Saturday, September 20, 2014

தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் தீர்ப்பு

பெங்களூர் சிறப்புநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெறும் வருமானத்துகு அதிகமாகச் சொத்துச்சேர்த்த வழக்கின் தீர்ப்பு  ஜெயலலிதாவின் தலைவிதியை மட்டுமல்லாது தமிழகத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகிறது. ஜெயலலிதா,அவரின் உடன் பிறவாசகோதரி சசிகலா, இளவரசி,ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகர் ஆகியோருக்கு எதிராக  1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி  சுப்பிரமணியன் சுவாமியால் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 18 வருடங்களின் பின்னர் அறிவிக்கப்படப்போகிறது.

ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி தெரிவித்தால் ஜெயலலிதாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் லைமைக்கு போட்டி ஏற்படும். அவர் நிரப‌பாராதிஎவிடுவிக்கப்பட்டால் திராவிடமுன்னேற்றக் த்துக்கு பாரியசிக்கல்நிலை உண்டாகும்.
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு எப்படி இருந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தனக்குச் சார்பாகப் பிரசாரத்தை ஆரம்பித்துவிடும். குற்றவாளி எனத்தீர்ப்பளிக்கப்பட்டால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசியல் பழிவாங்கல் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படும். நிரபராதி என்றால் வெற்றிக்கொண்டாட்டம் விண்ணைத் தொட்டுவிடும்.ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கு சுப்பிரமணியன் சுவாமியால் தாக்கல்செய்யப்பட்டதென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொ ண்டர்களுக்குத் தெரியாது.


 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முலமைச்சராக ஜெயலலிதா வீற்றிருந்தபோது வருமானத்துக்கு அதிக மாக சொத்துச் சேர்த்ததாக சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்தார் . அந்தமனு விஸ்வரூபமெடுத்து மாநிலம்தாண்டிய வழக்காக மாறியது. முதமைச்சராகஇருந்தஜெயலிதா மாதம் ஒரு ரூபா ம்பம் பெற்றார்.1991 ஆம் ஆண்டு 2 கோடியே  ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபா சொத்து இருந்ததாகதெரிவித்தார். 1996 ஆம் ஆண்டு அவருடையசொத்தின் திப்பு 66 கோடியாகஅதிகரித்தது. இன்று அச்சொத்தின் திப்பு 2847 கோடி ரூபா எனதிப்பிடப்பட்டுள்ளது




உடன்பிறவாச் சகோதரி சசிகலா அவரது உறவினர் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் பலமடங்கு அதிகரித்தனஜெயலலிதாவால் வளர்ப்பு மகனாக சுவீகரிக்கப்பட்ட சுதாகரனுக்கு 100 கோடி ரூபா செலவில் திருமணம் நடைபெற்றது. இவை எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவில் குறிப்பிடப்பட்டன.  18வருடகால இடைவெளியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு ஐந்துதேர்தல்கள் நடைபெற்றுள்ளன.தமிழக சட்டசபை மூன்று தேர்தல்களைச் சந்தித்த‌து. வலுவான‌ ஆதாரங்களுடன் ஜெயலலிதாவுக்கு எதிராக மனுச்செய்த சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார்.அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது ஜெயலலிதாவின் கொள்கை.

  தமிழகத்திலும் பெங்களூரிலும் நடைபெற்ற இந்த வழக்கை தாமதப்படுத்துவதிலேயே எதிரிகள் முனைப்பாக இருந்தனர். நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கடுப்படைந்தனர். நீதிபதிகள்எதிரிகளை டுமையாகஎச்சரித்தர். பெங்களூர் சிறப்புநீதி ன்றத்தில் நான்கு நீதிபதிகள் மாறிவிட்டர். அரப்பு க்கறிஞர் வெறுப்படைந்து வெளியேறிவிட்டார். உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் ஆகியற்றின் நீதிபதிகள் மாறிவிட்டர்க்கிலே ம்பந்தப்பட்டஅதிகாரிகள் ஓய்வுபெற்றுவிட்டர். க்கின்தீர்ப்பு வெளியாவற்கு  இப்போதுதான் நாள்குறிக்கப்பட்டுவிட்டது.

இந்தநிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெறும் வழக்கில்  அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.1991 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டுவரை வருமானவரி தாக்கல் செய்யாத வழக்கில் சமாதானமாகப்போக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது   

ஜெயலலிதாவின் ஆதரவாளர்களும் எதிரிகளும் தீர்ப்பின் நாளை  திகிலுடன் எதிர்பார்த்துள்ளனர். நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் பதவி பறிக்கப்படும் சட்டம் அமுலில் உள்ளது.ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் அவரது பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டுவிடும். இது ஜெயலலிதாவுக்கு மட்டுமல்லாது தமிழகத்துக்கே அவமானமாகும். குற்றவளியாக அறிவிக்கப்பட்டதால் லல்லு பிரசாத் உட்பட பல அரசியல் தலைவர்கள் பதவி இழந்தனர்.2001  ஆம் ஆண்டு பிளசன் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டபோது பன்னீர்ச்செல்வத்தை முதலமைச்சராக்கினார்.மேன் முறையீடு செய்தபின்னர் ஜெயலலிதா முதல்வரானார். இப்போதைய சட்டத்தால் அப்படிச்செய்யமுடியாது. மேன்முறையீடு செய்தாலும்  நிரபராதி என தீர்ப்பு வழங்கப்படும் வரை பதவி ஏற்கமுடியாது. 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா  குற்றவாளியாகதீர்ப்பளிக்கப்பட்டபின்னர் மிழமே ற்றி எரிந்தது.ர்மபுரியில் ஸ்ஸுடன் சேர்த்து மூன்று மாணவிகள் கொளுத்தப்பட்டர்.சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்கு மிக பெரிய அளவில் மக்கள் வந்து செல்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, குவாரி முறைகேடு வழக்குக்காக வந்தபோது பத்திரிகையாளர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டதால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டது. 150 பேர் மீது வழக்கு போட்டு சி.பி. விசாரித்து வருகிறது. என்றும் ஜெயலலிதா நீதிபதிக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.என்றும் ஜெயலலிதா நீதிபதிக்கு சுட்டிக்காட்டி உள்ளார்

20 ஆம்திகதியும் நீதிமன்றமும் ராசியானது இல்லை என ஜெயலலிதா நினைக்கிறார்.ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக.நீதிமன்றத்தைமாற்ற நீதிபதி ம்மதம் தெரிவித்து 27 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 27 ஜெயலலிதாவுக்கு ராசியான இலக்கம். தீர்ப்பு வழங்கப்படும் நாளன்று  எதிரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 தீர்ப்பு வழங்கப்படும் நாள் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களுக்கும் எதிரிகளுக்கும் மிகமுக்கியமான நாளாக அமையப்போகிறது.முதலமைச்சர் கனவில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர்கள் சிலர் மிதக்கின்றனர். ஜெயலலிதா விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் விருப்பம்.


Thursday, September 11, 2014

நான் ரசித்த பாடல்


நான்  ரசித்த‌  பாடல்


படம்; பாரதி கண்ணம்மா
பாடல்;பூங்காற்றே.....
பாடியவர்;கே.ஜே.ஜேசுதாஸ்
இசை;தேவா



காதலர்கள் இறந்து போகலாம் காதல் என்றும் இறந்து போவதில்லை.பூமி சுற்றும் வரை, சூரிய சந்திரன் காயும் வரை காதல் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும். சாதி, மதம்,பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்கள் காதலர்களின் உடலைத்தான் பிரிப்பார்கள். ஆனால், அவர்களின் காதலை பிரிக்க முடியாது. அழிக்கவும் முடியாது.

பூங்காற்றே..பூங்காற்றே பூவிடம் நீ செல்லு.. 
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு 
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது 
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது 

சாதி,ம்,ம் இவை எவையும் நிஜக்காதலுக்குத்தெரியாது.விழியில் விழுந்து இதம் புகுந்து இரு ம் இணைவதே காதல்.இங்கே ஏழைக்காதன்தன்காதலிக்கு பூங்காற்றுமூலமாகத்தூது விடுகிறான். சாதி,தம்பார்க்காமல் இணந்தகாதர்கள் மாண்டுபோய்விட்டர். அதற்குச்சாட்சி ல்லறைகள். ஆனாலும், காதல் வாழ்ந்துகொண்டேஇருக்கிறது. மனச்சாட்சி  இல்லாதனிதர்களின் த்தியில் என்மீது காதல் கொண்டு ங்கித் விக்கிறாயே நீ ங்கினால் நான் தாங்குவேனோ?


வேரும் கோவில் இங்கே ஏன்மா விளக்கேற்றினாய் 
விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய் 
விளையாத மண்ணில் ஏன்மா விதை தூவினாய் 
வெயில் கால கானல் நீரில் வலை வீசினாய் 
அறியாமல் பிழை செய்தாய் 
மணலாலே சிலை செய்தாய் 
அடி பாரதி கண்ணம்மா 
மனம் கலங்குவதேனம்மா
(பூங்காற்றே.....


ஏழை எனக்கும் உனக்கும் ஒத்துப்போகுமா? அப்படி நாம் சேர்ந்தாலும் மூடனிதர்கள் ம்மைச்சேரவிடுவார்களா? சாமியே இல்லாதஆலத்தில் விளக்கேற்றினாய்.எப்படியம்மா சாமி ம்  ரும்.பூங்கொடியே நீ சிலையை உருவாக்கி ம் கேட்கநினைக்கிறாய். நீ ணலால் அல்லவா சிலை செய்யநினைக்கிறாய்.



வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம் 
வலையாடும் கைகள் தொட்டு விளையாடலாம் 
இடைவேளை போலே இந்த பிரிவாகலாம் 
இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம் 
இளம் பூவே வருந்தாதே 
உலகம்தான் திருந்தாதே 
அடி பாரதி கண்ணம்மா 
நீ பாரத பெண்ணம்மா....
இது பாழ் பட்ட மண்ணம்மா

(பூங்காற்றே.....)


இந்த ஜென்மத்தில் எமக்கு காதல் வேண்டாம்  .அடுத்தஜென்மத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், உன் மீது உள்ள நிஜமான காதலால் சொல்கிறேன். அடுத்த ஜென்மத்தில் நீயும் நானும் காதலித்து
அன்பால் வென்று ஒன்று சேர்ந்து வாழ்வோம். அப்போது எமது உண்மைக்காதலை உலகுக்கு உணர்துவோம். இப்போது எமக்கு காதல் வேண்டாம்.


இந்த உலகம் திருந்தாது கண்மணியே. நீ பாரதி கண்ட புதுமைப்பெண்.

ஞா.கவிதா,நெல்லியடி


மெட்ரோ நியூஸ் 04/08/2004

Friday, August 1, 2014

கும்பலாக எரிந்த குழந்தைகள்

உலகத்தையே ஒரு கணம் உறைய வைத் திருக்கிறது கும்பகோணக் கொடூரம். உலகின் நாளைய தலைவர்கள்,சிற்பிகள் என வர்ணிக்கப்பட்ட 95 பிஞ்சுகள் தீயின் அகோரபசிக்கு இரையாகியுள்ளனர். உதவிக்குச்சென்றவர்கள் தீயின் அகோரத்தைத் தாண்டமுடியாது எரியும் நெருப்பில் பொசுங்கும் மொட்டுக்களைப் பார்த்துத் துடித்தனர்.

மாணவர்களை கண்ணின்மணி போன்று பாதுகாக்க வேண்டிய ஆசிரியர்கள் தமது உயிர் தப்பினால் போதுமென்று ஓடித்தப்பி விட்டனர். எரியும் நெருப்பில் சிக்கித்தவித்த பிஞ்சுகளை காப்பாற்றச்சென்ற பலர் தீக்காயங்களுக்குள்ளானார்கள். ஒருவர் மரணமானார்.

ஆஸ்திக்கும் ஆசைக்கும் பெற்றெடுத்த பிள்ளைகளைக் கரிக்கட்டையாகப் பார்த்த துர்ப்பாக்கியசாலிகள் சித்தப்பிரமை பிடித்ததுபோல் கதறி அழுதனர்இந்திய மக்கள் தொகையைக்குறைப்பதற்காக நாமிருவர் நமக்கிருவர் என்ற தாரக மந்திரத்தால் கட்டுண்டு இரண்டு பிள்ளைகளை மட்டுமே பெற்றெடுத்த தாய் ஒருவர் இரண்டு பிள்ளைகளையும் தீயில் பறிகொடுத்து பரிதவிக்கிறார்.

என் சிதைக்குத்தீவைப்பான் மகன் என நினைத்திருந்த தகப்பன் தீயில் கருகிய தன் பிள்ளையைத்தூக்கி உயிர்ப் பிச்சைகேட்டு வைத்தியசாலைக்கு ஓடிய காட்சி, பார்த்தவர்கள் மனதை உருகச்செய்தது.

வாழைஇலை குவிந்திருந்தால் அங்கே  அன்னதானம் நடைபெறுகிறது என்ற எண்ணமே ஏற்படும்ஆனால் தீயில் பொசுங்கிய பிஞ்சுகளை தூக்கிச்செல்வதற்காக கும்பகோணபாடசாலையிலும் வைத்தியசாலைகளிலும் வாழைஇலைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தின் ஏழைக்குழந்தைகளை பாடசாலைக்கு வரவழைப்பதில் சத்துணவுத்திட்டம் மிகமுக்கிய பங்காற்றுகிறது. மாணவர்களின் பசியைப்போக்குவதற்கு உணவு தயாரிப்பதற்ற்கு கொளுத்தப்பட்ட தீயே மாணவர்களை இரையாக்கியுள்ளது.

தமிழகத்தில் அரசாங்கப்பாடசாலைகள், அரச உதவி பெறும் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் என்பன புற்றீசல்போல் தோன்றி போட்டியிட்டு மாணவர்களைக் கவர்ந்திழுக்கின்றன.

ஆங்கிலமோகம்  தமிழகத்தை ஆட்டிப்படைப்பதனால் தனது பிள்ளை ஆங்கிலக்கல்விபெற வேண்டும்  என்ற துடிப்பு பெற்றோர் மத்தியில் காணப்படுகின்றது. இந்த ஆங்கில மோகமே ஆரம்ப வகுப்பு சிறார்களின் உயிரைக்குடித்தது
பாடசாலைக் கட்டடம் கட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடமும் அரசபொறியியலாளர்களிடமும் வரை படம் கொடுத்து அனுமதிபெறவேண்டும். வகுப்பறைகள் தரையில் அமையவேண்டும். 40 அடி நீளமான வகுப்பறையில் நான்கு யன்னல்கள் இருக்கவேண்டும். யன்னலில் இரும்பு வலைகள், கிரில் என்பன இருக்கக்கூடாது.

பாடசாலை ஆரம்பிக்க மூன்று ஏக்கர் நிலம் இருக்கவேண்டும் இருபாலர் பாடசாலை என்றால்  ஐந்து ஏக்கர் நிலத்தில் அமைய வேண்டும். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கட்டட ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று பல விதி முறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் கட்டுப்பட்ட பாடசாலைகள் சில இடங்களில் அமைவதில்லை. ஒருபாடசாலை எந்தவிதமான குற்றச்சாட்டுமின்றி சிலகாலம் இயங்கி விட்டால்  நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டுவிடும்.


கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உயர் நிலைப்பள்ளி மத்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. தமிழக ஆளும் கட்சி உறுப்பினர் சிவசாமி இப்பாடசாலையைத்திறந்து வைத்தார்.  

பாடசாலையின் மொட்டை மாடியில் கீற்ற்றுக்கொட்டகை அமைக்கப்பட்டு ஆரம்ப வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். மிகவும் குறுகலான ஒரேஒரு மாடிப்படியும் அவசரத்துக்கு வெளியேறக்கூடிய வசதியும் இல்லாமையே உயிரிழப்புக்கு முக்கிய காரனம்.தமிழ் மூல மாணவர்களின் தொகை குறைந்திருந்ததனால் அதிகாரிகளுக்குக் கணக்குக்காட்ட மேல் மாடிக்கு ஆசிரியர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட ஆங்கில மொழிமூல மாணவர்களும் தீயில் பொசுங்கி மரணமானார்கள்.



மாணவர்களின் மரணத்துக்குரிய முழுப்பொறுப்பும் ஆசிரியர்களையேசாரும் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வருகிறது. தீ பரவ ஆரம்பித்ததும் யாரும் அசைய வேண்டாம் தீ இங்கே வராது என் கூறிவிட்டு  ஆசிரியர்கள் கீழேசென்றுவிட்டனர். ஆசிரியர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருந்த இளம் பிஞ்சுகளை தீ தனது கோரப்பசிக்கு இரையாக்கி யுள்ளது.

தேர்தல் திருவிழா முடிந்து ஓய்வாக இருந்த வேளையில் கும்பகோணச்சம்பவம் அரசியல்வாதிகளை மீண்டும் உயிர் பெற வைத்துள்ளது. தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும், டில்லித்தலைவர்களும்  கும்பகோணத்தை நோக்கிப் படை எடுக்கத் தொடங்கி விட்டனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா,சோனியா,ராகுல் எதிர்க்கட்சித்தலைவர் எல்.கே. அத்வானி பாரதிய ஜனதாக் கட்சித்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் கும்பகோணத்துக்குச்சென்று து அஞ்சலியைச் செலுத்தியதுடன் உதவி நிதிகளையும் அள்ளி ங்கி உள்ளர்.

கும்பகோணஅனர்த்தம் அரசியலாகமாறிக்கொண்டிருக்கிறது. மிழஅரசின் அதிரடி டிக்கையினால் சுமார் 200 பாடசாலைகள் மூடப்பட்டு விட்ட‌. இதே போன்று சுமார் 4500 பாடசாலைகள்  இருப்பதாகப் த்திரிகைத் ல்கள் தெரிவிக்கின்ற‌. ஆனால், இந்தத்த‌‌டை எத்தனை நாளைக்கு நீடிக்கும்  என்பது ற்றியல்கள் எதுவும் தெரியவில்லை.

இந்தியாவில் தீராதபெரும் பிரச்சினைகளில் தீயும் ஒன்று. வீட்டுக்கு ரும்  ருமள்களின் பிரச்சினைகளைத்தீர்ப்பற்கு காஸ்சிலிண்டர் அல்லது ண்ணெண்ணெய் அடுப்பு வெடிப்பது மை.

அரசியல் லைவரின் றைவைத்தாங்கமுடியது அல்லது அவருக்கு எதிரான‌‌ ஒரு ம்பத்தின் போது தொண்டர்கள் தீக்குளிப்பார்கள். தீக்குளித்ததொண்டனின் குடும்பத்தையோ அப்படிப்பட்டர்களையோ ட்சியிலிருந்து நீக்குவது கிடையாது. மாறாகஅவர்களை ஊக்குவிக்கநிதி ங்குவார்கள்.

க்குப்பிடிக்காதஅரசியல் லைவரின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியும் ‌‌மிழத்தில்  அடிக்கடி நடைபெறுகிறது. இது ற்போது சினிமா சிகர்களிடமும் விவிட்டது.

1979 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள  கீற்றுக்கொட்டகைச் சினிமாத் தியேட்டரில் ம் ஓடிக்கொண்டிருந்தபோது தீப்பிடித்தனால் 150 பேர் மானார்கள் 115 பேர் எரிகாயமடைந்தர். 2002 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி  ஏர்வாடியில் ம் பாதிக்கப்பட்டர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையம் எரிந்தனால்  ம் பாதிக்கப்பட்ட‌‌ 28 நோயாளிகள் எரிந்து சாம்பலானார்கள்.கீற்றுக்கொட்டகையில் கைவிலங்கிடப்பட்டநிலையில் மான‌ 28 பேரில் 11 பெண்களும் அடங்குவர்.






ஆத்தூரில் 2002 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 11 ஆம் திகதி ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர் பலியானதுடன் 224 பேர் காயமடைந்தனர். கோவில்பட்டி தீப்பெட்டித்தொழிற்சாலையில்  2002 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 20 ஆம் திகதி ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் லியாகி 55 பேர் காயடைந்தர்.

விழுப்புரத்தில் அனுமதிபெறாது இயங்கியட்டாசு யாரிக்கும் நிலையத்தில் தீ  பிடித்தபோது 10 பேர் லியானார்கள். ஸ்ரீரங்கத்தில் 2003 ஆம் ஆண்டுஜூன் மாதம் 25 ஆம் திகதி ந்ததிருமவைபத்தில் ஏற்பட்டதீவிபத்து மிகவும் கொடூரமானது. மொட்டை மாடியில் அமைக்கப்பட்டற்காலிககொட்டகை எரிந்ததில் ன் உட்ப‌ 59 பேர் லியானார்கள். இந்தத்தீ விபத்தில் அநியாயமாக‌ 20 பெண்களும் 11 குழந்தைகளும் லியானார்கள்.

தீவிபத்து டைபெற்றம்பங்கள் அனைத்திலும் ஒரேவிதமானபாதுகாப்பு குறைபாடுகளே இருந்த‌. அரசாங்கத்தின் ட்டதிட்டங்களுக்குக் ட்டுப்படாதபாடச்டாலைகள் உள்ள‌. அரசுகள் மாறும்போது அதற்கேற்றவாறு  தாமும் மாறி க்குரியஅங்கீகாரத்திப்பெற்று ருகின்ற‌.

மிழத்தையும்தாண்டி டில்லியின் ண்களையும் திறந்து விட்டஇந்தச்சம்பவத்தின் மூலம் இந்தியாவில் உள்ளகீற்றுக்கொட்டகைகளுக்கு முடிவு ட்டப்பட  வேண்டும். இல்லையேல் மிழகத்தைப்போன்று அவத்தை
 எதிர் நோக்கவேண்டிவரும்.

பூகம்பம் ,சூறாவளி,ல்கொந்த‌‌ளிப்பு,யில்விபத்து,ங்கவாதம் போன்றவை  அவ்வப்போது கொத்துக்கொத்தாகஉயிர்களைப்பறிகின்ற‌.இவற்றுக்கிடையில் குஜராத்தில் கோத்ரா யில் எரிப்பு, ஜெயலிதா குற்றவாளி எனதீர்ப்பளிக்கப்பட்டபோது ர்மபுரியில் ஸ்ஸினுள் மூன்று மாணவிகள் எரித்துக்கொல்லப்பட்டமை  போன்றற்றினாலும் அநியாயமாகஉயிர்கள் றிக்கப்படுகின்ற‌.


ணி
மெட்ரோநியூஸ் 23/06/2004