Wednesday, April 5, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -63

 
 சினிமா வாய்புத்தேடிசென்னைக்கு குடிபெயர்ந்த கண்ணதாசன்,  நடைகர்,கவிஞர், கதாசிரியர்,வசனகர்த்தா, தயாரிப்பாளர்  போன்ர பல அவதாரங்களை எடுத்துள்ளார். என்ராலும் கவிஞர் என்பதே அவரது அடையாளமாகும். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி கவிஞர், போல் கவிஞர்  என்றால் அது கண்ணதாசனை மட்டும்தான்  குறிக்கும்.

சினிமாவால் கோடிகோடியாகச் சம்பாதித்த கவிஞர் சினிமாவில் முதலீடு செய்து   பெருத்த நஷ்டமடைந்தார்.விதி,வீம்பு, பழக்க வழக்கம் எல்லாம் கவிஞருக்கு எதிராக நின்றன.

திரைப்பட பாடலாசிரியராகக் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், சொந்தமாக படக்கம்பெனி தொடங்கி படங்களைத் தயாரித்தார். சில படங்கள் தோல்வி அடைந்ததால், அவர் பெரும் சோதனைகளை அனுபவிக்க நேர்ந்தது.

 கண்ணதாசன் தயாரித்த முதல் படம்‘மாலையிட்ட மங்கை’.  பட உலகில் இருந்து விலகி இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்கு, இப்படம் புதுவாழ்வு அளித்தது. நாடக நடிகையாக இருந்த மனோரமாவை, திரை உலகில் அறிமுகப்படுத்திய படம் இதுதான் முதல்பட வெற்றி அடுத்த படக்ட்தைத் தயாரிக்கும் ஆசையைத் தூண்டியது. இரண்டாவதாகத் தயாரித்த ‘சிவகங்கை சீமை’ சிறந்த படம். நடிப்பு, வசனம்,கதை அனைத்தும்  மெச்சும்படியாக  இருந்தன. ஆனால்,  வீரபாணடிய கட்டபொம்மனுக்குப் போட்டியாக  சிவகங்கைச் சீமையிலே  வெளியானதால்  தோல்வியடைந்தது.

 கட்டபொம்மனுக்கும், சிவகங்கை சீமைக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. இரண்டு படங்களும், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை சித்தரிப்பவை. ‘சிவகங்கை சீமை’யில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பி.எஸ்.வீரப்பா, டி.கே.பகவதி, வளையாபதி முத்துகிருஷ்ணன், குமாரி கமலா, எஸ்.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்தனர்.திரைக்கதை-வசனத்தை கண்ணதாசன் எழுத, கே.சங்கர் டைரக்ட் செய்தார். இது, கறுப்பு- வெள்ளை படம். படம் தயாரானதும், அதை ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கு கண்ணதாசன் போட்டுக்காட்டினார். படத்தைப் பார்த்த ஏவி.எம்., ‘படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால், கட்டபொம்மன் படத்துடன் மோதவேண்டாம். அந்த படம் வெளியாகி, இரண்டு  மாதங்களுக்குப் பிறகு வெளியிடுங்கள்’ என்று யோசனை தெரிவித்தார். இதை கண்ணதாசன் கேட்கவில்லை. கட்டபொம்மனும், சிவகங்கை சீமையும் ஒரே சமயத்தில் (1959 மே) வெளிவந்தன

 சிவாஜிகணேசன், பத்மினி, ஜெமினி கணேசன், எஸ்.வரலட்சுமி, ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடிக்க ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை பத்மினி பிக்சர்ஸ் தயாரித்தது. பி.ஆர்.பந்துலு டைரக்ட் செய்த இந்த படம், தமிழின் முதல் டெக்னிக் கலர் படம். சிவாஜியின்  உணர்ச்சிகரமான நடிப்பு  வீரபாண்டிய கட்ட பொம்மனை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. சிவாஜிகணேசனின் அற்புத நடிப்பு, பிரமாண்டமான சண்டைக்காட்சிகள், கண்ணைக் கவரும் வண்ணம்- இவற்றால், கட்டபொம்மன் ஓகோ என்று ஓடியது. ஆனால் சிவகங்கை சீமை தரமானதாக இருந்தும் கட்டபொம்மனை எதிர்த்து நிற்க முடியாமல் தோல்வி அடைந்தது

  ‘சிவகங்கைச் சீமை’ படத்தால் தொண்ணூறாயிரம்ரூபா நஷ்டமடைந்தார்.  அதை ஒரு வருஷத்திற்குள் தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருக்கலாம்.ஆனால், வலிமையான விதிகண்ணதாசனை பற்றியது. மேலும் மேலும் இழுத்தது.    `கவலை இல்லாத மனிதன்’ என்றொரு படத்தை ஆரம்பித்த கவிஞர் கவலையில் இருந்து மீள முடியாமல் தவித்தார். கண்ணதாசனின்  நிலமையை அறிந்த    இயக்குநர்  பீம்சிங் உதவி செய்ய முன் வந்தார்.சிவாஜி நடிக்க  ஒரு படத்தை இயக்க  ஒபுக்கொண்டார்.சிவாஜி பிம்சிங்  இணைந்த படங்கள் வெற்ரி பெற்ற காலம் அது.  விதி வலியது.  கண்ணதாசன் கேட்கவில்லை. சந்திரபாபுவை கதாநாயகனாக்கி கவலை இல்லாதமனிதனை எடுத்தார். சிவாஜியை விட அதிக சம்பளத்தைக் கேட்டார் சந்திரபாபு.  கண்ணதாசன் ஒப்புக்கொண்டார்.  சந்திரபாபுவின்  ஏமாற்ரு வேலைகள் பற்ரி பலரும் கண்ணதாசனுகு எடுத்துக் கூறினார்கள். நண்பன் கைவிடமாட்டான் என கண்ணதாசன் நம்பினார்.

நன்றி இல்லாத ஊழியர்கள், பொறுப்பில்லாத பார்ட்னர், எல்லாருமாகச் சேர்ந்து பணத்தைப் பாழாக்கினார்கள். சந்திரபாபு தன் வழக்கப்படி, பேசிய தொகைக்கு மேல் கேட்டுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்தார். அந்தத் துயரங்களையும், அவமானங்களையும் சொல்லாமலிருக்க முடியவில்லை. நான்கு நாட்களில் எடுக்க வேண்டிய `கிளைமாக்ஸ்’ கட்டத்தை, நான்கு மணி நேரத்தில் எடுத்தார்கள்>முழுமுதற்காரணம் சந்திரபாபு.

தான் அனுபவித்த துயரங்களை கண்ணதாசன் சுயசரிதையில் சொல்லியுள்ளார்.

அன்று காலை ஏழு மணிக்கு ‘ஷூட்டிங்.’ எடுக்கப்பட வேண்டியதோ ‘கிளைமாக்ஸ்’ கட்டம். டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, ராஜசுலோசனா அத்தனை பேரும் `செட்’டிற்கு வந்துவிட்டார்கள். பேசிய தொகைக்கு மேல் இருபதாயிரம் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருந்தும் கூட, சந்திரபாபு சரியாக வரமாட்டார் என்பதாலே அதிகாலையில் குளிக்கக்கூட இல்லாமல் நானே அவர் வீட்டிற்குப் போனேன். அவர் தூங்குவதாகச் சொன்னார்கள். நான் வெளியில் சோபாவில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருந்தேன். பொறுத்துப் பொறுத்து பார்த்துவிட்டு, பையனைக் கூப்பிட்டு, ‘சந்திரபாபு எழுந்துவிட்டாரா?’ என்று கேட்டேன்.

‘அவர் பின்பக்கமாக, அப்பொழுதே போய்விட்டாரே’ என்றான் பையன். இந்த அவமானம் மட்டுமல்ல. படம் என்ன ஆகுமோ என்ற பயம், கடன்காரர்களுக்கு என்ன சொல்லப் போகிறோம் என்ற கவலை – எல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டன. பிறகு, நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களிடம் சொல்லி அழுதேன். அவரும், அண்ணன் டி.எஸ்.பாலையா அவர்களும் காரை எடுத்துக்கொண்டு, சந்திரபாபுவைத் தேடி அலைந்ததை என்னால் மறக்கமுடியாது. 1960 செப்டம்பர் மாதம் படம் வெளியானபோது என்னை கடன்காரனாக நிறுத்தின.

அன்றைய கணக்குப்படி ஐந்து லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடன். பின்நாளில் வட்டி ஏறி, ஏழு லட்சமாகப் பரிணமித்தது. தோல்விகளையும், துயரங்களையும் தாங்கிக் கொள்வதில் எனக்குப் பழக்கம் உண்டு; சிறு வயதில் இருந்தே அந்த அனுபவம் உண்டு. ஆகவே, `கவலை இல்லாத மனிதன்’ படத்தின் தோல்வி என்னை விரக்தி அடையச் செய்யவில்லை. ஆனால், அது உருவாக்கிக் கொடுத்த ஆறு லட்ச ரூபாய்க் கடன், அடிக்கடி என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது என் கம்பெனியின் பெயரில் பதினோரு கார்கள் இருந்தன. ஏழு `பியட்’ கார்கள், இரண்டு `ஹிந்துஸ்தான்’ கார்கள், ஒரு `பிளைமவுத்’ கார், ஒரு `ஸ்டேஷன் வேகன்’ கம்பெனிக்கு எதிரே அந்தக் கார்களை நிறுத்தி வைத்தால் கம்பெனியில் ஏதோ விழா நடப்பது போல் தோன்றும். அத்தனை கார்களிலும் ஒரே ஒரு பியட் காரை மட்டும் வைத்துக்கொண்டு, பாக்கி அனைத்தையும் கார் மீது பணம் கொடுத்தவர்களின் வீடுகளில் கொண்டு போய் விட்டு விட்டேன்.

சில கார்களின் மீது இரண்டாயிரம், மூவாயிரம்தான் பாக்கி இருந்தது என்றாலும், அந்தக் கார்களை விற்று மீதிப்பணத்தைக் கொடுக்கும்படி அவர்களிடமே சொல்லிவிட்டு வந்துவிட்டேன். யார் கொடுப்பார்கள்? அப்படி நாணயமானவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ஏதோ இரண்டொருவர் இரக்கப்பட்டுக் கொஞ்சத் தொகை கொடுத்தார்கள்; மற்ற அனைத்துமே போய்விட்டன. கம்பெனி வீட்டைக் காலி செய்து, இருந்த சாமான்களை எல்லாம் அள்ளிக் கொண்டு வந்து வீட்டிலே போட்டேன்.

சுமார் ஐம்பதினாயிரம் ரூபாய் பெறக்கூடிய ஆடையணிமணி உபகரணங்களை எல்லாம் எட்டாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டேன். வேலையாட்களையெல்லாம் நிறுத்திவிட்டேன். படம் எடுப்பதை நிறுத்திவிட்டேன், கம்பெனியை மூடிவிட்டேன் என்றதும், சுமார் முப்பது கடன்காரர்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்கள். 

மூன்று மாதங்களுக்குள்ளாக 34 வழக்குகள் கோர்ட்டுக்கு வந்துவிட்டன. நேரே வழக்கறிஞர் வி.பி.ராமனிடம் போனேன். ‘ஒரு வருஷத்துக்குள் பணம் சம்பாதித்து கடனை கட்ட முடியுமா?’ என்று கேட்டார் அவர். ‘முடியும்’ என்றேன். ஒரு பக்கம் கடன் வந்தால், ஒரு பக்கம் வரவு வரவேண்டும் அல்லவா? அந்தப் பக்கம் அடி விழுந்தபோது, இந்தப்பக்கம் ஏராளமான படங்களுக்கு சந்தர்ப்பம் வந்தது. நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு, பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கிற்று! இவ்வாறு கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.

‘கவலை இல்லாத மனிதன்’ படத்துக்குப்பிறகு, சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த கே.முருகேசனுடன் கூட்டு சேர்ந்து, ‘வானம்பாடி’ என்ற படத்தை கண்ணதாசன் எடுத்தார்.   இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது

ண்ணதாசனுடைய கடனில் ஒரு பகுதியை அடைக்க இப்படம் உதவியது. பின்னர், கோவை செழியனுடன் சேர்ந்து ‘சுமை தாங்கி’ என்ற படத்தைத் தயாரித்தார்.  இந்தப்படமும் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

‘மொத்தத்தில் அப்போதெல்லாம் ஏராளமாகப் பணம் புரண்டு விளையாடிற்றே தவிர, கையிலே தங்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார், கண்ணதாசன். 1962-ல் இந்தியா மீது சீனா படையெடுத்தது. அதை அடிப்படையாக வைத்து கண்ணதாசன் கதை-வசனம் எழுதிய ‘இரத்தத் திலகம்’ என்ற படத்தை பஞ்சு அருணாசலம் தயாரித்தார். சிவாஜிகணேசனும், சாவித்திரியும் நடித்த இப்படம் வெற்றிகரமாக ஓடியது.

இப்படத்தில் ஒரு காட்சியில், ‘பழைய மாணவர் முத்தையா’வாக கண்ணதாசன் தோன்றி, ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு; ஒரு கோலமயில் என் துணையிருப்பு’ என்று பாடுவார். 1964-ல் மீண்டும் சொந்தப் படத்தயாரிப்பில் ஈடுபட்டார், கண்ணதாசன்! படத்தின் பெயர் ‘கறுப்பு பணம்’ பாலாஜி, டி.எஸ்.பாலையா, கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்த இப்படத் தில் முக்கிய வேடத்தில் கண்ணதாசனே நடித்தார். படம் சுமாராகத்தான் ஓடியது.

‘கவலை இல்லாத மனிதன்’ அனுபவத்திற்குப் பிறகும் சொந்தப்படம் தயாரித்தது பற்றி கண்ணதாசன் பின்னர் எழுதும்போது, ‘ஒரு தவறு செய்துவிட்டு, அது தவறு செய்துவிட்டேன் என்று குறிப்பிட்டார்.

No comments: