Friday, October 27, 2023

20 வருடங்களின் பின் நியூஸிலாந்தை வென்றது இந்தியா


  தர்மசாலாவில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய   இந்தியா  நான்கு விக்கெற்களினால்  வெற்றி பெற்ற்தது.  முதலில் துடுப்படுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து  273 ஓட்டங்கள் எடுத்தது.  மிட்சேல் 130 ஓட்டங்கள் அடித்தார்.  முகமட் சமி  5  விக்கெற்களை வீழ்த்தினார். 46  ஓவர்கள் விளையாடிய  இந்தியா  ஆறு விக்கெற்களை இழந்து 274  ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.  கோலி 95  ஓட்டங்கள் எடுத்தார்.

இந்தியா நியூசிலாந்து போட்டி – படைத்த வரலாற்று சாதனை

தர்மசாலாவில்  இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி  கிறிக்கெற்  ஹாட்ஸ்டார் மூலம் 4.3 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்த  போட்டியாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.முன்னதாக இந்தியா,  பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது லைவ் ஸ்ட்ரீமிங்கில் 3.5 கோடி பார்வையாளர்கள் நேரலையில்  பார்த்ததே சாதனையாக  இருந்தது.

வேகமான 2000 ஓட்டங்களைக் கடந்த சுப்மன் கில்

நியூஸிலாந்துக்கு எதிரான  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய  இந்திய வீரர் சுப்மன்  கில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஹாஷிம் அமலாவின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

 1. சுப்மன் கில் : 38*  இன்னிங்ஸ்

2. ஹாசிம் அம்லா : 40 இன்னிங்ஸ்

 3. ஜஹீர் அப்பாஸ்/கேவின் பீட்டர்சன்/வேன் டெர் டுஷன்/பாபர் அசாம் : தலா 45 இன்னிங்ஸ்

20 வருட அவமானத்துக்கு முற்றுப்புள்ளி

நியூஸிலாந்துக்கு எதிரான உலகக்கிண்ணப் போட்டியில் 4 விக்கெற்களால் வெற்றி பெற்ற இந்திய அணி 20 வருட அவமானத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஐசிசி தொடர்களில் நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 20 வருடங்களாக   தொடர்  தோல்விகளை சந்தித்த    இந்தியா 2003க்குப்பின் முதல்  வெற்றியை பதிவு செய்துள்ளது

வெள்ளைப் பந்து தொடரில்  3000  ஓட்டங்கள் கடந்த கோலி

50 ஓவர் உலகக் கிண்ணம், 20 ஓவர் உலகக் கிண்ணம் , சம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து விதமான ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் கெயில், சங்ககார, சச்சின் போன்ற ஜாம்பவான்களை மிஞ்சிய கோலி 3000 ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையைப்  படைத்துள்ளார்.

  1. விராட் கோலி : 3000*

2. கிறிஸ் கெயில் : 2942

3. குமார் சங்ககார : 2876

4. மஹேல் ஜ‌யவர்தன : 2858

5. ரோஹித் சர்மா : 2733*

6. சச்சின் டெண்டுல்கர் : 2719

நியூஸிலாந்துக்கு எதிரான  போட்டியில் 95 ஓட்டங்கள் அடித்த கோலி இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 286 போட்டிகளில் 13427 ஓட்டங்களை   எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த 4வது வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் ஜயசூர்யவின் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

 1. சச்சின் டெண்டுல்கர் : 18426 ஓட்டங்கள்

 2. குமார் சங்ககார : 14234 ஓட்டங்கள் 

 3. ரிக்கி பொண்டிங் : 13704 ஓட்டங்கள்

 4. விராட் கோலி : 13437* ஓட்டங்கள்

 5. சனத் ஜயசூர்ய : 13430 ஓட்டங்கள்

டி வில்லியர்ஸ்ஸை முந்தி கெய்ல்ஸை நெருங்கும் ரோஹித்

 உலகக் கிண்ணத்  தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்களில் கேடன் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனையைரோஹித் சர்மா சில வாரங்கலுக்கு  முன்  முறியடித்தார். தற்போது உலகக்கிண்ணத் தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேவேளை, உலகக் கிண்ணத்  தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை தகர்த்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

  22 உலகக் கிண்ணப்  போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 40 சிக்சர்களை விளாசி இருக்கிறார். இவருக்கும் முன்  மேற்கு இந்திய  ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 35 உலகக் கிண்ணப்  போட்டிகளில் விளையாடி 49 சிக்சர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். 

8 வருடத்துக்கு பின் மிட்சேலின்  வரலாற்று சாதனை

நியுஸிலாந்துக்கு எதிரான  உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளையாடிய டார்ல் மிட்சேல் 9 பவுண்டரி 5 சிக்சருடன் 130 (127) ஓட்டங்களை விளாசி கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.   இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சதமடித்த முதல் வீரர் என்ற பெயரை அவர் பெற்றார்.   உலகக் கிண்ண வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக 48 வருடங்கள் கழித்து சதமடித்த   நியூசிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையும் டார்ல் மிட்சேல் படைத்தார்.  1975  ஆம் ஆண்டு உலகக்  கிண்ணப் போட்டியில் மான்செஸ்டர் மைதானத்தில் முதலும் கடைசியாக கிளன் டர்னர் 114* (177)ஓட்டங்கள் குவித்தார்.

பனியால் நிறுத்தப்பட்ட போட்டி

தர்மசாலாவில்  நியூஸிலாந்து, இந்தியா ஆகியவற்றுக்கிடையான  போட்டி நடைபெற்ற போது பனிமூட்டம் காரணமாக  போட்டி இடை நிறுத்தப்பட்டது.

இந்தியாஇரண்டு விக்கெற்களை இழந்து 100  ஓட்டங்கள் எடுத்திருந்த போது தர்மசாலா மைதானத்தில் திடீரென அதிகப்படியான பனிமூட்டம் வந்ததால் பந்தை பார்க்க முடியாமல் இரு அணி வீரர்களும் தடுமாறி   நடுவர்களிடம் புகார் செய்தனர்.

அதன் காரணமாக போட்டி 10 முதல் 15 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டது ரசிகர்களுக்கு வினோதமாக அமைந்தது. ஏனெனில் இதற்கு முன் நாய்கள், பறவைகள், தேனீக்கள், சூரிய வெளிச்சம், இடி மின்னல் போன்ற பல்வேறு அம்சங்களால் போட்டி தடைப்பட்டது.

  தர்மசாலா மைதானம் கடல் மட்டத்திலிருந்து 1317 அடி உயரத்தில் பனி சூழ்ந்த மலைப்பகுதிகளில் இருப்பதால் திடீரென மேகக்கூட்டங்களும் பனிமூட்டங்களும் தரை பகுதிக்கு வந்ததால் இப்போட்டி நிறுத்தப்பட்டது வினோதமாக அமைந்தது என்றே சொல்லலாம். இருப்பினும் 15 நிமிடங்களுக்கு மேல் பனி விலகிய பின்னர்  போட்டி  ஆரம்பமானது. 

Monday, October 23, 2023

காயமடைந்த நெய்மர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

உருகுவேக்கு எதிரான  உலகக்கிண்ண தகுதிகாண்  போட்டியில் விளையாடிய நெய்மர்  காயமடைந்து மைதானத்தில்  இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிறேஸில் அணிக்காக தனது 128வது ஆட்டத்தில் விளையாடியபோது ,  44 ஆவத்கு நிமிடத்தில்  எதிரணி வீரர்கள்  இருவரால்  சூழப்பட்டதால்  காயமடைந்து கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.  இடது முழங்காலில் காயமடைந்ததால்  அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளது.உருகுவேக்கு எதிரான  போட்டியில் பிறேஸில்    2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 

நெய்மரின் வாழ்க்கை காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. வலது காலில் ஏற்பட்ட காயங்களுக்குப் பிறகு அவர் தனது முன்னாள் கிளப் பாரிஸ் செயின்ட் ஜெர்மைனுடன் பல போட்டிகளைத் தச்வற விட்டார்.

2014 உலகக் கோப்பையில், கொலம்பியாவுக்கு எதிரான காலிறுதி வெற்றியில் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது, ஜேர்மனியுடனான 7 -1 அரையிறுதி தோல்வியில் இருந்து அவரை வெளியேற்றினார்.

ரஷ்யா 2018 இல், காயங்கள் மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் அவரது கனவைத் தடுதது. அந்த ஆண்டின் தொடக்கத்தில், நெய்மருக்கு வலது கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டது, அது அவரது காலில் உள்ள ஐந்தாவது மெட்டாடார்சலை பாதித்தது.

2017/8 உள்நாட்டுப் பருவத்தின் முடிவில் அவர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைனுக்காக 16 ஆட்டங்களைத் தவறவிட்டார், மேலும் காலிறுதியில் பெல்ஜியத்தால் வெளியேற்றப்படும் வரை ரஷ்யாவில் பிறேஸிலுக்காக வலியால் விளையாடினார்.  அவர் ஒருபோதும் முழுமையாக உடல் தகுதி பெறவில்லை.

 2019, 2021 மற்றும் கடந்த ஆண்டு கத்தார் உலகக் கோப்பையில் இதேபோன்ற காயங்களை சந்தித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் அல்-ஹிலாலுடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட PSG யை விட்டு வெளியேறுவதற்கு முன், ஐந்து மாதங்கள்   வலது கணுக்கால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

Sunday, October 22, 2023

யூரோ 2024 தொடருக்கு தகுதி பெற்ற அணிகள்


ஜேர்மனியில் அடுத்த ஆண்டு யூரோ கிண்ணப் போட்டி நடைபெற உள்ளது. போட்டியை நடத்தும் நாடான  ஜேர்மனி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.

   ஜேர்மனியுடன் சேர்த்து  ஆஸ்திரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், போத்துகல், ஸ்காட்லாந்து, ஸ்பெயின், துருக்கி  ஆகிய எட்டு  நாடுகள் யூரோ கிண்ணப் போட்டியில் விளையாட இதுவரை தகுதி பெற்றுள்ளன.

ஜேர்மனி : 13 யூரோ போட்டிகளில் விளையாடி உள்ளது.1972**, 1980**, 1996  ஆண்டுகளில் சம்பியனானது. 2002 ஆம் ஆண்டு 16 ஆவது சுற்றுடன்  வெளியேறியது.

ஆஸ்திரியா :   3 யூரோ போட்டிகளில் விளையாடி உள்ளது.  2002 ஆம் ஆண்டு 16 ஆவது சுற்றுடன்  வெளியேறியது. அஜர்பைஜானை வீழ்த்தி  தகுதி பெற்றது

பெல்ஜியம் :   6 யூரோ போட்டிகளில் விளையாடி உள்ளது.  2002 ஆம் ஆண்டு காலிறுதி வரை விளையாடியது. 1980 ஆம் ஆண்டு  இறுதிப் போட்டியில் விளையாடி ரன்னர்‍ அப் கிண்ணம்  பெற்றது. ஆஸ்திரியாவை 3௨ என்ற கோல் கணக்கில்  தகுதி பெற்றது.

இங்கிலாந்து  : 10 யூரோ போட்டிகளில் விளையாடி உள்ளது.  2002 ஆம் ஆண்டு  இறுதிப் போட்டியில் இத்தாலியிடம் தோல்வியடைந்து ரன்னர் அப் கொண்ணம் பெற்றது. நடப்பு சம்பியன் இத்தாலியை 3௧ என்ற கோல் கணக்கில் வீழ்த்தி  தகுதி பெற்றது.

பிரான்ஸ்:  10 யூரோ போட்டிகளில் விளையாடி உள்ளது.  2002 ஆம் ஆண்டு 16 ஆவது சுற்றுடன் வெளியேறியது.  1984, 2000 ஆம் ஆணடுகளில் சம்பியனாகியது. நெதர்லாந்திற்கு எதிராக 2௧ என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று   தகுதி பெற்றது.

போத்துகல் : 8 யூரோ போட்டிகளில் விளையாடி உள்ளது.  2002 ஆம் ஆண்டு 16 ஆவது சுற்றுடன் வெளியேறியது.   2016 ஆம் ஆண்டு சம்பியனாகியது. ஸ்லோவாக்கியாவுக்கு எதிராக 3௨ என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் பின்னர்   தகுதி உறுதியானது.

ஸ்கொட்லாந்து  :  3 யூரோ போட்டிகளில் விளையாடி உள்ளது.  2002 ஆம் ஆண்டு குழு நிலையுடன் வெளியேறியது. ஸ்பெயினுக்கு எதிராக  விளையாடிய நோர்வே 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால் ஸ்பெய்ன்  தகுதி பெற்றது.

ஸ்பெய்ன் :  11 யூரோ போட்டிகளில் விளையாடி உள்ளது.  2002 ஆம் ஆண்டு அரை இறுதி வரை  விளையாடியது.  1964, 2008, 2012 ஆம் ஆண்டுகளில் சம்பியனாகியது. நோர்வேக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதால்  தகுதி உறுதியானது.

துருக்கி : 5 யூரோ போட்டிகளில் விளையாடி உள்ளது.  2002 ஆம் ஆண்டு குழு நிலையுடன் வெளியேறியது. 2008 ஆம் ஆண்டு அரை இறுதி வரை  விளையாடியது. லாட்வியாவுக்கு எதிராக 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பின்னர்  தகுதி பெற்றது.

அரசியல் வலையில் சிக்கிய "லியோ"


 விஜயின்  படங்கள் வெளியாகும்  போதெல்லாம்   பிரச்சனைகளும் சேர்ந்து விடுகின்றன. ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில்  விஜய்கு மட்டுமல்லாது கமலுக்கும்  பிரச்சனை உருவானது. நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன் என கமல் அறிக்கை விடுத்தார்.

அரசியலுக்கு  விஜய் வரப்போவதாக அடிக்கடி செய்தி வெளியாவதால் அரசியல் வாதிகள் எதிர்ப்புக் காட்டுகிறார்கள். தமிழுக்கு அப்பால் தென்  இந்திய மொழிகளில் விஜய்க்கு என  ஒரு மெளசு இருப்பதால் விஜய்  மிக  மோசமாக விமர்சிக்கப்படுகிறார்.

றை விமர்சனங்களால்  பாதிக்கப்படுகின்றன. அரசியலிலும், சினிமாவிலும் முகம் தெரியாத எதிரிகள்  விஜய்க்கு உள்ளனர். ஆனால், விஜயின் படங்கள் வசூலில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன

லியோபடம் ஆரம்பித்த நாள் முதல் பிரச்சனைகள்  உருவாகிவிட்டன.  `லியோ' படத்தின்  `இசை வெளியீட்டு விழா இரத்து  செய்யபட்டது பெரும் விவாதமானது. எல்லா ஏற்பாடுகளும்  முடிவடைந்த  பின்னர்  இரத்துச் செய்யப்பட்டதன்  பின்னணியில் அரசியல்  இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.  உதயநிதி ஸ்டாலின் உரிமையாளராக இருக்கும்  ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு திரைப்பட விநியோக உரிமை கொடுக்காததுதான் காரணம்' என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிவருகின்றன.

ரஜினியின்  பட  இசை வெளியீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. விஜயின் படத்துக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கும்  திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

லியோ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட இருந்தது. பின்னர், பின்னர் பாதுகாப்பு காரணங்களால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது படத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ்.  இதற்கு `முழுக்க அரசியல் அழுத்தமே காரணம்' என சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர். ரகுமானின்  இசை நிகழ்ச்சியில் நடந்த களேபரங்களை எளிதில்  மறந்து விடமுடியாது.

  லியோ படத்தில் பணியாற்றிய நடனக் கலைஞர்களுக்குப் பேசிய சம்பளம் வழங்கவில்லை என சர்ச்சை எழுந்தது. பின்னர் அது பொய்யான தகவல் என சொல்லப்பட்டது.

 லியோ படத்தின் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் சென்றும் 7 மணி சிறப்புக் காட்சிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. காலை 9 மணி முதல் இரவு 1:30 வரை மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. நீதிமன்ற  உத்தரவு சிலரின் கண்களுக்குத் தெரியவில்லை.

``தி.மு.க ஆட்சியில் ஒட்டுமொத்த சினிமா துறையும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சாதகமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரப்படுகிறது. பிறருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது!" என  எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி குற்றம்சாட்டினார்.

  ``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சியில் திரைத்துறையைச் சுதந்திரமாகச் செயல்படவிட்டோம். அன்றைக்கு விஜய் படத்தை ரிலீஸ் செய்யவிட்டோம். ஆனால், இன்றைக்குத் திரைப்படங்கள் ரெட் ஜெயன்ட்டுக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கவில்லையென்றால், பிரச்னைகள், தொல்லைகள் வரும்  என       முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார்   தெரிவித்தார்.

  முன்னாள் அமைச்சர்  கடம்பூர் ராஜு, சீமான், சசிகலா என திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான அரசியல் தலைவர்கள் எல்லோரும் விஜய்க்கு ஆதரவாகக் குரல்  கொடுத்துள்ளனர்.

இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸின் ஆதிக்கம்தான். அதனுடைய உரிமையாளர் இன்று அமைச்சராக உள்ளார். நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடத்த பல்வேறு காரணங்களை கூறி அனுமதி கொடுக்கபடவில்லை. ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படத்திற்கு அனுமதி  கொடுக்கப்பட்டுளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லியோ வெற்றி பெற வேண்டும் என  ரஜினி வாழ்த்தியுள்ளார். அமைச்சர்  உதய நிதி ஒருபடி மேலே போய் டிவிட்டரில்  லியோவைத் தெறிக்க விட்டுள்ளார்.

  லியோ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ட்வீட் செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், ``தளபதி விஜய் அண்ணாவின் லியோ 👍🏽👍🏽, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறந்த படத்தொகுப்பு, அனிருத் இசை வேற லெவல், அன்பறிவ் மாஸ்டர், 7ஸ்கிரீன்ஸ்டுடியோ 👏👏  ! ஆல் தி பெஸ்ட் டீம்!" என வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

லியோ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்து  கருத்துத் தெரிவிக்கையில்

"விஜய் சார் படம் என்றாலே எதோவொரு பிரச்னை வந்துகொண்டேதான் இருக்கும். ட்ரெய்லரில் கூட இடம்பெற்றிருந்த கெட்ட வார்த்தை பிரச்னையாகியிருந்தது. பின்னர் அதை மாற்றினோம். கதாபாத்திரத்திற்கு அது பொருத்தமாக இருந்தது. அதனால்தான் அந்தக் கெட்ட வார்த்தையை படத்தில் வைத்தோம். ஒருவேளை அந்தப் பிரச்னை இல்லையென்றாலும் வேறு எதையாவது ஒன்றை வைத்து பிரச்னை வரத்தான் செய்யும். வைலன்ஸ் அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அது ஆக்ஷன் திரில்லர்தான்..

'மாஸ்டர்' படத்தின் முதல் பாதியில் விஜய் சாரை குடிகாரனாகக் காட்டியிருப்போம். பின்னர், அவரே இரண்டாம் பாதி முழுக்க குடிப்பழக்கத்திற்கு எதிராக பேசியிருப்பார். 18+ வயதிற்குக் கீழ் இருப்பவர்கள் குறிப்பிட்ட படத்தைப் பார்க்க வேண்டாம் என்று சொல்ல திரையரங்கு முன் நிற்கிறார்கள். ஆனால், எந்தவொரு ஒயின்ஸ் ஷாப்பிலும் குடிக்க வேண்டாம் என்று சொல்வதற்கு யாரும் நிற்பதில்லை என்பதை 'மாஸ்டர்' படத்தில் சொல்லியிருந்தோம். படத்தில் ஓரளவிற்குதான் கருத்து சொல்ல முடியும். படம் முழுக்க பாடமாக எடுத்தால் அது நன்றாக இருக்காது. என்னை நம்பிய தயாரிப்பாளருக்கும் முதலீடு செய்த பணத்தைத் திருப்பி எடுத்துத் தர வேண்டும்..

படம் எடுப்பதுதான் என் கையில் இருக்கிறது. திரையரங்கு விநியோகம், டிக்கெட் பிரச்னை எல்லாம் என் கையில் இல்லை. படம் எடுப்பதை விட அது ரிலீஸாகும்போது அழுத்தம் அதிகமாக இருக்கிறது. பெரிய படங்களுக்கு நடக்கும் இயல்பான பிரச்னைகள்தான் இவை.

இசை வெளியீட்டு இடையில் நிறுத்தப்பட்டதற்குக் காரணம்; 6,000 டிக்கெட்கள் வைத்திருந்தோம், ஆனால், 70,000 - 80,000 டிக்கெட்கள் போலியாக புக் செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டோம். இதற்குமுன் நடந்த 'இசை விழாவில்' இதனால்தான் ஒரு பெரிய பிரச்னை வந்தது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கவே இசை வெளியீட்டு விழாவை வைக்க வேண்டாம் என்று முடிவெடுத்தோம். படம் வெளியாகும் சமயத்தில் நெகட்டிவாக பெரும் பிரச்னைகள் வருவதைத் தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடத்துவதையும் இதனால்தான் தவிர்த்தோம்  என்றார்..

லியோ  மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அதற்கான அடித்தளம் அரசியல் அரங்கில்  போடப்பட்டு விட்டது. விஜயின்  அடுத்த படம் வெளியாகும்போது புதிய  பிரச்சனைகள்  உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

 

சாதனைகளுடன் வென்றது இந்தியா


 மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற  உலகக்கிண்ண  17வது லீக் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக  விளையாடிய  இந்தியா ஏழு  விக்கெற்களால்  வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ்   50 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 256  ஓட்டங்கள் எடுத்தது.இந்தியா 3.3  ஓவர்களில் மூன்று விக்கெற்களை  இழந்து 261  ஓட்டங்கள் எடுத்தது.

பங்களாதேஷ் ஆரம்ப வீரர்களான லிட்டன் தாஸ், டன்சித் ஹசன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.   9வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா 3வது பந்தை வீசிய பின் காயமடைந்ததால் மைதானத்தை விட்டு வெளியேறினார்.மிகுதி மூன்று பந்துகளை  கோலி வீசி  இரண்டு ஒட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆறு வருடங்களின்  பின்னர்  கோலி பந்து வீசினார். இந்தத் தொடரில் முதல் முறையாக இந்திய பவுலர்கள் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டை எடுக்காமல் இப்போட்டியில் தடுமாற்றத்தை சந்தித்தனர்.

தன்ஸித் ஹசன் ,ம் லிட்டன் தாஸ் ஆகியோர் இணைந்து 24 ஆண்டு கால சாதனை ஒன்றினை முறியடித்து அசத்தியுள்ளனர்.   உலக கிண்ணத்தில்    பங்களாதேஷ் அணி சார்பாக முதல் விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 1996-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக   62 ஓட்டங்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச பாட்னர்ஷிப்பாக இருந்தது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் விக்கெட்டுக்கு 93 ஓட்டங்கள்  அடிக்கப்பட்டது.

பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் 88 ஓட்டங்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 48 (40) ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் வாயிலாக உலகக் கிண்ண  வரலாற்றில் சேசிங் செய்யும் போது அதிக ஓட்டங்கள்  அடித்த வீரர் என்ற சாகிப் ஆல் ஹசன் சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

  1. ரோஹித் சர்மா : 754*

2. ஷாகிப் அல் ஹசன் : 743

3. அர்ஜுனா ரணதுங்க : 727

இப்போ போட்டியில் 120 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் இதுவரை உலக கிண்ணத்தில் 21 போட்டிகளில் 1243 ஓட்டங்களை 102.55 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக  100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற ஏபி டீ சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

 1. ரோஹித் சர்மா : 1243*

2. ஏபி டீ வில்லியர்ஸ் : 1207

3. வீரேந்திர சேவாக் : 843

4. பிரண்டன் மெக்கல்லம் : 742

ஆட்டமிழக்காமல் 103* ஓட்டங்கள் குவித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் தட்டி சென்றார். மேலும் இப்போட்டியில் அடித்த ஓட்டங்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் அடித்த 4வது வீரர் என்ற ஜெயவர்த்தனவின்  சாதனையை உடைத்த விராட் கோலி புதிய சாதனை படைத்தார்.

 1. சச்சின் டெண்டுல்கர் : 34357

2. குமார் சங்ககாரா : 28016

3. ரிக்கி பொண்டிங் : 27483

4. விராட் கோலி : 26026*

5. மஹல ஜெயவர்த்தன : 25957

ச‌ர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26,000 ஓட்டங்க‌ள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

 1. விராட் கோலி : 567

2. சச்சின் டெண்டுல்கர் : 600

3. ரிக்கி பாண்டிங் : 624

4. குமார் சங்ககாரா : 625

  50 ஓவர் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம்,  சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து விதமான வெள்ளைப்பந்து ஐசிசி தொடர்களில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ்த கெயில் சாதனையை உடைத்துள்ள விராட் கோலி மற்றுமொரு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

 1. விராட் கோலி : 2959*

2. கிறிஸ் கெயில் : 2942

3. குமார் சங்ககார : 2876

 4. மஹலே  ஜெயவர்த்தன : 2858

5. சச்சின் டெண்டுல்கர் : 2719

6. ரோஹித் சர்மா : 2687

ஐசிசி தொடர்களில் அதிக வெற்றி பெற்ற போட்டிகளில் இடம் பிடித்த இந்திய வீரர் என்ற டோனியின் சாதனையும் தகர்த்த அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:

1. விராட் கோலி : 53*

 2. எம்எஸ் டோனி : 52       

3. ரோஹித் சர்மா : 50

 4. யுவராஜ் சிங் : 47*

 5. சச்சின் டெண்டுல்கர் : 35

Thursday, October 19, 2023

தவறை ஒப்புக்கொண்ட குர்பாஸை எச்சரித்த ஐ.சி.சி

இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது. முன்னதாக அப்போட்டியில்  அதிரடியாக விளையாடிய ரஹமன்னுல்லா குர்பாஸ் 80 (57) ஓட்டங்களில் சிறப்பாக விளையாடிய போது எதிர்ப்புறம் இருந்த கப்டன் ஷாஹிதியின் தவறான அழைப்பால் ரன் அவுட்டாகி சென்றார்.

 அந்த ஏமாற்றத்தில் டைவ் அடித்ததும் எழுந்து தரையில் தம்முடைய பேட்டால் அடித்த அவர் பெவிலியனுக்கு திரும்புவதற்கு முன்பாக பவுண்டரி எல்லையையும் அங்கிருந்த நாற்காலியையும் துடுப்பால் அடித்து சேதப்படுத்தினார்.   குர்பாஸ் மைதான பொருட்களை சேதப்படுத்தியதற்காக அப்போட்டியின் நடுவர்கள் ஐசிசியுடம் புகார் தெரிவித்தனர்.  அதை ஏற்றுக் கொண்ட ஐசிசி ரஹமனுல்லா குருபாஸ்க்கு அதிகாரப்பூர்வமான எச்சரிக்கையும் 1 கேரியர் கறுப்பு புள்ளியையும் தண்டனையாக அறிவித்தது.

விதிமுறையை மீறியுள்ளதால் 50% போட்டி சம்பளத்திலிருந்து அபராதமும் ஒரு கறுப்பு புள்ளியும் தண்டனையாக கொடுக்கப்படும் என்று ஐசிசி கூறியுள்ளது. ஆனால் கடந்த 24 மாதங்களில் குர்பாஸ் முதல் முறையாக இப்போது தான் விதிமுறையை மீறியுள்ளதால் அபராதம் தவிர்க்கப்பட்டு எச்சரிக்கை மற்றும் ஒரு கறுப்பு புள்ளி தண்டனையாக கொடுக்கப்படுவதாக ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த தவறுகளை ஒப்புக்கொண்ட குர்பாஸ் தண்டனையை ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படாது என்றும் ஐசிசி கூறியுள்ளது. இருப்பினும் அடுத்த 24 மாதங்களில் இந்த கறுப்பு புள்ளிகளின் எண்ணிக்கை நான்கை தொடும் பட்சத்தில் ஐசிசி விதிமுறைப்படி குர்பாஸ்க்கு ஒரு சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான தடை தாமாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரித்திர சாதனை படைத்த நெதர்லாந்து


 இங்கிலாந்தை ஆப்கானிச்தான் வீழ்த்திய அதிர்ச்சி பற்றிய விவாதம்  ஓய்வதற்கு முன்னர்  பலம் வாய்ந்த தென். ஆபிரிக்காவை நெதர்லாந்து  தோற்கடித்து  புதிய சரித்திரம் படைத்துள்ளது. தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில்நெதர்லாந்து 38  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

43 ஓவர்களில்  நெதர்லாந்து  8 விக்கெற்களை இழந்து 245  ஓட்டங்கள் எடுத்தது.   42.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த தென்.  ஆபிரிக்கா  207  ஓட்டங்கள் எடுத்தது. 38 ஓட்டங்களால் தோல்வியடைந்த தென். ஆபிரிக்கா 32  உதிரிகளை விட்டுக் கொடுத்தது.

நாணயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற தென்.ஆபிரிக்கா  பந்து வீச்சைத் தேர்வு செய்தது.மழை காரணமாக  தாமதமாக  போட்டி ஆரம்பித்ததால் 43  ஓவர்களாகக்  குறைக்கப்பட்டது. 20.2 ஓவர்களில்5 விக்கெற்களை இழந்த நெதர்லாந்து  82  ஓட்டங்கள் எடுத்தது. நெதர்லாந்தின் கதை முடிந்ததென நினைத்திருந்த வேலையில்  கடைசி 9 ஓவர்களில்  109 ஓட்டங்கள் குவித்து தென். ஆபிரிக்காவைத் திணறடித்தது.

  வேன் பீக்   10 (17) ஓட்டங்கள்,   வேன் டெர் மெர்வி அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 (19) ஓட்டங்கள்,   ஆரியான தத் 3 சிக்சருடன் 23* (8) ஓட்டங் அடித்தனர்.  எட்வர்ட்ஸ் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 78* (69) ஓட்டங்கள் எடுத்ததால் 43 ஓவர்களில்  நெதர்லாந்து  8 விக்கெற்களை இழந்து 245  ஓட்டங்கள் எடுத்தது.

246   எனும் வெற்ரி இலக்குடன் களம்  இறங்கிய தென். ஆபிரிக்காவை நெதர்லாந்து  பந்து வீச்சிலும் திணறடித்தது. குயிண்டன் டீ காக் 20,  தெம்பா பவுமா 16 , வேன் டெர் டுஷன் 4, ஐடன் மார்க்கம் 1, ஹென்றிச் க்ளாஸென் 28 என 3 முக்கிய வீரர்கள் அடுத்த சில ஓவர்களில் சீரான இடைவெளிகளில் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால்  தென். ஆபிரிக்கா 18.5  ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து  89 00ட்டங்கள் எடுத்தது. டேவிட் மில்லர்  அதிக பட்சமாக 43 ஓட்டங்கள் எடுத்தார்.  ஜெரால்ட் கோட்சி 22 , ரபாடா 9 , கேசவ் மகாராஜ் 40  ஓட்டங்கள் எடுத்தனர். 42.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த தென்.  ஆபிரிக்கா  207  ஓட்டங்கள் எடுத்தது.

2003 ஆம் ஆண்டு நமீபியா, 2007 ஆம் ஆண்டு இல் ஸ்காட்லாந்து ஆகியவற்றைத் தோர்கடித்த நெதர்லாந்து 16 வருடங்கள் கழித்து உலகக் கிண்ணப் போட்டியில்    பெற்றுள்ளது.  2022 ஆன் ஆண்டு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தென். ஆபிரிக்காவைத் தோர்கடித்த நெதர்லாந்து அதன் அரை இருதி வாய்ப்பை நொருக்கியது.

7வது இடத்தில் களமிறங்கிய ஸ்காட் எட்வார்டஸ்நங்கூரமாகவும் அதிரடியாகவும் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 78* (69)ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற உதவினார்.  உலகக்கிண்ண வரலாற்றில் 7வது இடத்தில் களமிறங்கி    இந்திக கப்டன்  கபில் தேவின்  36 வருட சாதனையை சாதனையை அவர் முந்தினார்.

1. ஸ்காட் எட்வார்டஸ் : 78*, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2023*

2. கபில் தேவ் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 1987

3. ஹெத் ஸ்ட்ரீக் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 2003

4. தசுன் சனக்க : 68, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக , 2023

கிறிக்கெற் விளையாடும் சந்தர்ப்பன் நெதர்லாந்தில் அதிகளவு இல்லை. நெதர்லாந்து அணியில் உள்ள வீரர்கள்  வேலை செது கொண்டு பகுதி நேரமாக கிரிக்கெற்  விளையாடுகிறார்கள். மூன்ரு மாதங்களுக்கு  முன்  உணவு  டெலிவரி செய்த  பால் மேக்கிரீன் 9 ஓவர்கள் வீசி 40 ஓட்டங்களை விக்குக் கொடுத்து    இரண்டு முக்கிய விக்கெட்களை   வீழ்த்தினார்.

நெதர்லாந்தின் சில  ள் சில வீரர்கள் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடி தங்களது வாழ்க்கையில் நடத்தி வருகின்றனர்.  2020 ஆம் ஆண்டு கொரோனா இந்த உலகத்தையே தலை கீழ் புரட்டிப் போட்டது. இதில் விளையாட்டு உலகமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட சென்ற நெதர்லாந்து வீரர் பால் வான் மேக்கிரீன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் வாழ்க்கையைக் காப்பாற்ற  அங்கு உணவு டெலிவரி செய்யும் வேலை கிடைத்தது.   கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் பணம் தேவை என்பதற்காக அந்தப் பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது ரி20  வுலகக்கிண்ண  கிரிக்கெட் போட்டி நடந்திருக்க வேண்டிய தினம் இது என சமூக வலைத்தளத்தில் செய்தி ஒன்று போடப்பட்டிருந்தது. அதை மேற்கோள் காட்டிய பால் மேக்கிரீன் இந்நேரம் நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பேன்.

ஆனால் விதி என்னை உணவு டெலிவரி செய்யும் வேலையை பார்க்க வைத்திருக்கிறது. எனினும் கவலைப்படாதீர்கள் மக்களே. மகிழ்ச்சியாக இருங்கள் என்று அவர் டிவீட் போட்டு இருந்தார். தற்போது மூன்று ஆண்டுகள் கடந்து  உலகக்கிண்ணப் போட்டியில் சாதித்துள்ளார்.

 ரமணி