Thursday, April 6, 2023

ஐபிஎல் இல் 200+ சென்னை சாதனை

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2008 ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து   கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மொத்தமாக 22 முறை ஒரு இன்னிங்ஸில் 200 மற்றும் அதற்கு மேற்பட்ட ஓட்டங்கள் குவிக்கப்பட்டது. இது 2008 ம் ஆண்டுக்கு பிறகு எந்த சீசனிலும் இத்தனை முறை பதிவாகவில்லை.

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 200 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. லக்னோ உடனான போட்டியில் 217 ஈட்டங்கள் எடுத்த  எடுத்த நிலையில் இதுவரை 24 முறை 200 ஓட்டங்களுக்கு மேல் சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக 200 ஓட்டங்களுக்கு  மேல் 22 முறை குவித்து பெங்களூரு அணி 2வது இடத்தில் உள்ளது. அதிக முறை 200  ஓட்டங்கள் எடுத்த அணிகள்

  சென்னை சூப்பர் கிங்ஸ் 24

  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 22

  பஞ்சாப் கிங்ஸ் 17

  மும்பை இந்தியன்ஸ் 16

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 15

சென்னை அணியின் அதிகபட்ச ரன்கள் பட்டியல்:

246 -ராஜஸ்தான்  (2010)

கடந்த 2010 ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 246ஒட்டங்கள் குவித்தது. இதுவே இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது.

240 -  பஞ்சாப் (2008)

2008 தொடக்க சீசனில் சென்னை அணி கிங்ஸ் xஇ பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஏப்ரல் 19ம் திகதி மோதியது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 240 ஓட்டங்கள்  குவித்தது. இது சென்னை அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

 

223  - ஹைதரபாத்  (2013)

கடந்த 2013ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மே 8ம் திகதி சென்னை அணி விளையாடியது. இந்த போட்டியில் சென்னை அணி   3 விக்கெட் இழப்பிற்கு 223 ஓட்டங்கள் குவித்தது. இது சென்னை அணியின் மூன்றாவது அதிகபட்ச   எண்ணிக்கை ஆகும்.

222 - டெல்லி (2012)

சென்னை அணியின் நான்காவது அதிகபட்ச ஸ்கோர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2012ம் ஆண்டு பதிவானது. 25 ம் திகதி மே மாதம் நடந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்கள் குவித்தது.

220-  கொல்கத்தா (2021)

கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரல் 21ம்  திக்தி சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. அப்போது சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் எடுத்தது. இது சிஎஸ்கேவின் 5வது அதிகபட்மாகும் .

218 - மும்பை (2021)

சென்னை அணிக்கு எப்போதும் ஒரு தலைவலியாக இருக்கும் அணி மும்பை அணி. கடந்த 2021ம் ஆண்டு மே 1ம் திகதி மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 218 ஓட்டங்கள் எடுத்தது. இது சென்னை அணியின் 6வது அதிகபட்ச ஸ்கோர்.

217 - லக்னோ (2023)

  லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 217  ஓட்டங்கள் குவித்து அசத்தியது. இதுதான் சென்னை அணி 7வது அதிகபட்ச ஸ்கோர்.

கடந்த 2013ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5 விக்கெட்  இழப்பிற்கு 263 ஓட்டங்கள் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவே அதிகபட்ச   எண்ணிக்கை. இந்த போட்டியில், கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 17 சிக்ஸர்கள் அடித்து 175ஓட்டங்கள் குவித்தார்.

இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரிலும் பெங்களூர் அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 248 ஓட்டங்கள் எடுத்தது.

உமேஷ் யாதவ் புதிய சாதனை


 

பஞ்சாப்புக்கு எதிரான  போட்டியில்  பனுக ராஜகஷ்சகவை ஆட்டமிழக்கச்செய்த   சுனில் நரேன்,  பிராவோ ஆகியோரின் சாதனையை உமேஷ் யாதவ்   முறியடித்தார்.4 ஓவர்களில்  27 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 6.75 என்ற எக்கனாமியில் சிறப்பாக பந்து வீசிய அவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக இதுவரை மொத்தம் 34 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு  அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்ற சுனில் நரேன், ட்வயன் ப்ராவோ ஆகியோரின்   சாதனையை தகர்த்த அவர் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

 1. உமேஷ் யாதவ் : 34, விக்கெட்டுகள் – பஞ்சாப் அணிக்கு எதிராக*

 2. சுனில் நரேன் : 33 விக்கெட்கள், பஞ்சாப் அணிக்கு எதிராக*

 3. ட்வயன் ப்ராவோ : 33 விக்கெட்கள் – மும்பைக்கு எதிராக

4. லசித் மலிங்கா : 31 விக்கெட்கள் – சென்னைக்கு எதிராக

5. புவனேஸ்வர் குமார் : 30 விக்கெட்டுகள் – கொல்கத்தாவுக்கு எதிராக*

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்த அவர் அதன் பின் ஐபிஎல் தொடரில் ஒரு சில சீசன்களில் ரன்களை வாரி வழங்கினார். மறுபுறம் 2016இல் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த ஜஸ்பிரித் பும்ரா வந்ததால் அவருக்கு இந்திய வெள்ளைப் பந்து அணியில் வாய்ப்புகளை பறிபோனது.

போதாக்குறைக்கு சிராஜ் போன்றவர்கள் வந்ததால் டெஸ்ட் அணியிலும் நிலையான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வரும் அவர் 2022 ஐபிஎல் தொடரில் இதே போல கொல்கத்தா அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் இந்திய ரி20 அணியில் நீண்ட வருடங்களுக்கு கழித்து வாய்ப்பு பெற்றார்.   இந்த ஐபிஎல் தொடரில் இதே போல சிறப்பாக செயல்பட்டு வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடுவதே தம்முடைய லட்சியம் என்று சமீபத்தில் உமேஷ் யாதவ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான  போட்டியில் மும்பை அணி வீரர் திலக் வர்மா டோனியின் சாத்னையை சமப்படுத்தியுள்ளார். மும்பை வீரர்கள்  76 ஓட்டங்கள் எடுக்க (உதிரி 11 ) திலக் வர்மா மட்டும் தனி ஒருவனாக 84 ஓட்டங்கள் விளாசினார். அத்துடன் 5வது இடத்தில் களமிறங்கி 84* ஓட்டங்கள் விளாசிய அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்கு எதிராக 5வது இடத்தில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த 3வது வீர என்ற டோனியின் சாதனையும் சமன் செய்தார்.

 1. டேவிட் மில்லர் : 101*

2. நிதிஷ் ராணா : 95*

 3. எம்எஸ் டோனி/திலக் வர்மா : தலா 84* ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த அவர் கடந்த வருடம் மும்பை அணிக்காக அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய நிலையில் இந்த வருடமும் முதல் போட்டியிலேயே அபாரமாக செயல்பட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

 

விவாதப் பொருளாகிய காவ்யா மாறனின் கூலிங் கிளாஸ்


 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன். இவர் சன் நெட்வொர்க் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள். பல ஆண்டுகளாக இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2023) 'ம்ய்ச்டெர்ய் கிர்ல்' என்ற பெயரை இவர் பெற்றுள்ளார். வழக்கம்போல் இந்த ஐபிஎல் சீசனிலும் இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட்டின் தீவிர ரசிகையான காவ்யா மாறன், ஐதராபாத் அணியை எப்போதும் ஆதரிப்பார். ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்  விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ஊக்குவிக்க அவர் மைதானத்தில் இருந்தார்.

இந்த ஆட்டத்தை அவர் கண்டு ரசித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அவர்  அணிந்திருந்த கூலிங் கிளாஸும் சமூக வலைத்தளத்தில் விவாதப் பொருள் ஆனது.அந்த கூலிங் கிளாஸ் ஆலெxஅன்டெர் McQஉஏன் பிராண்ட் தானா என்று சமூக வலைத்தள வாசி ஒருவர் கேள்வி எழுப்ப, ஆமாம் என்ற மற்றொரு நபர் பதிலளித்தார். அதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 45ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர் கூலிங் கிளாஸுடன் இறுக்கமான முகத்துடன் புன்னகையில்லாமல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

முன்னதாக, எஸ்ஏ20 கிரிக்கெட் போட்டியில் தனது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்ஸ் அணியை ஆதரிக்க  தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தார் காவ்யா மாறன். அப்போது தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் 'நீங்கள் என்னை திருமணம் செய்துகொள்வீர்களா' என எழுதிய பதாகையை வைத்திருந்தார்.

 

Wednesday, April 5, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -63

 
 சினிமா வாய்புத்தேடிசென்னைக்கு குடிபெயர்ந்த கண்ணதாசன்,  நடைகர்,கவிஞர், கதாசிரியர்,வசனகர்த்தா, தயாரிப்பாளர்  போன்ர பல அவதாரங்களை எடுத்துள்ளார். என்ராலும் கவிஞர் என்பதே அவரது அடையாளமாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி கவிஞர், போல் கவிஞர்  என்றால் அது கண்ணதாசனை மட்டும்தான்  குறிக்கும்.

சினிமாவால் கோடிகோடியாகச் சம்பாதித்த கவிஞர் சினிமாவில் முதலீடு செய்து   பெருத்த நஷ்டமடைந்தார்.விதி,வீம்பு, பழக்க வழக்கம் எல்லாம் கவிஞருக்கு எதிராக நின்றன.

திரைப்பட பாடலாசிரியராகக் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், சொந்தமாக படக்கம்பெனி தொடங்கி படங்களைத் தயாரித்தார். சில படங்கள் தோல்வி அடைந்ததால், அவர் பெரும் சோதனைகளை அனுபவிக்க நேர்ந்தது.

 கண்ணதாசன் தயாரித்த முதல் படம்‘மாலையிட்ட மங்கை’.  பட உலகில் இருந்து விலகி இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்கு, இப்படம் புதுவாழ்வு அளித்தது. நாடக நடிகையாக இருந்த மனோரமாவை, திரை உலகில் அறிமுகப்படுத்திய படம் இதுதான் முதல்பட வெற்றி அடுத்த படக்ட்தைத் தயாரிக்கும் ஆசையைத் தூண்டியது. இரண்டாவதாகத் தயாரித்த ‘சிவகங்கை சீமை’ சிறந்த படம். நடிப்பு, வசனம்,கதை அனைத்தும்  மெச்சும்படியாக  இருந்தன. ஆனால்,  வீரபாணடிய கட்டபொம்மனுக்குப் போட்டியாக  சிவகங்கைச் சீமையிலே  வெளியானதால்  தோல்வியடைந்தது.

 கட்டபொம்மனுக்கும், சிவகங்கை சீமைக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. இரண்டு படங்களும், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை சித்தரிப்பவை. ‘சிவகங்கை சீமை’யில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பி.எஸ்.வீரப்பா, டி.கே.பகவதி, வளையாபதி முத்துகிருஷ்ணன், குமாரி கமலா, எஸ்.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்தனர்.திரைக்கதை-வசனத்தை கண்ணதாசன் எழுத, கே.சங்கர் டைரக்ட் செய்தார். இது, கறுப்பு- வெள்ளை படம். படம் தயாரானதும், அதை ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கு கண்ணதாசன் போட்டுக்காட்டினார். படத்தைப் பார்த்த ஏவி.எம்., ‘படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால், கட்டபொம்மன் படத்துடன் மோதவேண்டாம். அந்த படம் வெளியாகி, இரண்டு  மாதங்களுக்குப் பிறகு வெளியிடுங்கள்’ என்று யோசனை தெரிவித்தார். இதை கண்ணதாசன் கேட்கவில்லை. கட்டபொம்மனும், சிவகங்கை சீமையும் ஒரே சமயத்தில் (1959 மே) வெளிவந்தன

 சிவாஜிகணேசன், பத்மினி, ஜெமினி கணேசன், எஸ்.வரலட்சுமி, ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடிக்க ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை பத்மினி பிக்சர்ஸ் தயாரித்தது. பி.ஆர்.பந்துலு டைரக்ட் செய்த இந்த படம், தமிழின் முதல் டெக்னிக் கலர் படம். சிவாஜியின்  உணர்ச்சிகரமான நடிப்பு  வீரபாண்டிய கட்ட பொம்மனை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. சிவாஜிகணேசனின் அற்புத நடிப்பு, பிரமாண்டமான சண்டைக்காட்சிகள், கண்ணைக் கவரும் வண்ணம்- இவற்றால், கட்டபொம்மன் ஓகோ என்று ஓடியது. ஆனால் சிவகங்கை சீமை தரமானதாக இருந்தும் கட்டபொம்மனை எதிர்த்து நிற்க முடியாமல் தோல்வி அடைந்தது

  ‘சிவகங்கைச் சீமை’ படத்தால் தொண்ணூறாயிரம்ரூபா நஷ்டமடைந்தார்.  அதை ஒரு வருஷத்திற்குள் தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருக்கலாம்.ஆனால், வலிமையான விதிகண்ணதாசனை பற்றியது. மேலும் மேலும் இழுத்தது.    `கவலை இல்லாத மனிதன்’ என்றொரு படத்தை ஆரம்பித்த கவிஞர் கவலையில் இருந்து மீள முடியாமல் தவித்தார். கண்ணதாசனின்  நிலமையை அறிந்த    இயக்குநர்  பீம்சிங் உதவி செய்ய முன் வந்தார்.சிவாஜி நடிக்க  ஒரு படத்தை இயக்க  ஒபுக்கொண்டார்.சிவாஜி பிம்சிங்  இணைந்த படங்கள் வெற்ரி பெற்ற காலம் அது.  விதி வலியது.  கண்ணதாசன் கேட்கவில்லை. சந்திரபாபுவை கதாநாயகனாக்கி கவலை இல்லாதமனிதனை எடுத்தார். சிவாஜியை விட அதிக சம்பளத்தைக் கேட்டார் சந்திரபாபு.  கண்ணதாசன் ஒப்புக்கொண்டார்.  சந்திரபாபுவின்  ஏமாற்ரு வேலைகள் பற்ரி பலரும் கண்ணதாசனுகு எடுத்துக் கூறினார்கள். நண்பன் கைவிடமாட்டான் என கண்ணதாசன் நம்பினார்.

நன்றி இல்லாத ஊழியர்கள், பொறுப்பில்லாத பார்ட்னர், எல்லாருமாகச் சேர்ந்து பணத்தைப் பாழாக்கினார்கள். சந்திரபாபு தன் வழக்கப்படி, பேசிய தொகைக்கு மேல் கேட்டுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்தார். அந்தத் துயரங்களையும், அவமானங்களையும் சொல்லாமலிருக்க முடியவில்லை. நான்கு நாட்களில் எடுக்க வேண்டிய `கிளைமாக்ஸ்’ கட்டத்தை, நான்கு மணி நேரத்தில் எடுத்தார்கள்>முழுமுதற்காரணம் சந்திரபாபு.

தான் அனுபவித்த துயரங்களை கண்ணதாசன் சுயசரிதையில் சொல்லியுள்ளார்.

அன்று காலை ஏழு மணிக்கு ‘ஷூட்டிங்.’ எடுக்கப்பட வேண்டியதோ ‘கிளைமாக்ஸ்’ கட்டம். டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, ராஜசுலோசனா அத்தனை பேரும் `செட்’டிற்கு வந்துவிட்டார்கள். பேசிய தொகைக்கு மேல் இருபதாயிரம் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருந்தும் கூட, சந்திரபாபு சரியாக வரமாட்டார் என்பதாலே அதிகாலையில் குளிக்கக்கூட இல்லாமல் நானே அவர் வீட்டிற்குப் போனேன். அவர் தூங்குவதாகச் சொன்னார்கள். நான் வெளியில் சோபாவில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். பொறுத்துப் பொறுத்து பார்த்துவிட்டு, பையனைக் கூப்பிட்டு, ‘சந்திரபாபு எழுந்துவிட்டாரா?’ என்று கேட்டேன்.

‘அவர் பின்பக்கமாக, அப்பொழுதே போய்விட்டாரே’ என்றான் பையன். இந்த அவமானம் மட்டுமல்ல. படம் என்ன ஆகுமோ என்ற பயம், கடன்காரர்களுக்கு என்ன சொல்லப் போகிறோம் என்ற கவலை – எல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டன. பிறகு, நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களிடம் சொல்லி அழுதேன். அவரும், அண்ணன் டி.எஸ்.பாலையா அவர்களும் காரை எடுத்துக்கொண்டு, சந்திரபாபுவைத் தேடி அலைந்ததை என்னால் மறக்கமுடியாது. 1960 செப்டம்பர் மாதம் படம் வெளியானபோது என்னை கடன்காரனாக நிறுத்தின.

அன்றைய கணக்குப்படி ஐந்து லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடன். பின்நாளில் வட்டி ஏறி, ஏழு லட்சமாகப் பரிணமித்தது. தோல்விகளையும், துயரங்களையும் தாங்கிக் கொள்வதில் எனக்குப் பழக்கம் உண்டு; சிறு வயதில் இருந்தே அந்த அனுபவம் உண்டு. ஆகவே, `கவலை இல்லாத மனிதன்’ படத்தின் தோல்வி என்னை விரக்தி அடையச் செய்யவில்லை. ஆனால், அது உருவாக்கிக் கொடுத்த ஆறு லட்ச ரூபாய்க் கடன், அடிக்கடி என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது என் கம்பெனியின் பெயரில் பதினோரு கார்கள் இருந்தன. ஏழு `பியட்’ கார்கள், இரண்டு `ஹிந்துஸ்தான்’ கார்கள், ஒரு `பிளைமவுத்’ கார், ஒரு `ஸ்டேஷன் வேகன்’ கம்பெனிக்கு எதிரே அந்தக் கார்களை நிறுத்தி வைத்தால் கம்பெனியில் ஏதோ விழா நடப்பது போல் தோன்றும். அத்தனை கார்களிலும் ஒரே ஒரு பியட் காரை மட்டும் வைத்துக்கொண்டு, பாக்கி அனைத்தையும் கார் மீது பணம் கொடுத்தவர்களின் வீடுகளில் கொண்டு போய் விட்டு விட்டேன்.

சில கார்களின் மீது இரண்டாயிரம், மூவாயிரம்தான் பாக்கி இருந்தது என்றாலும், அந்தக் கார்களை விற்று மீதிப்பணத்தைக் கொடுக்கும்படி அவர்களிடமே சொல்லிவிட்டு வந்துவிட்டேன். யார் கொடுப்பார்கள்? அப்படி நாணயமானவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ஏதோ இரண்டொருவர் இரக்கப்பட்டுக் கொஞ்சத் தொகை கொடுத்தார்கள்; மற்ற அனைத்துமே போய்விட்டன. கம்பெனி வீட்டைக் காலி செய்து, இருந்த சாமான்களை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்து வீட்டிலே போட்டேன்.

சுமார் ஐம்பதினாயிரம் ரூபாய் பெறக்கூடிய ஆடையணிமணி உபகரணங்களை எல்லாம் எட்டாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டேன். வேலையாட்களையெல்லாம் நிறுத்திவிட்டேன். படம் எடுப்பதை நிறுத்திவிட்டேன், கம்பெனியை மூடிவிட்டேன் என்றதும், சுமார் முப்பது கடன்காரர்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்கள். 

மூன்று மாதங்களுக்குள்ளாக 34 வழக்குகள் கோர்ட்டுக்கு வந்துவிட்டன. நேரே வழக்கறிஞர் வி.பி.ராமனிடம் போனேன். ‘ஒரு வருஷத்துக்குள் பணம் சம்பாதித்து கடனை கட்ட முடியுமா?’ என்று கேட்டார் அவர். ‘முடியும்’ என்றேன். ஒரு பக்கம் கடன் வந்தால், ஒரு பக்கம் வரவு வரவேண்டும் அல்லவா? அந்தப் பக்கம் அடி விழுந்தபோது, இந்தப்பக்கம் ஏராளமான படங்களுக்கு சந்தர்ப்பம் வந்தது. நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு, பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கிற்று! இவ்வாறு கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.

‘கவலை இல்லாத மனிதன்’ படத்துக்குப்பிறகு, சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த கே.முருகேசனுடன் கூட்டு சேர்ந்து, ‘வானம்பாடி’ என்ற படத்தை கண்ணதாசன் எடுத்தார்.   இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது

ண்ணதாசனுடைய கடனில் ஒரு பகுதியை அடைக்க இப்படம் உதவியது. பின்னர், கோவை செழியனுடன் சேர்ந்து ‘சுமை தாங்கி’ என்ற படத்தைத் தயாரித்தார்.  இந்தப்படமும் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

‘மொத்தத்தில் அப்போதெல்லாம் ஏராளமாகப் பணம் புரண்டு விளையாடிற்றே தவிர, கையிலே தங்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார், கண்ணதாசன். 1962-ல் இந்தியா மீது சீனா படையெடுத்தது. அதை அடிப்படையாக வைத்து கண்ணதாசன் கதை-வசனம் எழுதிய ‘இரத்தத் திலகம்’ என்ற படத்தை பஞ்சு அருணாசலம் தயாரித்தார். சிவாஜிகணேசனும், சாவித்திரியும் நடித்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது.

இப்படத்தில் ஒரு காட்சியில், ‘பழைய மாணவர் முத்தையா’வாக கண்ணதாசன் தோன்றி, ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணையிருப்பு’ என்று பாடுவார். 1964-ல் மீண்டும் சொந்தப் படத்தயாரிப்பில் ஈடுபட்டார், கண்ணதாசன்! படத்தின் பெயர் ‘கறுப்பு பணம்’ பாலாஜி, டி.எஸ்.பாலையா, கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்த இப்படத் தில் முக்கிய வேடத்தில் கண்ணதாசனே நடித்தார். படம் சுமாராகத்தான் ஓடியது.

‘கவலை இல்லாத மனிதன்’ அனுபவத்திற்குப் பிறகும் சொந்தப்படம் தயாரித்தது பற்றி கண்ணதாசன் பின்னர் எழுதும்போது, ‘ஒரு தவறு செய்துவிட்டு, அது தவறு செய்துவிட்டேன் என்று குறிப்பிட்டார்.

கொந்தளித்த மக்கள் பணிந்த பிரதமர்


 இஸ்ரேலின் நீதித்துறையை மாற்றியமைப்பதற்காக    பிரதமர்   பெஞ்சமின் நெதன்யாஹு   கையெழுத்திட்ட   நீதித்துறையை மாற்றியமைப்பதற்கான  திட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய  போரட்டங்கள் நடைபெற்றன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை ரத்து செய்யும் அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கும் அதே வேளையில், நீதித்துறை நியமனங்கள் மீதான கட்டுப்பாட்டை நிறைவேற்று அதிகாரியிடம் ஒப்படைக்க அவரது தேசியவாத மதக் கூட்டணியின் திட்டங்கள் இஸ்ரேலிய வரலாற்றில் மிகப்பெரிய உள் நெருக்கடிகளில் ஒன்றைத் தூண்டிவிட்டன.  நாடு தழுவிய கொந்தளிப்பிற்குப் பிறகு பிரதமர் இடைநிறுத்தினார், இந்தத் திட்டத்திற்கு எதிராக தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தில் சேர்ந்தனர். ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தெருக்களில் இறங்கினர். அடுத்த மாதம் பாஸ்கா விடுமுறை மற்றும் சுதந்திர தினத்திற்கான இடைவேளைக்குப் பிறகு பாராளுமன்றம் திரும்பும் வரை திட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான தனது முடிவை திங்களன்று தாமதமாக அறிவித்த நெதன்யாகு, நெருக்கடிக்கு அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட ஆயத்தமான வேளையில் இஸ்ரேல் நெருக்கடியில் சிக்கி உள்ளது.  

 ஜெருசலேம், டெல் அவிவ்,அதற்கு அப்பால்  உள்ள நகரங்களில் ஒவ்வொரு வாரமும் லட்சக்கணக்கான மக்கள் இஸ்ரேலின் தெருக்களில் இறங்கி எதிர்ப்பு தெரிவிதனர்.அரசாங்கத்தின் நீதித்துறை சீர்திருத்தங்களால், தங்களின் ஜனநாயகம் பலவீனமடைந்து வருவதாக அவர்கள் அஞ்சுகின்றனர். தொடர்ந்து பத்தாவது வாரத்தில்  ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களில் பலர் டேவிட் இஸ்ரேலியக் கொடியின் நீலம் மற்றும் வெள்ளை நட்சத்திரத்தை அசைப்பார்கள். இது அவர்களின் இஸ்ரேல் தங்களிடமிருந்து பறிக்கப்படுவதாக நம்பும் மக்களால் மென்மையான தேசியவாதத்தை வேண்டுமென்றே வெளிப்படுத்துகிறது.

அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டங்கள், கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் உள்ள   நகரங்களுக்கு  அப்பாலும் பரவியது. மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள டெல் அவிவ், மிகப்பெரிய கூட்டத்தை ஈர்க்கிறது, ஆனால் கோபத்தின் அடையாளக் கவனம் ஜெருசலேமில் உள்ளது, இது ஜனாதிபதி மற்றும் நாட்டின் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரின் இல்லமாகும்.

மூன்று ஆண்டுகளுக்குள் ஐந்து தேர்தல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் இப்போது நிலையான பெரும்பான்மையுடன் ஒரு அரசாங்கத்தைக் கொண்டுள்ளது மற்றும் பல ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் நாட்டின் வரலாற்றில் மிகவும் வலதுசாரி மற்றும் மத ரீதியாக பழமைவாதமாகும். அரசாங்கம் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் இருந்தாலும், அவர் தனது ஆறாவது முறையாக பிரதமராக இருந்தபோது, அவர் தனது அமைச்சரவையின் தீவிர வலதுசாரிகளில் கடுமையான தேசியவாத குரல்களால் வழிநடத்தப்படுவதாகக்   கருதப்படுகிறது.

"வலதுசாரிகளில் சிலர் இதை பல ஆண்டுகளாக தங்கள் நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்கிறார்கள்," என்று இஸ்ரேலிய ஜனநாயக நிறுவனத்தில் ஒரு ஆராய்ச்சி உறுப்பினரான டாக்டர் கை லூரி விளக்குகிறார், ஆனால் இது வரை அவர்களுக்கு நெதன்யாகுவின் ஒப்புதல் இருப்பதாக உணரவில்லை. "அவர்கள் இப்போது ஒரு சிறிய வாய்ப்பைப் பார்க்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

சீர்திருத்தங்களின் விமர்சகர்கள், அவர்கள் அரசாங்கத்திடம் முழு அதிகாரத்தையும் ஒப்படைப்பார்கள், தனிநபர்கள் மற்றும் சிறுபான்மையினரை ஆபத்தில் ஆழ்த்துவார்கள், மேலும் நெதன்யாகுவின் மீது தொங்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை அகற்றுவதற்கான ஒரு வழிமுறையாகும்.

இஸ்ரேலிய பத்திரிகையாளரும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அங்கீகரிக்கப்படாத சுயசரிதையை எழுதியவருமான Anshel Pfeffer என்பவரும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதம மந்திரிகள், முன்னாள் தலைமை நீதிபதி, இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் ஜெனரல்கள் மற்றும் இராணுவப் பாதுகாப்புப் படையினர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட, சீர்திருத்தங்களுக்கு எதிராக இஸ்ரேலிய சமூகத்தில் பல பிரபலமான நபர்கள் குரல் கொடுத்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்குள் ஐந்து தேர்தல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் இப்போது நிலையான பெரும்பான்மையுடன் ஒரு அரசாங்கத்தைக் கொண்டுள்ளது மற்றும் பல ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் நாட்டின் வரலாற்றில் மிகவும் வலதுசாரி மற்றும் மத ரீதியாக பழமைவாதமாகும். arasaangkam பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் இருந்தாலும், அவர் தனது ஆறாவது முறையாக பிரதமராக இருந்தபோது, அவர் தனது அமைச்சரவையின் தீவிர வலதுசாரிகளில் கடுமையான தேசியவாத குரல்களால் வழிநடத்தப்படுவthaakak   karuthappadukiRathu.போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீர் பீரங்கி மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசியது தேசிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நெதன்யாகுவும் அவரது ஆதரவாளர்களும் இந்தத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே ஒரு சரியான சமநிலையை உறுதி செய்யும் என்றும் தனிநபர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் கூறினாலும், அவர்கள் நிலையான மற்றும் ஆவேசமான எதிர்ப்பை ஈர்த்துள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தற்போது விசாரணையில் உள்ள நெதன்யாகு, மறுசீரமைப்பு தனிப்பட்ட உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று முன்னர் உறுதியளித்தார், ஆனால் அதன் அத்தியாவசியங்கள் எதையும் விட்டுக்கொடுப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இந்த திட்டங்களால் ஏற்பட்ட பிளவுகள் இராணுவத்தை பாதித்து தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்து பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு அசாதாரண வார இறுதியில், மாற்றியமைப்பை இடைநிறுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

நெதன்யாகுவால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி, இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் நிறுத்தத்தை வலியுறுத்தினார்.

ஹிஸ்டாட்ரட் தொழிற்சங்க அமைப்பு ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது, இது பென் குரியன் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் நிறுத்தப்படுவதற்கும் வங்கிகளில் இருந்து மெக்டொனால்டின் துரித உணவு உணவகங்கள் வரையிலான வணிகங்களை மூடுவதற்கும் தூண்டியது.

இஸ்ரேலின் ஷேக்கல் நாணயத்தின் ஆரம்ப பேரணியானது, அதன் இறுதி விதி நிச்சயமற்ற நிலையில், நெதன்யாகு மாற்றியமைப்பை இடைநிறுத்தியதை அடுத்து, தோல்வியடைந்தது.இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நீண்டகால பாதுகாப்பு நெருக்கடியையும் ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்களையும் எதிர்கொள்ளும் நேரத்தில், கெலண்டின் பதவி நீக்கம் அரசாங்கம் தேசிய நலனை ஒதுக்கிவிட்டதற்கான அறிகுறியாக பலருக்குத் தோன்றியது. 

ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு கால அவகாசம் வழங்குவதற்காக மாற்றியமைப்பை இடைநிறுத்துவதற்கான நெதன்யாகுவின் முடிவை எதிர்க்கட்சிகள் எச்சரிக்கையுடன் வரவேற்றாலும், பல எதிர்ப்பாளர்கள் அவநம்பிக்கையுடன் இருந்தனர்.

"இந்த சீர்திருத்தங்கள் முற்றிலுமாக கைவிடப்படும் வரை நான் எதிர்ப்பைத் தொடருவேன், ஏனெனில் இது சீர்திருத்தங்களின் தொகுப்பு அல்ல, இது நிர்வாகத்தின் சதி" என்று ஜெருசலேமில் 27 வயதான ஆர்ப்பாட்டக்காரர் எய்டன் கஹானா கூறினார்.

அவரது சொந்த கூட்டணிக்குள், சில அதிருப்தியும் இருந்தது, கடுமையான நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச், மாற்றியமைப்பை இடைநிறுத்துவதற்கான முடிவை ஒரு தவறு என்று அறிவித்தார், ஆனால் பிரதமரின் முடிவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.

அரபு ஒலிபரப்பாளர்கள் இஸ்ரேலிய நெருக்கடியை சில அரேபியர்கள் நெத்தன்யாகுவின் அரசியல் அழிவுக்கு இட்டுச்செல்லும் என்று நம்புவதாகவும், மற்றவர்கள் இஸ்ரேலுக்கு இன்னும் தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

     பிரதமர்   பெஞ்சமின் நெதன்யாஹு பின்வாங்கியதால்  போராட்டக்காரர்களின் வேகம்  குறைவடைந்துள்ளது. அனாலும், ஆட்சிமற்றத்துக்கான சூழ்நிலை  உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Tuesday, April 4, 2023

ராகுலின் பதவியைப் பறித்த மோடி


 தேர்தல் காலத்தில் அரசியல் தலைவர்களும் பேச்சாளர்களும் வரம்புமீறிப் பேசுவது வழமை,2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் தம்மை அவமதித்து விட்டதாக  ஒருவர் தொடுத்த  அவதூறு வழக்கில்  ராகுலுக்கு இரண்டு வருடத்தடை   விதிக்கப்பட்டுள்ளது. சாதரண வழக்காக விசாரிக்கப்படும் அவதூறு வழக்கு கிரிமினல் வழக்காக விசாரிக்கப்பட்டது.

மோடி, அமித்ஷா  போன்றவர்களுக்கு இணையாக காங்கிரஸில் தலைவர்கள் யாரும்  இல்லை. ராகுலின் பதயாத்திரையின்  பின்னர் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அது தவிர அதானி பற்றி நாடாளுமன்றத்தில் ராகுல் எழுப்பிய  கேள்விக்கு பிரதமர் மோடி இன்னமும் பதிலளிக்கவில்லை. ராகுலுக்கு எதிரான தீர்ப்புக்கு இவை  பிரதானமானவையாகக் கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்தபோது  " நீரத் மோடி,  லலித் மோடி,  நஏந்திரமோடி என எல்லா திருடர்களின்  பெயருக்குப் பின்னால்  மோடி இருப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

ராகுலின்  பேச்சு மோடி எனும் சமூகத்தை அவதூறு பண்ணி விட்டது என கருதிய குஜராத்தின் முன்னாள் அமைச்சரும், பாரதீய ஜனதாக் கட்சியின் சட்டமன்ற  உறுப்பினருமான புர்னேஸ் மோடி என்பவர் 16.04.2019  இல்   குஜராத்தில்  வழக்குத் தொடர்ந்தார். 2022 அம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி அவர் வழக்கை வாபஸ் பெற்றார். நாடாளுமன்றத்தைல் அதானி பற்ரி ராகுல் கேள்வி எழுப்பியது, ராகுலுக்கு ந்திரான வழக்கு தூசு தட்டப்பட்டது. ஐந்தி நாட்களில் விசாரிக்கப்பட்டு அவசர அவசரமாகத் தீர்ப்பு வழங்கப்பட்ட்து.அதை விட அவரசமாக நடாளுமன்றப் பதவி பறிக்கப்பட்டு, அரச பங்களாவில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டது.  மேன்  முறையீட்டுக்கு  30 நாள் அவகாசமும்,  பிணையும்  கொடுக்கபட்டபின்னர், அரசாங்கத்தின் பங்களாவில் இருந்து வெளியேறுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

  இரண்டு வருட சிறைத்தண்டனை பெற்றால் உடனடியாகப் பதவி பறிக்கப்படும். ஆறு வருடங்களுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது. காங்கிரஸுடன்  ஒட்டு உறவு இல்லாமல் இருந்த அரசியல் கட்சிகள் ராகுலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளன. பிரிந்து நின்ற  மம்தா, கெஜ்ரிவால ஆகியோர் ராகுலுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி உள்ளனர். பிரிந்து நின்ற தலைவர்களை அவதூறு வழக்கு ஒற்றுமையாக்கி  உள்ளது.  பாரதீய ஜனதாவின் வீழ்ச்சிக்கு இது  காரணமாக அமையக்கூடும். தீர்ப்பைப் பற்றி கவலை இல்லாமல் ரகுல் தனது வழமையான பணிகளைத் தொடர்கிறார். அரசியல் பழிவாங்கல் வழக்கைச் சந்தித்த தலைவர்கள்   மீண்டு வந்து விஸ்வரூபம் எடுத்த வரலாறு உள்ளது.

ராகுலுக்கு எதிரக அமலாக்கத் துறை விசாரிக்கும் நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கும்   வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஏற்கனவே இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து சில ஆண்டுகளாகவே பல முக்கிய தலைவர்கள் விலகி வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் நேரடியாக பாஜகவில் தான் ஐக்கியமாகிறார்கள். 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸும் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக ராகுல் காந்தியே ஸ்மிருதி ராணியிடம் அமேதியில் தோல்வியடைந்தார். அப்போது அவர் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டதால் அவரால் எம்பியாக முடிந்தது. என்றாலும் காங்கிரஸ் கட்சியை பாஜகவை எதிர்கொள்ளும் அளவுக்கு வலுவான ஒரு கட்சியாக உருமாற்றம் செய்யவும் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டு வரவும் ராகுல் காந்திக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவை தொடர்ந்து ஆதாரத்துடனும் ஆக்கப்பூர்வமாகவும் விமர்சித்து வந்தால் மட்டுமே அது மக்கள் அரங்கில் எடுபடும் என்பதால் அதை நோக்கியும் ராகுல் காந்தி இறங்க வேண்டும். இதை வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும்.   

   இந்திரா காந்தி, ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டவர்கள் கூட ராகுல் காந்தியை போல் இதற்கு முன் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 கடந்த 1971-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் இந்திரா காந்திக்கு முகவராக செயல்பட்ட யஷ்பால் கபூர் அரசு ஊழியர் ஆவார். எனவே அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி இந்திரா காந்தியிடம் தோல்வியடைந்த ராஜ் நாராயண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த 1975 ஜூன் 12-ம் தேதி இந்திரா காந்தி குற்றவாளி, அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தது.  அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தது. அதன்பிறகு நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வராக பதவி வகித்து வந்த ஜெயலலிதா கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார்.

 மாட்டுத்தீவின ஊழல் வழக்கில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ், கடந்த 2013 ஆம் ஆண்டு மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவருக்கு தேர்தலில் போட்டியிட 11 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் சிறை தண்டனை அதன் பிறகு 6 ஆண்டுகள் போடியிட என மொத்தம் 11 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டது.

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசம்கான், கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடி, ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆசம் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து எம்.எல். பொறுப்பில் இருந்து ஆசம் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

 தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் அரசியல்வாதி உம்லேஷ் யாதவ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் செலவீனங்களை குறைத்துக் காட்டியதற்காக உம்லேஷ் யாதவை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையம் அவர் தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்தது. உம்லேஷ் யாதவ் உத்தர பிரதேசத்தின் பிசவுலி தொகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

கொலை முயற்சி வழக்கில், லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசலுக்கு லட்சத்தீவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். எனினும், தீர்ப்பை எதிர்த்து முகமது பைசல் மேல்முறையீடு செய்ததை அடுத்து தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது. முகமது பைசலின் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் லட்சத்தீவு இடைத்தேர்தலை ஆணையம் நிறுத்திவைத்துள்ளது.