பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் பனுக ராஜகஷ்சகவை ஆட்டமிழக்கச்செய்த சுனில் நரேன், பிராவோ ஆகியோரின் சாதனையை உமேஷ் யாதவ் முறியடித்தார்.4 ஓவர்களில் 27 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 6.75 என்ற எக்கனாமியில் சிறப்பாக பந்து வீசிய அவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக இதுவரை மொத்தம் 34 விக்கெட்களை சாய்த்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு
அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்ற சுனில் நரேன்,
ட்வயன் ப்ராவோ ஆகியோரின் சாதனையை தகர்த்த
அவர் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
1. உமேஷ் யாதவ் : 34, விக்கெட்டுகள்
– பஞ்சாப் அணிக்கு எதிராக*
2. சுனில் நரேன் : 33 விக்கெட்கள்,
பஞ்சாப் அணிக்கு எதிராக*
3. ட்வயன் ப்ராவோ : 33
விக்கெட்கள் – மும்பைக்கு எதிராக
4. லசித் மலிங்கா : 31 விக்கெட்கள் – சென்னைக்கு எதிராக
5. புவனேஸ்வர் குமார் : 30 விக்கெட்டுகள் – கொல்கத்தாவுக்கு எதிராக*
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள்
எடுத்த இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்த அவர் அதன் பின் ஐபிஎல் தொடரில் ஒரு சில
சீசன்களில் ரன்களை வாரி வழங்கினார். மறுபுறம் 2016இல் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே
முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த ஜஸ்பிரித் பும்ரா வந்ததால் அவருக்கு இந்திய
வெள்ளைப் பந்து அணியில் வாய்ப்புகளை பறிபோனது.
போதாக்குறைக்கு சிராஜ் போன்றவர்கள் வந்ததால் டெஸ்ட் அணியிலும் நிலையான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வரும் அவர் 2022 ஐபிஎல் தொடரில் இதே போல கொல்கத்தா அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் இந்திய ரி20 அணியில் நீண்ட வருடங்களுக்கு கழித்து வாய்ப்பு பெற்றார். இந்த ஐபிஎல் தொடரில் இதே போல சிறப்பாக செயல்பட்டு வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடுவதே தம்முடைய லட்சியம் என்று சமீபத்தில் உமேஷ் யாதவ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வீரர் திலக் வர்மா டோனியின் சாத்னையை சமப்படுத்தியுள்ளார். மும்பை வீரர்கள் 76 ஓட்டங்கள் எடுக்க (உதிரி 11 ) திலக் வர்மா மட்டும் தனி ஒருவனாக 84 ஓட்டங்கள் விளாசினார். அத்துடன் 5வது இடத்தில் களமிறங்கி 84* ஓட்டங்கள் விளாசிய அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்கு எதிராக 5வது இடத்தில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த 3வது வீர என்ற டோனியின் சாதனையும் சமன் செய்தார்.
1. டேவிட் மில்லர் :
101*
2. நிதிஷ் ராணா : 95*
3. எம்எஸ் டோனி/திலக் வர்மா
: தலா 84* ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த அவர் கடந்த வருடம் மும்பை அணிக்காக அறிமுகமாகி
நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய நிலையில் இந்த வருடமும் முதல் போட்டியிலேயே அபாரமாக
செயல்பட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment