Thursday, April 6, 2023

ஐபிஎல் இல் 200+ சென்னை சாதனை

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2008 ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து   கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மொத்தமாக 22 முறை ஒரு இன்னிங்ஸில் 200 மற்றும் அதற்கு மேற்பட்ட ஓட்டங்கள் குவிக்கப்பட்டது. இது 2008 ம் ஆண்டுக்கு பிறகு எந்த சீசனிலும் இத்தனை முறை பதிவாகவில்லை.

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை 200 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. லக்னோ உடனான போட்டியில் 217 ஈட்டங்கள் எடுத்த  எடுத்த நிலையில் இதுவரை 24 முறை 200 ஓட்டங்களுக்கு மேல் சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக 200 ஓட்டங்களுக்கு  மேல் 22 முறை குவித்து பெங்களூரு அணி 2வது இடத்தில் உள்ளது. அதிக முறை 200  ஓட்டங்கள் எடுத்த அணிகள்

  சென்னை சூப்பர் கிங்ஸ் 24

  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 22

  பஞ்சாப் கிங்ஸ் 17

  மும்பை இந்தியன்ஸ் 16

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 15

சென்னை அணியின் அதிகபட்ச ரன்கள் பட்டியல்:

246 -ராஜஸ்தான்  (2010)

கடந்த 2010 ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 246ஒட்டங்கள் குவித்தது. இதுவே இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகபட்ச ரன்னாக இருந்து வருகிறது.

240 -  பஞ்சாப் (2008)

2008 தொடக்க சீசனில் சென்னை அணி கிங்ஸ் xஇ பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஏப்ரல் 19ம் திகதி மோதியது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 240 ஓட்டங்கள்  குவித்தது. இது சென்னை அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

 

223  - ஹைதரபாத்  (2013)

கடந்த 2013ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மே 8ம் திகதி சென்னை அணி விளையாடியது. இந்த போட்டியில் சென்னை அணி   3 விக்கெட் இழப்பிற்கு 223 ஓட்டங்கள் குவித்தது. இது சென்னை அணியின் மூன்றாவது அதிகபட்ச   எண்ணிக்கை ஆகும்.

222 - டெல்லி (2012)

சென்னை அணியின் நான்காவது அதிகபட்ச ஸ்கோர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2012ம் ஆண்டு பதிவானது. 25 ம் திகதி மே மாதம் நடந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்கள் குவித்தது.

220-  கொல்கத்தா (2021)

கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரல் 21ம்  திக்தி சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. அப்போது சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் எடுத்தது. இது சிஎஸ்கேவின் 5வது அதிகபட்மாகும் .

218 - மும்பை (2021)

சென்னை அணிக்கு எப்போதும் ஒரு தலைவலியாக இருக்கும் அணி மும்பை அணி. கடந்த 2021ம் ஆண்டு மே 1ம் திகதி மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 218 ஓட்டங்கள் எடுத்தது. இது சென்னை அணியின் 6வது அதிகபட்ச ஸ்கோர்.

217 - லக்னோ (2023)

  லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 217  ஓட்டங்கள் குவித்து அசத்தியது. இதுதான் சென்னை அணி 7வது அதிகபட்ச ஸ்கோர்.

கடந்த 2013ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5 விக்கெட்  இழப்பிற்கு 263 ஓட்டங்கள் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவே அதிகபட்ச   எண்ணிக்கை. இந்த போட்டியில், கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 17 சிக்ஸர்கள் அடித்து 175ஓட்டங்கள் குவித்தார்.

இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரிலும் பெங்களூர் அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 248 ஓட்டங்கள் எடுத்தது.

No comments: