Sunday, October 22, 2023

சாதனைகளுடன் வென்றது இந்தியா


 மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற  உலகக்கிண்ண  17வது லீக் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக  விளையாடிய  இந்தியா ஏழு  விக்கெற்களால்  வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ்   50 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 256  ஓட்டங்கள் எடுத்தது.இந்தியா 3.3  ஓவர்களில் மூன்று விக்கெற்களை  இழந்து 261  ஓட்டங்கள் எடுத்தது.

பங்களாதேஷ் ஆரம்ப வீரர்களான லிட்டன் தாஸ், டன்சித் ஹசன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.   9வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா 3வது பந்தை வீசிய பின் காயமடைந்ததால் மைதானத்தை விட்டு வெளியேறினார்.மிகுதி மூன்று பந்துகளை  கோலி வீசி  இரண்டு ஒட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆறு வருடங்களின்  பின்னர்  கோலி பந்து வீசினார். இந்தத் தொடரில் முதல் முறையாக இந்திய பவுலர்கள் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டை எடுக்காமல் இப்போட்டியில் தடுமாற்றத்தை சந்தித்தனர்.

தன்ஸித் ஹசன் ,ம் லிட்டன் தாஸ் ஆகியோர் இணைந்து 24 ஆண்டு கால சாதனை ஒன்றினை முறியடித்து அசத்தியுள்ளனர்.   உலக கிண்ணத்தில்    பங்களாதேஷ் அணி சார்பாக முதல் விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 1996-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக   62 ஓட்டங்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச பாட்னர்ஷிப்பாக இருந்தது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் விக்கெட்டுக்கு 93 ஓட்டங்கள்  அடிக்கப்பட்டது.

பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் 88 ஓட்டங்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 48 (40) ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் வாயிலாக உலகக் கிண்ண  வரலாற்றில் சேசிங் செய்யும் போது அதிக ஓட்டங்கள்  அடித்த வீரர் என்ற சாகிப் ஆல் ஹசன் சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

  1. ரோஹித் சர்மா : 754*

2. ஷாகிப் அல் ஹசன் : 743

3. அர்ஜுனா ரணதுங்க : 727

இப்போ போட்டியில் 120 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் இதுவரை உலக கிண்ணத்தில் 21 போட்டிகளில் 1243 ஓட்டங்களை 102.55 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக  100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற ஏபி டீ சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

 1. ரோஹித் சர்மா : 1243*

2. ஏபி டீ வில்லியர்ஸ் : 1207

3. வீரேந்திர சேவாக் : 843

4. பிரண்டன் மெக்கல்லம் : 742

ஆட்டமிழக்காமல் 103* ஓட்டங்கள் குவித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் தட்டி சென்றார். மேலும் இப்போட்டியில் அடித்த ஓட்டங்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் அடித்த 4வது வீரர் என்ற ஜெயவர்த்தனவின்  சாதனையை உடைத்த விராட் கோலி புதிய சாதனை படைத்தார்.

 1. சச்சின் டெண்டுல்கர் : 34357

2. குமார் சங்ககாரா : 28016

3. ரிக்கி பொண்டிங் : 27483

4. விராட் கோலி : 26026*

5. மஹல ஜெயவர்த்தன : 25957

ச‌ர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26,000 ஓட்டங்க‌ள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

 1. விராட் கோலி : 567

2. சச்சின் டெண்டுல்கர் : 600

3. ரிக்கி பாண்டிங் : 624

4. குமார் சங்ககாரா : 625

  50 ஓவர் உலகக் கிண்ணம், ரி20 உலகக் கிண்ணம்,  சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து விதமான வெள்ளைப்பந்து ஐசிசி தொடர்களில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ்த கெயில் சாதனையை உடைத்துள்ள விராட் கோலி மற்றுமொரு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

 1. விராட் கோலி : 2959*

2. கிறிஸ் கெயில் : 2942

3. குமார் சங்ககார : 2876

 4. மஹலே  ஜெயவர்த்தன : 2858

5. சச்சின் டெண்டுல்கர் : 2719

6. ரோஹித் சர்மா : 2687

ஐசிசி தொடர்களில் அதிக வெற்றி பெற்ற போட்டிகளில் இடம் பிடித்த இந்திய வீரர் என்ற டோனியின் சாதனையும் தகர்த்த அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:

1. விராட் கோலி : 53*

 2. எம்எஸ் டோனி : 52       

3. ரோஹித் சர்மா : 50

 4. யுவராஜ் சிங் : 47*

 5. சச்சின் டெண்டுல்கர் : 35

No comments: