Saturday, November 4, 2023

கண்காணிக்கப்படும் எதிர்க் கட்சித் தலைவர்கள்

அரசாங்கத்தின் புலனாய்வும், கண்காணிப்பும் எதிரி நாட்டின்மீதுதான்  இருக்க வேண்டும். ஆனால், சில அரசாங்கங்கள் தமது நாட்டின் எதிர்க் கட்சித் தலைவர்களை  வேவு பார்ப்பதில் கண்ணும் கருத்துமாக  இருக்கின்றன. மோடியின் அரசாங்கம் தமது நடவடிக்கைகளைக் கண்காணிப்பதாக  இந்திய எதிர்க் கட்சித்தலைவர்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.

ஐபோன்களில் இருந்து எச்சரிக்கை வெளியான  பின்னரே தாம் கண்காணிக்கப்படுவதாக எதிர்க் கட்சித்தலைவர்களுக்குத் தெரியவந்துள்ளது. இஸ்ரேல் பெகாசஸ் விவகாரத்தை இந்தியர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இந்தியாவில் உள்ள பிரபலங்கள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களின் செல்போன்களை ஹேக் செய்து மத்திய அரசு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதேபோல் ஒரு சம்பவம் தற்போது வெடித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களின் ஐபோன்களை மத்திய அரசு உதவியுடன் ஹேக்கர்கள் கண்காணித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, ஐபோனில் பேசுவதை ஒட்டுக் கேட்பதாகவும், -மெயில் பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக எச்சரிக்கைச் செய்திகள் அப்பிள் நிறுவனத்திடம் இருந்து சம்பந்தப்பட்டவர்களின் மொபைலுக்கு வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை பொறுத்தவரை பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் மேம்பட்ட வசதிகளை செய்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட வகையில் ஒட்டுக்கேட்பு விஷயங்கள் நடந்தால் உடனே எச்சரிக்கைச் செய்தியை அனுப்பிவிடும்

 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளில் உள்ள தலைவர்களின்அப்பிள்' ஐபோன்களுக்குஎச்சரிக்கை' செய்தி  ஒன்று சென்றது. அந்த செய்தியில்,

 ‛‛'ஸ்டேட் ஸ்பான்சர்டு அட்டாக்கர்ஸ்' மூலம் உங்கள் செல்போன் குறிவைக்கப்படுகிறது. உங்களின் ஐபோனை வேறு இடத்தில் இருந்து இயக்க முயற்சிக்கிறார்கள்.அரசு உதவியுடன் இயங்கும் இந்த ஹேக்கர்கள் ஹேக் செய்துவிட்டால், அதன் பின் எங்கிருந்தும் ஐபோனையும், அதில் உள்ள தகவல்களையும் பயன்படுத்த முடியும். இது தவறான அலர்ட்டாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருங்கள்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

  காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் சசிதரூர், பவன் கேரா, கேசி வேணுகோபால், சுப்ரியா ஸ்ரீநாத், டிஎஸ் சிங்டியோ, பூபிந்தர் சிங் ஹூடா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (உத்தவ் அணி) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம்ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சதா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ராகுல் காந்தியின் சில உதவியாளர்களுக்கு சென்றுள்ளது. இதையடுத்து மத்திய பாஜக அரசு தங்களை உளவு பார்த்து, ஒட்டுகேட்க முயற்சிப்பதாகவும், செல்போன் தகவல்களை திருட முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை முற்றாக மருத்துள்ள இந்திய அரசு  விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக  பத்திரிகையாளர் சந்திப்பில் பல தகவல்களை ஆதாரங்களுடன் ராகுல் காந்தி வெளிப்படுத்தினார்

எனது அலுவலகத்திலும் பலருக்கு இந்த மெசேஜ் வந்துள்ளது. இளைஞர்களின் கவனத்தை திசை திருப்ப பாஜக முயற்சிப்பதாக தெரிவித்தார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எவ்வளவு வேண்டுமானாலும் உளவு பார்த்து கொள்ளுங்கள். எங்களுக்கு கவலையில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அப்பிள் நிறுவனம், சுமார் 150 நாடுகளை சேர்ந்த ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. வெவ்வேறு காலங்களில் இதுபோன்ற தகவல்கள் பல காரணங்களுக்காக அனுப்பப்படுவது வழக்கம் தான் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய மத்திய அரசை எதிர்க்கும் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் அரசியல்வாதிகளும்பிரமுகர்களும்  இதனால் பாதிக்கப்படவில்லை.

எந்த ஒரு குறிப்பிட்ட அரசையும் நாங்கள் குற்றம்சாட்டவில்லை. State-sponsored attackers என்றால் அதிகப்படியான நிதி, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், காலத்திற்கு ஏற்ப அட்டாக்கிங்கில் மேம்பட்டு காணப்படுவர். இவர்களின் அட்டாக்குகளை கண்டறிவது அச்சுறுத்தல் சார்ந்த உளவுத்துறை சிக்னல்களை பொறுத்தே அமையும். ஆனால் அது எல்லா நேரங்களிலும் சாத்தியமில்லை. சில எச்சரிக்கை மெசேஜ்கள் தவறாக கூட இருக்கலாம்.

ஆனால் அதன் பின்னணி காரணங்களை சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அட்டாக்கர்கள் உஷாராகி தங்களது அட்டாக்கிங் ஸ்டைலை வருங்காலத்தில் மாற்றிக் கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அப்பிள் நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவின் 26 எதிர்க் கட்சிகள்  ஒன்றிணைந்து   மிகப் பெரிய கூட்டணியை அமைத்துள்ளன.   தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராகும்  மோடியில் கனவுக்கு இந்தியக் கூட்டணி சவாலாக  உள்ளது. ஆட்சிஅயித் தக்க வைப்பதற்காக மோடியின் அரசு எந்த எல்லைக்கும் செல்லவாய்ப்பு உள்ளது என்பது கடந்தகால வரலாறு.

ரமணி

 

சச்சினை முந்திய ரச்சின் 23 வயதில் புதிய 2 உலக சாதனை

பெங்களூரு சின்னசாமி மைதானத்தைல் நடக்கும்  பாகிஸ்தானுக்கு எதிடான  போட்டியில் நியூஸிலாந்தின்  இளம் வீர ரச்சின் ரவீந்திர  புதிய சாதனைகள் படைத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

கப்டன் கேன் வில்லியம்ஸ்னுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி  ரச்சின் ரவீந்திர  2வது விக்கெட்டுக்கு 180 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து 11 பவுண்டரி 1 சிக்ஸருடன் 108 (94)ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். உலகக் கிண்ணத்தில்  முதல் முறையாக விளையாடும் அவர் ஏற்கனவே 2 சதங்கள் அடித்திருந்த அவர் இதையும் சேர்த்து மொத்தம் 3 சதங்களை பதிவு செய்துள்ளார்.

உலகக்கோப்பை வரலாற்றில்  அறிமுக தொடரிலேயே 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற   சாதனையை ரச்சின் ரவீந்திர படைத்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டியில்  கோப்பையில் 3 சதங்கள் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற மற்றுமொரு சரித்திரத்தையும் அவர் படைத்துள்ளார்.

கிளன் டர்னர் (1975) மார்ட்டின் கப்டில் (2015) கேன் வில்லியம்சன் (2019) ஆகியோர் தலா 2 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது மட்டுமல்லாமல் உலகக்கோப்பை வரலாற்றில் 24 வயதுக்குள் அதிக சதங்கள் (3) அடித்த வீரர் என்ற இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் உடைத்துள்ள ரச்சின் ரவீந்திர  புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் 24 வயதுக்குள் 2 சதங்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

 

Friday, November 3, 2023

இங்கிலாந்தை வெளியேற்றிய ஆப்கானிஸ்தான்

 

இந்தியாவில் நடைபெறும் உலகக்கிண்ண  லீக் போட்டியில் நெத்ர்லாந்த 7 விக்கெட்களினால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்பி உள்ளது.

தலைநகர் டெல்லியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக வெற்றியைப் பதிவு செய்த ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பையில் 14 தொடர்ச்சியான தோல்விகளை நிறுத்தி வெற்றி வாகை சூடியது.

 அதே வேகத்தில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பாகிஸ்தானையும் பந்தாடிய ஆப்கானிஸ்தான் 7 தொடர் தோல்விகளை நிறுத்தி வரலாற்றில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து மாபெரும் சரித்திரம் படைத்தது.

1996 உலக சாம்பியன் இலங்கையையும் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தற்போது நெதர்லாந்தையும் வீழ்த்தி மொத்தம் 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை முந்தி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் தங்களுடைய அடுத்த 2 போட்டிகளில் வென்றால் செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பு ஆப்கானிஸ்தானுக்கு பிரகாசமாகியுள்ளது.

அடுத்ததாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 வலுவான அணிகளுக்கு எதிராக மோதுவதால் அது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும் இதுவரை வெளிப்படுத்திய கடின உழைப்பால் கிடைத்த 4 வெற்றிகளால் ஆப்கானிஸ்தானுக்கு மற்றுமொரு பரிசு கிடைத்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தற்போது நடைபெறும் உலகக் கோப்பையின் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப் 7 இடங்களை பிடிக்கும் அணிகளே தேர்வு செய்யப்பட உள்ளன.

முதல் அணியாக தொடரை நடத்தும் பாகிஸ்தான் ஏற்கனவே தேர்வாகியுள்ளது. அதைத்தொடர்ந்து புள்ளி பட்டியலில் டாப் இடங்களில் இருக்கும் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகளும் இப்போதே தேர்வாகியுள்ளன. குறிப்பாக அடுத்த 2 போட்டிகளில் தோற்றாலும் ஆப்கானிஸ்தான் டாப் 6 இடத்திற்கு கீழே செல்லாது என்பதால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக் இப்போதே தகுதி பெற்றுள்ளது.

\வரலாற்றிலேயே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஆப்கானிஸ்தான் தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். அப்படி புதிய வரலாற்றை எழுதி ஆப்கானிஸ்தான் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு டாட்டா காட்டி பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இன்னும் 2 இடங்கள் தகுதி பெறுவதற்கு காலியாக இருக்கும் நிலையில் புள்ளிப்பட்டியில் கடைசி இடத்தில் தவிக்கும் இங்கிலாந்து கடைசி 2 போட்டியில் வென்றால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Thursday, November 2, 2023

உலகக்கிண்ணத்தில் நவசரக் குறியீடுகளின் அர்த்தம்

இந்தியாவில் நடைபெறும் உலகக்கிண்ணத் தொடரில்  சம்பியன்  கிண்ணத்தை வைக்கும் மேசை முதல் மைதானங்களில் சுற்றியிருக்கும் பலகைகள் வரை 9 வித்தியாசமான குறியீடுகள் இருப்பதை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் அதை தினந்தோறும் பார்த்தாலும் அது என்னவென்று தெரியாமல் ஏதோ ஒரு வகையான டிசைன் என்று நினைத்துக் கொண்டு ரசிகர்கள் போட்டியை பார்த்து வருகிறார்கள் என்றே சொல்லலாம். இருப்பினும் அந்த 9 குறியீடுகளும் ரசிகர்களின் 9 வெவ்வேறான உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் வகையில் ஐசிசி வடிவமைத்துள்ளது. 

  இந்த 9 குறியீடுகளில் முதலாவதாக ஒரு புள்ளியை வைத்தார் போல் இருப்பது ரசிகர்களின் “மகிழ்ச்சியை” குறிப்பதாகும்.

 2வது குறியீடு உலகக் கிண்ணப் போட்டி  நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் ரசிகர்கள் எனும் “சக்தியை” குறிக்கும் வகையில் சூரியனை பிரதிபலிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

3வது க்றியீடு தாக ரசிகர்களுக்கு  மதிப்பு கொடுத்து “வரவேற்கிறோம்” என்பதை உணர்த்தும் வகையில் கையெடுத்து கும்பிடுவது போன்ற குறியீடு இருக்கிறது.

 ரசிகர்களாலேயே உலகக் கிண்ணத்துக்குப் “பெருமை” என்பதை 4வது குறியீடு உணர்த்துகிறது.

 5வது குறியீடு “தைரியத்தை” காட்டும் வகையில் ஈட்டியின் நுனி.

 6வது குறியீடு “வெற்றியை” உணர்த்தும் வகையில் மின்னும் நட்சத்திரம் போன்ற வடிவமைப்பை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

7வதாக இரவு நேரத்தில் வானத்தில் வெடிக்கும் பட்டாசு போன்ற குறியீட்டை பயன்படுத்தி “ஆச்சரியத்தை”  வெளிப்படுத்துகிTஅது.

8வது குறியீடாக ரசிகர்களின் “ஆர்வத்தையும்” வடிவமைத்துள்ள ஐசிசி 9வதாக தோல்வியை சந்திக்கும் போது வெளிப்படும் “வேதனையை” குறிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.   9 வெவ்வேறு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நவரச குறியீடாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தெரிந்தசினிமா தெரியாத சங்கதி - 85


 

நகைச்சுவை நடிகை சச்சுவின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள புதுப்பாடி. இவரது தாத்தா ராமநாத அய்யர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.

இவரது தந்தை சுந்தரேசன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர். சென்னை மண்ணடியில் 1943 ஆம் ஆண்டு பிறந்தவர் சச்சு. இவருக்கு சரஸ்வதி என்று பெயர் வைத்தனர். சச்சு என்று பெயரை சுருக்கி அழைத்ததால்  அதுவே நிரந்தர பெயராகி விட்டது.

சச்சுவின் அக்காள் லட்சுமியை, சென்னை மைலாப்பூரில் வசித்து வந்த அவரது பாட்டி எடுத்து வளர்த்தார். சச்சுவிற்கு நான்கு வயது ஆனதும், அவரையும் மைலாப்பூருக்கு அழைத்துச் சென்று வளர்த்தார் பாட்டி.

சச்சுவின் பாட்டி வீட்டில், பரத நாட்டிய கலைஞர் தண்டாயுதபாணி பிள்ளை வாடகைக்கு குடியிருந்தார். அவர் திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்து வந்தார். தண்டாயுதபாணி பிள்ளையிடம் சச்சுவின் சகோதரி 'மாடி' லட்சுமியும் பரத நாட்டியம் கற்று கொண்டார். அங்கு பலரும் நாட்டியம் ஆடுவதை பார்க்க செல்வார் சச்சு. அவர்கள் ஆடுவது போலவே இவரும் ஆடுவார். அவரின் ஆர்வத்தைப் பார்த்த தண்டாயுதபாணி பிள்ளை, சச்சுவுக்கும் நடனம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.

கோவை சென்டிரல் ஸ்டூடியோவில் ஜுபிடர் பிக்சர்சார் 'விஜயகுமாரி' என்ற படத்தை எடுத்தனர். கே.ஆர்.ராமசாமி - டி.ஆர்.ராஜகுமாரி நடித்த இப்படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். 1950-ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சச்சுவின் அக்காள் மாடி லட்சுமி ஒரு பாடலுக்கு நாட்டியமாட வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்புக்கு, மாடி லட்சுமியுடன் அவரது பாட்டி சச்சு ஆகியோரும் செல்வது வழக்கம்.

1952-ம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்சார் `ராணி' என்கிற படத்தை எடுக்க திட்டமிட்டனர். படத்தின் கதாநாயகி பானுமதி. அவருடைய குழந்தைப்பருவ வேடத்திற்கு, ஒரு குழந்தை நட்சத்திரத்தைத் தேர்வு செய்து இருந்தார் இயக்குனர் எல்.வி.பிரசாத்.

அந்த குழந்தைக்கு படப்பிடிப்பின் போது உடல் நிலை சரியில்லாமல் போனதால், அப்போது சச்சுவை பார்த்த இயக்குனர் எல்.வி.பிரசாத், அவரை அந்த வேடத்தில் நடிக்க வைத்தார்.

சச்சுவின் தாயார் ஜெயா இசை நிகழ்ச்சிகளுக்கும், நாடகத்திற்கும் செல்வது உண்டு. அவருக்கு கலைகள் மீது பெரும் மரியாதை உண்டு. ஆனால், இவரது தந்தைக்கு பிடிக்காது. முதலில் அக்காள் மாடி லட்சுமி நடிக்க சென்ற போது எதிர்த்தார். நடனம் தெரிந்தவர். நடனக் காட்சிகள் என்பதால் பிறகு ஒத்துக் கொண்டார்.

'ராணி' படத்தில் சச்சுவை நடிக்க அழைத்த போதும் அதே போல எதிர்த்தார். அம்மா ஜெயா, அவரை சமாதனப் படுத்தி நடிக்க சம்மதம் வாங்கினார். குழந்தை நட்சத்திரமாக ராணி படத்தில் நடித்த சச்சுவின் திறமையை வியந்து குடும்பத்தினர் அனைவரும் பாராடினார்கள். தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் நடிக்க சம்மதித்தனர். இதனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் டியூசன் வைத்து இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகள் சொல்லிக் கொடுத்தார்கள். கர்நாடக சங்கீதமும் கற்றுக்கொண்டார்.  1950களிலேயே குழந்தை நட்சத்திரமாக நன்கு அறியப்பட்ட, அனைவராலும் கொண்டாடப்பட்ட குட்டி நட்சத்திரம் என்.எஸ்.சரஸ்வதி என்ற குமாரி சச்சு. இவருக்கு முன்னதாகவே பி.கே.சரஸ்வதி, சி.கே.சரஸ்வதி என பல சரஸ்வதிகளின் கடாட்சம் திரையுலகுக்கு இருந்ததால் இவர் சுருக்கமும் இனிமையுமாக சச்சு ஆனார். 

அவருக்கு புகழ் தேடித் தந்த படம் 'தேவதாஸ்.' 1953-ல் வெளியான இப்படத்தில், சிறு வயது சாவித்திரியாக சச்சு நடித்தார். 'ஓ... தேவதாஸ்' என்று சச்சுவும், 'ஓ... பார்வதி' என்று மாஸ்டர் சுதாகரும் நடித்த காட்சி, ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

தொடர்ந்து, ஜெமினியின் 'அவ்வையார்' படத்தில், பால அவ்வையாராக நடித்தார். பின்னர் 1954-ல் பேரறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதி கே.ஆர்.ராமசாமியும், பத்மினியும் ஜோடியாக நடித்த 'சொர்க்க வாசல்' படத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.

பின்னர் 'மருமகள்', 'எதிர்பாராதது', 'சியாமளா', ஜெமினியின் இந்தி பாலநாகம்மா, மாயாபஜார் முதலிய படங்களில் நடித்தார். 12 வயது ஆன பிறகு 'கோடீஸ்வரன்' படத்தில் சிவாஜியின் தங்கையாகவும், 'கலையரசி' படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாகவும் நடித்த இவர், சிவாஜி - பத்மினி நடித்த 'மரகதம்' படத்தில், ஒரு நடனக் காட்சியில் ஆடினார்.

குழந்தை நட்சத்திரமாகவும், தங்கை வேடங்களிலும் நடித்து வந்த சச்சு, 1962-ல் 'வீரத்திருமகன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய இப்படம், அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. 'ரோஜா மலரே ராஜகுமாரி' என்ற புகழ் பெற்ற பாடல் இவருக்கு பெருமை சேர்த்தது.   மிகவும் பழமையும், பாரம்பர்யமும் மிக்க குடும்பத்தில் பிறந்து, தனது சிறந்த நாட்டிய மற்றும் குணசித்திர நடிப்பின் மூலம் பிரபலமடைந்தவர்…மாயாபஜார் (குட்டி வத்சலா),வீரத் திருமகன் ஆனந்தன்( 1961, ரோஜா மலரே ராஜகுமாரி) தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் “அன்னை” ( அழகிய மிதிலை நகரினிலே, புத்தியுள்ள மனிதரெல்லாம்…சந்திரபாபு) போன்ற வெற்றி படங்கள் மூலம், ஜீபிடர், ஜெமினி, வாஹினி போன்ற பெரிய பானர்கள் இவர்றிலெல்லாம் வாய்ப்புகள் அவரை தேடிக் குவிந்தது.,  இயக்குனர் சிரீதரின் “காதலிக்க நேரமில்லை”, ஒரு பெரிய திருப்பு முனை என்பதை நாம் அறிவோம். திரு நாகேஷ் அவர்களுடன், காமெடி ட்ராக்…மலரென்ற முகமொன்று…சூப்பர் வெஸ்டர்ன் டான்ஸ்.! அதுபோல் கோவை செழியன் தயாரித்த ஊட்டிவரை உறவு , கே.பி. சாரின், பாமா விஜயம், பூவா தலையா போன்ற படங்கள் இன்னொரு மைல் கல். மேலும் சுருளிராஜன், தேங்காய் சீனீவாசன் மற்றும் திரு எம்.ஆர். ராதா போன்ற தமிழ் நகைச்சுவை ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றியவர் குமாரி சச்சு அவர்கள்.

அன்னை இல்லம்' படத்தில் இவர் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்தவர், 1964-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கிய "காதலிக்க நேரமில்லை'' படம் இவரை நகைச்சுவை நடிகையாக புகழ் பெற வைத்தது.

தொடர்ந்து, ஊட்டி வரை உறவு, சிவந்த மண், உரிமைக்குரல், பொம்மலாட்டம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, கலாட்டா கல்யாணம், பூவா தலையா' உள்பட பல படங்களில் சச்சு நடித்தார். அதில் பூவா தலையா படத்தின் வேடம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. "மாட்டுக்கார வேலன்'' படத்தில், பெண் "சி.ஐ.டி''யாக நடித்தார்.

1970-ம் ஆண்டு, "நீரோட்டம்'' என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து தேவியர் இருவர், மெழுகு பொம்மைகள், தோப்பில் தென்னை மரம், சக்கரம் சுழல்கிறது, முதியோர் இல்லம் உள்பட பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார்.

தினேஷ் - கணேஷ், மேல்மாடி காலி, காஸ்ட்லி மாப்பிள்ளை, மாண்புமிகு மாமியார், இப்படிக்கு தென்றல் போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்திப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கியவர்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, என்.எஸ்.கே. விருது, எம்.ஜி.ஆர். விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். தியாக பிரம்மா கானா சபா விருதினை எம். எஸ். சுப்புலட்சுமியிடமும், ஸ்ரீ கிருஷ்ணா கானா சபாவின் நாடக சூடாமணி விருதும் பெற்றவர்.

எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி,  அண்ணா இப்படி ஐந்து முதல்வர்களுடன் பனியாற்றிய சிறப்பு உடையவர் குமாரி சச்சு.

காஸாவை ஆக்கிரமிக்கத் தயாராகிறது இஸ்ரேல்

காஸா மீது தரைப்படை ஆக்கிரமிப்புக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை தெரிவித்தார். இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் பலஸ்தீன குடிமக்கள் கொல்லப்பட்டனர். சர்வதேச அழுத்தம் ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளை பாதுகாக்கவும் உதவியது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளால் இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலுடன் வெடித்த போரைத் தாண்டிய கருத்துக்களில், எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இரு நாடு தீர்வு இருக்க வேண்டும் என்றார்.

இஸ்ரேல் அதன் அரபு அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், என்றார்.

"இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் சமமாக பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அமைதியுடன் அருகருகே வாழ தகுதியானவர்கள்" என்று பிடென் வாஷிங்டனில் நடந்த கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் கூறினார்.

ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேலைத் தாக்கி, 1,400 பேரைக் கொன்று, 200க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாட்டினரைப் பணயக் கைதிகளாகக் கைப்பற்றியதற்கு ஒரு காரணம், இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையேயான உறவுகளை இயல்பாக்குவதைத் தடுப்பதற்காகத்தான் என்று பிடென் நம்புவதாகக் கூறினார்.

இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல்களில் 6,500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் ஸ்ட்ரிப் பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸால் இரு தரப்பு உயிரிழப்பு புள்ளிவிவரங்களை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது பற்றி பாலஸ்தீனியர்கள் உண்மையைச் சொல்கிறார்கள் என்று தனக்கு எதுவும் தெரியாது என்று பிடன் கூறினார். "அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன், அது ஒரு போரை நடத்துவதற்கான விலை."

ஐக்கிய நாடுகள் சபையில், ரஷ்யாவும் சீனாவும், பாலஸ்தீனிய குடிமக்களுக்கு மிகவும் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை வழங்குவதற்கு, பகைமைகளுக்கு இடைநிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா தயாரித்த பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை வீட்டோ செய்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸும் வேண்டாம் என்று வாக்களித்தது, 10 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர் மற்றும் இருவர் வாக்களிக்கவில்லை.

ரஷ்யா ஒரு பரந்த போர்நிறுத்தத்தை ஆதரிக்கும் ஒரு போட்டித் திட்டத்தை முன்வைத்தது, ஆனால் குறைந்தபட்ச வாக்குகளைப் பெறத் தவறிவிட்டது. இஸ்ரேல் இரண்டையும் எதிர்த்துள்ளது, ஹமாஸ் காசா குடிமக்களுக்கு புதிய அச்சுறுத்தல்களை மட்டுமே சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று வாதிட்டது.

எகிப்தில் இருந்து உணவு, மருந்து மற்றும் தண்ணீரின் வரையறுக்கப்பட்ட விநியோகங்கள் சனிக்கிழமையன்று ரஃபா வழியாக மீண்டும் தொடங்கப்பட்டன, இது இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்படாத ஒரே குறுக்குவழியாகும்.

ஜெருசலேமில், காசாவிற்குள் படைகள் எப்போது செல்வது என்பது குறித்து அரசாங்கத்தின் சிறப்பு போர் அமைச்சரவை முடிவு எடுக்கும் என்று நெதன்யாகு கூறினார், ஆனால் நேரம் அல்லது நடவடிக்கை பற்றிய பிற தகவல்களை வழங்க அவர் மறுத்துவிட்டார்.

"நாங்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை கொன்றுள்ளோம், இது ஒரு ஆரம்பம் மட்டுமே" என்று நெதன்யாகு ஒரு தொலைக்காட்சி அறிக்கையில் கூறினார். "ஒரே நேரத்தில், நாங்கள் தரைவழிப் படையெடுப்புக்குத் தயாராகி வருகிறோம். எப்போது, ​​எப்படி, எத்தனை என்பதை நான் விரிவாகக் கூறமாட்டேன். நாங்கள் செய்யும் பல்வேறு கணக்கீடுகளைப் பற்றி நான் விரிவாகக் கூறமாட்டேன், இது பொதுமக்களுக்கு அதிகம் தெரியாது, அப்படித்தான் இருக்க வேண்டும். ."

காசாவின் எல்லையில் இஸ்ரேலிய டாங்கிகளும் துருப்புகளும் ஆர்டர்களுக்காகக் காத்திருக்கின்றன. இஸ்ரேல் சுமார் 360,000 முன்பதிவு செய்பவர்களை அழைத்துள்ளது.

காசா மீதான எந்தவொரு படையெடுப்பையும் தாமதப்படுத்த சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது, பணயக்கைதிகள் காரணமாக அல்ல. ஹமாஸ் பிடியில் இருக்கும் 220 பணயக்கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 25 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ளனர் என்று இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், காசா மீது படையெடுப்பதைத் தாமதப்படுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தது, இதனால் அமெரிக்கா அங்குள்ள அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்க ஏவுகணைத் தடுப்புகளை அப்பகுதிக்கு விரைந்துள்ளது, இது காசா போர் பற்றிய கவலையை பிரதிபலிக்கிறது. மத்திய கிழக்கு.

 

இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளை இப்பகுதியில் வைக்கும் வரை இஸ்ரேலை நிறுத்துமாறு அமெரிக்க அதிகாரிகள் இதுவரை வற்புறுத்தியுள்ளனர் என்று ஜர்னல் தெரிவித்துள்ளது.

அறிக்கையைப் பற்றி கேட்டதற்கு, அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம், ஈரான் மற்றும் ஈரானிய ஆதரவு இஸ்லாமியக் குழுக்கள் மத்திய கிழக்கில் அமெரிக்க துருப்புகளைத் தாக்குவதன் மூலம் மோதலை அதிகரிக்கக்கூடும் என்று இஸ்ரேலுடன் தனது கவலைகளை வாஷிங்டன் எழுப்பியுள்ளது என்று கூறினார். காசாவில் இஸ்ரேலிய ஊடுருவல் ஈரானிய பினாமிகளுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

தெற்கு காசா மீது இஸ்ரேல் குண்டுவீச்சுகளை முடுக்கிவிட்டதால், மத்திய கிழக்கில் பிற இடங்களில் வன்முறை வெடித்தது மற்றும் பாலஸ்தீனிய குடிமக்களுக்கு உதவுவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு மோதல் ஏற்பட்டது, அவர்களில் நூறாயிரக்கணக்கானோர் வடக்கிலிருந்து தெற்கே சிறிய கடற்கரைப் பகுதியில் தப்பி ஓடிவிட்டனர்.

ஹமாஸ் போராளிகளை அழித்தொழிக்க முக்கியமாக வடக்கில் குண்டுகளை வீசுவதாக இஸ்ரேல் எச்சரித்திருந்தது.

புதன்கிழமை உயிரிழந்தவர்களில், தெற்கு நகரமான ரஃபாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் வேலை முகமை (UNRWA) பள்ளிக்கு அருகே வான்வழித் தாக்குதலில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 44 பேர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீனிய அகதிகளுக்கு பொறுப்பான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பள்ளி 4,600 பேருக்கு அடைக்கலம் அளித்தது மற்றும் கடுமையான இணை சேதத்தை சந்தித்தது, UNRWA அறிக்கை கூறியது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஏற்கனவே காசாவிற்கு அப்பால் அதிகரித்த மோதலைத் தூண்டியுள்ளது.

ஈரானின் நட்பு நாடான சிரியாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகளுக்கு பதிலடியாக இஸ்ரேலிய போர் விமானங்கள் சிரிய இராணுவ உள்கட்டமைப்பை தாக்கின.

தென்மேற்கு நகரமான டெராவுக்கு அருகில் இஸ்ரேல் எட்டு வீரர்களைக் கொன்றதாகவும், ஏழு பேர் காயமடைந்ததாகவும், வடமேற்கில் உள்ள அலெப்போ விமான நிலையத்தைத் தாக்கியதாகவும் சிரிய அரசு ஊடகம் கூறியது.

சிரிய இராணுவம் ராக்கெட்டுகளை ஏவுவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டவில்லை, ஆனால் சிரியாவில் குறிப்பிடத்தக்க இராணுவ மற்றும் பாதுகாப்பு இருப்பைக் கொண்ட அதன் பரம எதிரியான ஈரான் மீது சந்தேகம் கொண்டுள்ளது.


 ஈரான் பல தசாப்தங்களாக பிராந்திய உயர்வை நாடியது மற்றும் சிரியா, லெபனான் மற்றும் பிற இடங்களில் உள்ள ஆயுதக் குழுக்களை ஆதரிக்கிறது. காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலை அது கோரியுள்ளது.

இஸ்ரேல் தனது படைகள் தெற்கு லெபனானில் ஐந்து படைகளையும் தாக்கி தாக்குதல்களை தயார் செய்ததாக கூறியது. லெபனானின் ஈரானிய ஆதரவு ஹெஸ்புல்லா குழு, காசா போர் வெடித்த பின்னர் இஸ்ரேலுடனான எல்லை மோதல்கள் மீண்டும் தொடங்கியதில் இருந்து அதன் போராளிகளில் 42 பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது.

Wednesday, November 1, 2023

எல்லை மீறும் இஸ்ரேல் எதிர்த்து நிற்கும் ஹமாஸ்

அமைதிப் பூங்காவாக இருந்த  அரபு நாடுகளுக்கிடையே இஸ்ரேல்,  பாலஸ்தீனப்  பிரச்சனை உருவானபோது அமைதியின்மையும் சேர்ந்து விட்டது. உலக நாடுகள் தலையிட்டு பஞ்சாயத்துச் செய்தபோதும், துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு,  கல்லெறி என்பன ஆங்காங்கே அடிக்கடி நடை பெற்றன. 

அரை நூற்றாண்டு காலமாக‌  இஸ்ரேல்  பாலஸ்தீனப்  பிரச்சனை என வரையறுக்கப்பட்ட  மோதல் கடந்த ஒக்டோபர்  7 ஆம் திகதிக்குப் பின்னர் இஸ்ரேல்  ஹமாஸ் யுத்தமாக  உருமாறியது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக  அரபு  நாடுகள்  இஸ்ரேல் மீது படையெடுத்த  போதும் அசராத  இஸ்ரேல்  ஹமாசின்  தாக்குதலால்  நிலை குலைந்தது.   இஸ்ரேல் இதுவரை  சந்திக்காத மிக  மோசமான அழிவை ஹமாஸ்  ஏற்படுத்தியது. ஒக்டோபர் 7  இஸ்ரேலின் கரிநாளாகப் பதிவாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எல்லை தாண்டி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பழிக்குப்பழியாக  காஸா மீது  இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. ஹமாஸ் நடத்திய  இரண்டு மணிநேர தாக்குதலுக்குப் பதிலடியாக  காஸா மீது மிக  மோசமான தாக்குதலை  இஸ்ரேல் நடத்துகிறது.

இஸ்ரேலின் வான்  நெளித்தாக்குதலால் வடக்கு காஸாவில் பெரும்பகுதி சேதமாகியுள்ளது. ஹமாஸைப் பழிவாங்குவாதற்காக காஸா மீது முதல் 12 நாள்களில் இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதல்களில்   4,000 பேர் பலியானார்கள்.  இவர்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் அடக்கம். 11 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுதவிர, ஹமாஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் நூற்றுக்கணக்கானவர்களைக்   இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது.

 ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் ஓராண்டு காலத்தில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களைவிட காஸாவில் ஒரே வாரத்தில் இஸ்ரேல் நிகழ்த்திய குண்டுவீச்சுகளின் எண்ணிக்கை அதிகம். காஸாவின் பரப்பளவு 365 சதுர கி.மீ. ஆப்கானிஸ்தானின் பரப்பளவு 652,864 சதுர கி.மீ. ஒப்பிடும்போது காஸாவை விட ஆப்கானிஸ்தான் 178,770% பெரிய நிலப்பரப்பு. இவ்வளவு சிறிய நிலத்துண்டில் இஸ்ரேல் நிகழ்த்தும் குண்டுவீச்சுக்கு மருத்துவமனைகள், ஐ.நா கட்டுப்பாட்டில் இருக்கும் அகதிகள் முகாம்கள், மசூதிகள், தேவாலயங்கள் என்று எதுவுமே தப்பவில்லை. ஹமாஸை வீழ்த்துவதற்கு இஸ்‌ரேலுக்கு தார்மீக நியாயங்கள் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

ஹமாஸ் இப்போது நிகழ்த்தியது மிகப்பெரிய தாக்குதல் என்பதால் உலகத்துக்கே தெரிந்தது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இஸ்‌ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீன மக்கள் மற்றும் குழுக்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் பாலஸ்தீனத் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 6,407. இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்புகள் 308. இஸ்ரேலின் தாக்குதல் இப்போதைக்கு  முடிவுக்கு வராது என்பதால்  உயிரிழப்புகளும், சேதங்களும்  மேலும் அதிகாரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஹமாஸ் என்ற அமைப்பையும் அதன் உறுப்பினர்களையும்  ஒட்டு மொத்தமாக அழிப்பதே  இஸ்ரேலின் நோக்கமாகும். காஸாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்த  இஸ்ரேல்  தயாராக  உள்ளது. ஆனால், அது இலேசுப்பட்ட காரியமல்ல எனப்தையும் இஸ்ரேல் அறியும்  காஸாவின் நிலப்பரப்பும், அங்குள்ள  உயரமான, நெருக்கமான கட்டடங்களும்  தரைவழித் தாக்குதலை ஹமாஸ்  முறியடிப்பதற்கு ஏதுவாக  உள்ளன.

இஸ்ரேலின் பதிலடி  28 நாட்களாகத் தொடருகிறது.  இஸ்ரேலிய துருப்புக்களும்,  டாங்கிகளும் புதன்கிழமை இரவு வடக்கு காஸாவுக்குள்   அதிரடித் தாக்குதல் நடத்தியதாக  இஸ்ரேல்  அறிவித்துள்ளது. ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸாவுக்குள்   இஸ்ரேலின்  பீரங்கிகள் அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளன. மேலும், அவர்களுடன் இஸ்ரேல் வீரர்களின் ஒரு படையும் காஸாவுக்குள் நுழைந்துள்ளது.  பல்வேறு இலக்குகளைக் குறிவைத்து  தாக்குதல் நடத்திய பின்னர்  சில மணி நேரம் கழித்து  அவை  மீண்டும் இஸ்ரேலுக்குத் திரும்பியதாகக் கூறப்பட்டுள்ளது.

 இஸ்ரேல் முழு வீச்சில் படையெடுப்பிற்கு ரெடியாகி வருவதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறிய நிலையில், காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் இந்தத் தாக்குதலைத் துல்லியமாகத் தாக்குதல் என விவரித்துள்ளது. காஸாவுக்குள் இறங்கியே இஸ்ரேல் பீரங்கிகள் பல பயங்கரவாத செல்கள், உள்கட்டமைப்பு எனப் பல இலக்குகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த கட்ட போருக்கான ஆயத்த நடவடிக்கையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சில மணி நேரத்தில் தாக்குதலை முடித்துவிட்டு அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக வெளியேறி இஸ்ரேல் பகுதிக்குத் திரும்பிவிட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அதில் பீரங்கி உள்ளிட்ட அதிநவீன ராணுவ வாகனங்கள் காசா பகுதிக்குள் நுழைவது தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ தெற்கு இஸ்ரேலின் அஷ்கெலோன் நகரில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், மற்றொரு வீடியோவையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அதில் வான்வழித் தாக்குதல், கட்டிடங்கள் ஏவுகணைகளால் தாக்கப்படுவது, புகை மண்டலம் சூழ்ந்த பகுதிகள் ஆகியவை வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

காஸா மீது முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிப்போம் என்று இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்த போதிலும், இன்னும் தாக்குதலைத் தொடங்காமல் தயக்கம் காட்டுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

 "இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே சிறு சலசலப்புகள் இருக்கிறது. முக்கிய பிரச்சனைகளில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் முடிவுகளை எடுப்பதில் இஸ்ரேலுக்கு இப்போது சிரமம் இருக்கிறது" என்கிறார்கள். இஸ்ரேல் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இஸ்ரேல் அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகளில் இந்த தகவல்களை மறுத்தே வருகிறது. பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவப்படை ஜெனரல்களுக்கு இடையே எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை என்றே இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், உண்மையில் நிலைமை வேறாக இருப்பதாகச் சர்வதேச பயங்கரவாதம் குறித்த ஆய்வுகளைச் செய்யும் ஐசிடி உளவுத்துறை வல்லுநரான பேட்ரிக் பெட்டேன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "காஸா மீது முழு வீச்சிலான படையெடுப்பு என்பதில்  தலைவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு இருக்கிறது.  இத்துடன் காஸா பகுதியில் இன்னும் பிணையக் கைதிகளும் இருக்கும் நிலையில், அது நிலைமையைச் சிக்கலானதாக மாற்றுகிறது. படையெடுப்பு ஆரம்பிக்கும் முன்பு அனைத்து பிணையக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்ரேல் கவனம் செலுத்தி வருகிறது" என்றார்.

 ஹமாஸ் படையிடம் அமெரிக்கர்கள் உள்ளிட்ட பலர் பிணையக் கைதிகளாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்து, அதில் பிணையக் கைதிகளுக்கு எதாவது ஆனால் அது சர்ச்சையாகவிடும். படையெடுப்பைத் தொடங்க இஸ்ரேல் தயக்கம் காட்ட இதுவும் ஒரு காரணமாகும். இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவு தரும் வகையில் பல உலக தலைவர்கள் இஸ்ரேலுக்கு நேரடியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பைடன் தொடங்கி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வரை பல சர்வதேச தலைவர்கள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தாலும் கூட காஸா மீது முழு வீச்சில் தாக்குதலை நடத்த வேண்டாம் என்றே சொல்கிறார்கள். காஸா மீதான படையெடுப்பைத் தாமதப்படுத்த அமெரிக்கா வலியுறுத்துகிறது.

காஸா மீதான படையெடுப்பு நடந்தால் அது மிகப் பெரிய ஒரு சங்கிலி எதிர்வினையை உருவாக்கும். இதனால் சண்டை அந்த பிராந்தியம் முழுக்க பரவும் என்று சர்வதேச நாடுகள் நம்புகிறது. இதனால் இஸ்ரேலுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்கள் காஸா மீதான படையெடுப்பை நடத்தக் கூடாது என்று கடுமையாக அழுத்தம் தருகிறார்கள்

காஸா  மீது தாக்குதலை ஆரம்பித்தால் அங்கே இருக்கும் பல நூறு கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதையை சமாளிக்க வேண்டியிருக்கும். இது பொதுவாகக் காஸா மெட்ரோ என்று அழைக்கப்படுகிறது. இந்த நெட்வொர்க் 400 கிமீ நீளம் கொண்டது என்று ஹமாஸே உறுதி செய்துள்ளது. இதைச் சமாளிப்பதும் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருக்கும். மேலும், ஹமாஸ் மட்டுமின்றி ஹிஸ்புல்லா மற்றும் வேறு சில அமைப்புகள் எனப் பல முனை தாக்குதல்களை இஸ்ரேல் எதிர்கொள்வதும் ஒரு சிக்கலாகும்.  

சுரங்கப்பாதைகள், ரொக்கெட் லாஞ்சர்கள் மற்றும் பிற தீவிரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் காஸா முழுவதும் சுமார் 250 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியது.  இஸ்ரேலின் தாகுதலால் 7,000 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு  நடைபெற்ற  ஆறு வார யுத்தத்தில் கொல்லப்பபட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கையை விட  இது அதிகமாகும். மூன்று மடங்கு அதிகமாகும். இஸ்ரேலின் தாக்குதலால் 7,000 பேர்  உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள‌து.  2,900 க்கும் மேற்பட்ட சிறார்களும் 1,500 க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. .

 காஸாவின் உயிரிழப்பு புள்ளிவிவரங்களில் தனக்கு "நம்பிக்கை இல்லை" என்று  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறியதை அடுத்து, சுகாதார அமைச்சகம் வியாழனன்று 200 பக்கங்களுக்கு மேல் இறந்த 6,747 பேரின் பெயர்கள், வயது மற்றும் பாலினம் உட்பட பட்டியலிடப்பட்ட ஆவணத்தை வெளியிட்டது. மேலும் 281 இறந்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஈரானுடன் இணைந்த குழுக்களால் கடந்த வாரத்தில் ஈராக்கில் குறைந்தது 12 முறையும், சிரியாவில் நான்கு முறையும் அமெரிக்க துருப்புக்கள் தாக்கப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஈராக்கில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதல்  முறியடிக்கப்பட்டது.சுமார் 900 துருப்புக்கள் அமெரிக்காவிலிருந்து மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் காசா மீது தரைப்படை ஆக்கிரமிப்புக்கு தயாராகி வரும் நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள தளங்களில் நூற்றுக்கணக்கான அமெரிக்க துருப்புகளுக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலின் பிரதமர் மகன் குறித்த தகவல் இஸ்ரேல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், அவரின் மூன்றாவது மனைவி சாராவுக்கும் பிறந்த மகன் யாயிர் (32). இஸ்ரேலில் கடும் போர் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் இஸ்ரேலில் இல்லாமல் அமெரிக்காவில் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கிறார் என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் அவர் இருக்கும் புகைப்படத்தைத் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததின் மூலம் இந்தச் செய்தி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இஸ்ரேலில் கட்டாய ராணுவ சேவை இருக்கிறது. இதில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலரும் தற்போது நடைபெற்றுவரும் போருக்காக நாடு திரும்பி, ராணுவத்தில் இணைந்துவரும் நிலையில், இவர் மட்டும் போரின்போது நாட்டில் இல்லாமல் உல்லாசமாக இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றன.

பொதுவாகவே அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் யாயிர் நெதன்யாகு 2018-ல் 'அனைத்து இஸ்லாமியர்களும் வெளியேறும் வரை இஸ்ரேலில் அமைதி இருக்காது' என்று கருத்து பதிவிட்டு கடும் கண்டனத்துக்கு உள்ளானார்.

"இஸ்ரேலின் பிரதமரும், என் தந்தையுமான பெஞ்சமின் நெதன்யாகு, ஒரு தொழிலதிபருக்கு உதவுவதற்காக 20 பில்லியன் டாலர் எரிவாயு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தார்" என வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, நெதன்யாகு தன்னுடைய மகனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதாகத் தகவலை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பினார்.

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் வகையில் ஹமாஸ் குழுவினரின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்ததாக அரபு-இஸ்ரேலிய நடிகை மைசா அப்தெல் ஹாடி (Maisa Abdel Haடி) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, 1989 வரை ஜேர்மனியைப் பிரித்த பெர்லின் சுவரின் வீழ்ச்சியைக் குறிப்பிடும் வகையில், பெர்லின் பாணியில் செல்வோம் (Let's go Berlin-style) என, காஸா பகுதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள வேலியை புல்டோசர் உடைக்கும் படத்தை நடிகை மைசா அப்தெல் ஹாடி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். மேலும், டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின்படி, சிரிக்கும் எமோஜிகளுடன் ஹமாஸால் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்ட 85 வயதான பெண் யாஃபா அதாரின் படங்களையும் நடிகை மைசா அப்தெல் ஹாடி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் அதனைப் பாராட்டி, வெறுப்பு பேச்சுகளைப் பேசியதிற்காக நடிகை மைசா அப்தெல் ஹாடி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், `தீவிரவாதத்தை தூண்டுதல் மற்றும் அதற்கு ஆதரவு ஆகியவற்றுக்கு எதிராக காவல்துறையின் நடவடிக்கை எப்போதும் தொடரும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. காஸாவில் உள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு  திணறுகின்றனர் என்று ActionAid தெரிவித்துள்ளது.

  காஸாசா பகுதியில் உணவுப் பற்றாக்குறையை "கடுமையானது" என்று தொண்டு நிறுவனம்விவரிக்கிறது மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கவலை கொண்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ்   சண்டை நிறுத்தப்பட்டால் அனைத்து பொதுமக்களையும் பணயக்கைதிகள் சில நாட்களில் காஸாவிலிருந்து விடுவிக்க முடியும் என்று கட்டார் பேச்சுவார்த்தையாளர்கள் கூறுகின்றனர்.

ஹமாஸால் சிறைப் பிடிக்கபட்டவர்களை  விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் கடினமானவை, ஆனால் மத்தியஸ்தர்கள் முன்னேறி வருகின்றனர் என்று மூத்த பேச்சுவார்த்தையாளரும், கட்டாரின் வெளியுறவுத்துறை அமைச்சருமான டாக்டர் முகமது அல் குலைஃபி,   பிரத்தியேக பேட்டியில் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாகக் களம்  இறங்கியுள்ள  உலக நாடுகள்  காஸாவில் இருந்து வெளியேறிய மக்களுக்கு  உதவி செய்கின்றன. ஹமாஸ் மீதான தாக்குதல் எனச் சொல்லும்  இஸ்ரேல் , காஸாவைக் கைப்பற்றத் துடிக்கிறது.  காஸாவில் இருந்து ஹமாஸ் அப்புறப்படுத்தும் வரை இஸ்ரேல் ஓயப்போவதில்லை.

 

வர்மா