தேர்தல் காலத்தில் அரசியல் தலைவர்களும் பேச்சாளர்களும் வரம்புமீறிப் பேசுவது வழமை,2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசிய ராகுல் தம்மை அவமதித்து விட்டதாக ஒருவர் தொடுத்த அவதூறு வழக்கில் ராகுலுக்கு இரண்டு வருடத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதரண வழக்காக விசாரிக்கப்படும் அவதூறு வழக்கு கிரிமினல் வழக்காக விசாரிக்கப்பட்டது.
மோடி, அமித்ஷா போன்றவர்களுக்கு
இணையாக காங்கிரஸில் தலைவர்கள் யாரும் இல்லை.
ராகுலின் பதயாத்திரையின் பின்னர் அவர் மீதான
எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அது தவிர அதானி பற்றி நாடாளுமன்றத்தில் ராகுல் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மோடி இன்னமும் பதிலளிக்கவில்லை.
ராகுலுக்கு எதிரான தீர்ப்புக்கு இவை பிரதானமானவையாகக்
கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்தபோது " நீரத் மோடி, லலித் மோடி,
நஏந்திரமோடி என எல்லா திருடர்களின்
பெயருக்குப் பின்னால் மோடி இருப்பது
ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
ராகுலின் பேச்சு மோடி எனும் சமூகத்தை அவதூறு பண்ணி விட்டது என கருதிய குஜராத்தின் முன்னாள் அமைச்சரும், பாரதீய ஜனதாக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான புர்னேஸ் மோடி என்பவர் 16.04.2019 இல் குஜராத்தில் வழக்குத் தொடர்ந்தார். 2022 அம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி அவர் வழக்கை வாபஸ் பெற்றார். நாடாளுமன்றத்தைல் அதானி பற்ரி ராகுல் கேள்வி எழுப்பியது, ராகுலுக்கு ந்திரான வழக்கு தூசு தட்டப்பட்டது. ஐந்தி நாட்களில் விசாரிக்கப்பட்டு அவசர அவசரமாகத் தீர்ப்பு வழங்கப்பட்ட்து.அதை விட அவரசமாக நடாளுமன்றப் பதவி பறிக்கப்பட்டு, அரச பங்களாவில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டது. மேன் முறையீட்டுக்கு 30 நாள் அவகாசமும், பிணையும் கொடுக்கபட்டபின்னர், அரசாங்கத்தின் பங்களாவில் இருந்து வெளியேறுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருட சிறைத்தண்டனை பெற்றால் உடனடியாகப் பதவி பறிக்கப்படும். ஆறு வருடங்களுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது. காங்கிரஸுடன் ஒட்டு
உறவு இல்லாமல் இருந்த அரசியல் கட்சிகள் ராகுலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளன. பிரிந்து நின்ற மம்தா,
கெஜ்ரிவால ஆகியோர் ராகுலுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி உள்ளனர். பிரிந்து நின்ற தலைவர்களை அவதூறு வழக்கு ஒற்றுமையாக்கி உள்ளது. பாரதீய
ஜனதாவின் வீழ்ச்சிக்கு இது காரணமாக
அமையக்கூடும். தீர்ப்பைப் பற்றி கவலை இல்லாமல் ரகுல் தனது வழமையான பணிகளைத் தொடர்கிறார். அரசியல் பழிவாங்கல் வழக்கைச் சந்தித்த தலைவர்கள் மீண்டு
வந்து விஸ்வரூபம் எடுத்த வரலாறு உள்ளது.
ராகுலுக்கு எதிரக அமலாக்கத் துறை விசாரிக்கும் நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கும் வ வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஏற்கனவே இக்கட்டான சூழலில் உள்ள நிலையில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து சில ஆண்டுகளாகவே பல முக்கிய தலைவர்கள் விலகி வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் நேரடியாக பாஜகவில் தான் ஐக்கியமாகிறார்கள். 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸும் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக ராகுல் காந்தியே ஸ்மிருதி ராணியிடம் அமேதியில் தோல்வியடைந்தார். அப்போது அவர் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டதால் அவரால் எம்பியாக முடிந்தது. என்றாலும் காங்கிரஸ் கட்சியை பாஜகவை எதிர்கொள்ளும் அளவுக்கு வலுவான ஒரு கட்சியாக உருமாற்றம் செய்யவும் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டு வரவும் ராகுல் காந்திக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். அசுர பலத்துடன் இருக்கும் பாஜகவை தொடர்ந்து ஆதாரத்துடனும் ஆக்கப்பூர்வமாகவும் விமர்சித்து வந்தால் மட்டுமே அது மக்கள் அரங்கில் எடுபடும் என்பதால் அதை நோக்கியும் ராகுல் காந்தி இறங்க வேண்டும். இதை வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும்.
இந்திரா காந்தி, ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டவர்கள் கூட ராகுல் காந்தியை போல் இதற்கு முன் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த
1971-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் இந்திரா காந்திக்கு முகவராக செயல்பட்ட யஷ்பால் கபூர் அரசு ஊழியர் ஆவார். எனவே அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி இந்திரா காந்தியிடம் தோல்வியடைந்த ராஜ் நாராயண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த 1975 ஜூன் 12-ம் தேதி இந்திரா
காந்தி குற்றவாளி, அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தது. அடுத்த
6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தது. அதன்பிறகு நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வராக பதவி வகித்து வந்த ஜெயலலிதா கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார்.
மாட்டுத்தீவின
ஊழல் வழக்கில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ், கடந்த 2013 ஆம் ஆண்டு மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவருக்கு தேர்தலில் போட்டியிட 11 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் சிறை தண்டனை அதன் பிறகு 6 ஆண்டுகள் போடியிட என மொத்தம் 11 ஆண்டுகள்
தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டது.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசம்கான், கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடி, ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆசம் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ பொறுப்பில் இருந்து ஆசம் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தேர்தல்
ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் அரசியல்வாதி உம்லேஷ் யாதவ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் செலவீனங்களை குறைத்துக் காட்டியதற்காக உம்லேஷ் யாதவை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையம் அவர் தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்தது. உம்லேஷ் யாதவ் உத்தர பிரதேசத்தின் பிசவுலி தொகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
கொலை முயற்சி வழக்கில், லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசலுக்கு லட்சத்தீவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். எனினும், தீர்ப்பை எதிர்த்து முகமது பைசல் மேல்முறையீடு செய்ததை அடுத்து தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது. முகமது பைசலின் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் லட்சத்தீவு இடைத்தேர்தலை ஆணையம் நிறுத்திவைத்துள்ளது.
No comments:
Post a Comment