டிர‌ஜினியிடம்வேண்கோள்விடுத்தார்.தயாரிப்பாளர்களுக்குத்தெரியாமல்புதியகிளைமாக்ஸ்காட்சிபடமாக்கப்பட்டது.புதியகிளைமாக்ஸைப்போட்டுக்காட்டினார்.எஸ்.பி.முத்துராமன்.தயாரிப்பாளருக்குபிடித்துவிட்டது.மிகவும்அருமையாகஇருக்கிறதெனப்பாராட்டினார்.ஏ.வி.எம்.மின்விருப்பத்துக்காகர‌ஜினிஉட்படஅனைவரும்ஒருநாள்நடித்தஉண்மையைஇயக்குனர்கூறினார்.தயாரிப்பாளர்அனைருடனும்தொலைபேசியில்தொடர்புகொண்டு நன்றி கூறினார்தயாரிப்பாளர் குகன்.
ரமணி
மித்திரன்18/02/2007
108

மனம் மாறும் விஜயகாந்த் காத்திருக்கும் கருணாநிதி


இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைக் குறி வைத்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும்  காய்நகர்த்த தொடங்கிவிட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன தேர்தலைச் சந்திப்பதற்காக குழு அமைத்துள்ளன.  காங்கிரஸ் தலைமையும் குழு அமைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை எடுத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி  சேர்வீர்களா என்று நிருபர்கள் விஜயகாந்தைக் கேட்டபோது  சிரித்துக் கொண்டேசாதக சமிக்ஞை காட்டியுள்ளார்?காட்டியுள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றை ஒன்று விட்டுப் பிரிய முடியாத நிலையில் உள்ளன.  காங்கிரஸுடனான  தொடர்பை விடுமாறு திராவிட முனனேற்றக் கழகத்தில்  உள்ள சிலர்  நெருக்கடி கொடுக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை  கை விடும்படி காங்கிரஸ் கட்சியிலுள்ள சிலர் வலியுறுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சியை மிரட்டும்  வகையில் பேசி எச்சரிப்பதுபோல்  அறிக்கை விடும் கருணாநிதி அந்தச் செய்தி மை அழியுமுன்பே மறுப்புத்தெரிவித்துவிடுவார். காங்கிரஸ்  கட்சியைக் கருணாநிதி  சாடும்போது  புகழகாங்கிதமடையும் தொண்டர்கள்  மறுநாள் கருணாநிதியின் குத்துக் கரணத்தைக் கண்டு நொந்து போகின்றனர்.
தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களின் போது கூட்டணி இல்லாமல் வெற்றிபெறுவதற்கு  எந்தக் கட்சியாலும் முடியாது. ஆகையினால் பலமான கூட்டணியை  அமைப்பதற்கு பிரதான கட்சிகள்  முயற்சி செய்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தமிழகத்தில் அதிகூடிய வாக்கு வங்கி உள்ளது. பலமான கூட்டணி அமைத்தால் இவைகளால்  பிரமாண்டமான வெற்றியைப் பெற முடியும். ஆகையினால் கூட்டணிக்கான முன் முயற்சிகளில் இக்கட்சிகள் முன்னெடுப்பை தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக  திராவிட முன்னேற்றக் கழகம் அவ்வப்போது சில கருத்துக்களைக் கூறி வந்தாலும்  கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்குத் தயக்கம் காட்டி வருகின்றது. காங்கிரஸுக்கு மாற்றீடாக  மத்தியில் அரசமைக்கக் கூடிய பலம் பொருந்திய கட்சி இல்லை என்பதே  திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபிப்பிராயம்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணிக்குள் விஜயகாந்த்தும் சேர்ந்து விட்டால் ஜெயலலிதாவின்  பாடு திண்டாட்டமாக இருக்கும். 2ஜி ஸ்பெக்ரம் பிரச்சினையே திராவிட முன்னேற்றக் கழகத்தை  மண் கௌவச் செய்தது. ஸ்பெக்டரம் விவகாரத்தின்  சூடு  தற்போது குறைந்துள்ளதாக ஸ்பெக்ரம்ஊழலை வைத்து இனிமேல் அரசியல் செய்ய முடியாது என்பதனால்  திராவிட  முன்னேற்றக் கழகம் கொஞ்சம் தெம்பாக  உள்ளது. இந்திய நாடாளுமன்ற லோக் சபாத் தேர்தல்  அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.  ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி காலியாகவுள்ளது.  நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் தெரிவு செய்யும் பலம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம் உள்ளன. எஞ்சிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சிகளின்  கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

 மைத்துனன் சதீஷை  நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகுபார்த்த  ஆசைப்பட்ட விஜயக்காந்தின் எண்ணத்தை ஜெயலலிதா தவிடு பொடியாக்கியுள்ளார். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கப் போகும்   கனிமொழியை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பக்கூடிய பலம் கருணாநிதிக்கு இல்லை. விஜயகாந்த், ,கருணாநிதி, காங்கிரஸ் இணைந்தாலும் இரண்டு நாடாளுமன்ற  உறுப்பினர்களை பெற முடியாது. இடதுசாரிகளும்  ஆதரவளித்தால் தான் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற முடியும். ஆகையினால் மேல் சபை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு புதிய  கூட்டணியும் பரிணமிக்கும் வாய்ப்பு உள்ளது. 
வைகோ,  டாக்டர் ராமதாஸ் ஆகிய இருவரும் தேர்தல் கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தார்கள்.  வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் வாக்கு வங்கி ஒரு காலத்தில் இவர்கள் இருவரிடமும் இருந்தது.  இன்று தேடுவாரின்றி இருவரும் நடுத்தெருவில்  அநாதையாக  நிற்கின்றனர்.

 யாருடனும் கூட்டணி இல்லை என்று விஜயகாந்த் கூறியதை மனப் பாடமாக்கி ஒப்பிக்கிறார் ராமதாஸ்.  யாருடன் கூட்டணி சேர்ந்தால்  ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் கணக்கு போடும் வேளையில்  பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தை ஆட்சி  செய்யும் என்ற கனவில் மிதக்கிறார் டாக்டர் ராமதாஸ்.  தனது அரசியல் சுயநலனுக்காக தமிழகத்தில் சாதிக் கலவரத்தை ராமதாஸ் தூண்டி விடுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் குற்றம் சுமத்துகின்றனர். 

வன்னியர் என்ற சாதி அடையாளத்துடன் அரசியலில்  நுழைந்த ராமதாஸ் தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக சாதி  அரசியலைக்  கையில் ஏடுத்துள்ளார். சாதி அரசியல்  ராமதாஸைக் கைவிட்டு  விட்டது என்றாலும் சாதியை கைவிடமாட்டேன் என்று கங்கணம் கட்டியுள்ளார் ராமதாஸ். கட்சியின் நலனைப் புறந்தள்ளிவிட்டு மகனை முன்னிறுத்தி  அரசியல் வியாபாரம்  செய்த ராமதாஸை  தொண்டர்கள் கைவிட்டு விட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றை விட அதிக வாக்கு வங்கி தனக்கு இருப்பதாகக் கருதுகிறார் டாக்டர் ராமதாஸ். 

மாநிலத்தில் ஆட்சியை இழந்தாலும் மத்திய அரசில் ஆட்சியில் பங்குபற்ற வேண்டும் என்றே திராவிட‌ முன்னேற்றக் கழகம் கருதுகிறது. மத்திய அரசைத் தக்கவைக்க வேண்டும் என்பதில்  குறியாக உள்ளது. காங்கிரஸ் தமிழக சட்ட சபையில்  அதிக உறுப்பினர்களைப் பெற்றது போல்  நாடாளுமன்றத்திலும் அதிக  ஆசனங்களைப் பெற வேண்டும் என்றும்  கருதுகிறார் விஜயகாந்த். ஆகையினால்  மேல் சபை நாடாளுமன்றத் தேர்தலின் போது புதிய கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இந்தக் கூட்டணியால் ஜெயலலிதாவுக்கு  இப்போது  ஆபத்து எதுவும் ஏற்படாது நாடாளுமன்றத் தேர்தலில்  பலத்த சவாலைச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் உண்டாகும்.
 
திராவிட முன்னேற்றக் கழகத்துடன்  கூட்டணி என்ற சாதக சமிக்ஞையினால் கட்சியைப் பாதுகாத்துள்ளார்  விஜயகாந்த்.  ஜெயலலிதாவுடன் ஐக்கியமாகக் காத்திருக்கும்  விஜயகாந்தின் கட்சியை சேர்ந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தமது முடிவைப் பரிசீலனை செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மெட்ரோநியூஸ் 07/12/2012