இந்தியாவில் நடைபெறும் உலகக்கிண்ணத் தொடரில் சம்பியன் கிண்ணத்தை வைக்கும் மேசை முதல் மைதானங்களில் சுற்றியிருக்கும் பலகைகள் வரை 9 வித்தியாசமான குறியீடுகள் இருப்பதை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் அதை தினந்தோறும் பார்த்தாலும் அது என்னவென்று தெரியாமல் ஏதோ ஒரு வகையான டிசைன் என்று நினைத்துக் கொண்டு ரசிகர்கள் போட்டியை பார்த்து வருகிறார்கள் என்றே சொல்லலாம். இருப்பினும் அந்த 9 குறியீடுகளும் ரசிகர்களின் 9 வெவ்வேறான உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் வகையில் ஐசிசி வடிவமைத்துள்ளது.
இந்த 9 குறியீடுகளில் முதலாவதாக ஒரு புள்ளியை வைத்தார் போல் இருப்பது ரசிகர்களின் “மகிழ்ச்சியை” குறிப்பதாகும்.
2வது குறியீடு உலகக் கிண்ணப் போட்டி நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் ரசிகர்கள்
எனும் “சக்தியை” குறிக்கும் வகையில் சூரியனை பிரதிபலிப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
3வது க்றியீடு தாக ரசிகர்களுக்கு மதிப்பு கொடுத்து “வரவேற்கிறோம்” என்பதை உணர்த்தும்
வகையில் கையெடுத்து கும்பிடுவது போன்ற குறியீடு இருக்கிறது.
ரசிகர்களாலேயே உலகக் கிண்ணத்துக்குப் “பெருமை” என்பதை
4வது குறியீடு உணர்த்துகிறது.
5வது குறியீடு “தைரியத்தை” காட்டும் வகையில் ஈட்டியின்
நுனி.
6வது குறியீடு “வெற்றியை” உணர்த்தும் வகையில் மின்னும்
நட்சத்திரம் போன்ற வடிவமைப்பை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
7வதாக இரவு நேரத்தில் வானத்தில்
வெடிக்கும் பட்டாசு போன்ற குறியீட்டை பயன்படுத்தி “ஆச்சரியத்தை” வெளிப்படுத்துகிTஅது.
8வது குறியீடாக ரசிகர்களின்
“ஆர்வத்தையும்” வடிவமைத்துள்ள ஐசிசி 9வதாக தோல்வியை சந்திக்கும் போது வெளிப்படும்
“வேதனையை” குறிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 9 வெவ்வேறு வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்
நவரச குறியீடாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment