Sunday, October 22, 2023

அரசியல் வலையில் சிக்கிய "லியோ"


 விஜயின்  படங்கள் வெளியாகும்  போதெல்லாம்   பிரச்சனைகளும் சேர்ந்து விடுகின்றன. ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில்  விஜய்கு மட்டுமல்லாது கமலுக்கும்  பிரச்சனை உருவானது. நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன் என கமல் அறிக்கை விடுத்தார்.

அரசியலுக்கு  விஜய் வரப்போவதாக அடிக்கடி செய்தி வெளியாவதால் அரசியல் வாதிகள் எதிர்ப்புக் காட்டுகிறார்கள். தமிழுக்கு அப்பால் தென்  இந்திய மொழிகளில் விஜய்க்கு என  ஒரு மெளசு இருப்பதால் விஜய்  மிக  மோசமாக விமர்சிக்கப்படுகிறார்.

றை விமர்சனங்களால்  பாதிக்கப்படுகின்றன. அரசியலிலும், சினிமாவிலும் முகம் தெரியாத எதிரிகள்  விஜய்க்கு உள்ளனர். ஆனால், விஜயின் படங்கள் வசூலில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன

லியோபடம் ஆரம்பித்த நாள் முதல் பிரச்சனைகள்  உருவாகிவிட்டன.  `லியோ' படத்தின்  `இசை வெளியீட்டு விழா இரத்து  செய்யபட்டது பெரும் விவாதமானது. எல்லா ஏற்பாடுகளும்  முடிவடைந்த  பின்னர்  இரத்துச் செய்யப்பட்டதன்  பின்னணியில் அரசியல்  இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.  உதயநிதி ஸ்டாலின் உரிமையாளராக இருக்கும்  ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு திரைப்பட விநியோக உரிமை கொடுக்காததுதான் காரணம்' என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிவருகின்றன.

ரஜினியின்  பட  இசை வெளியீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. விஜயின் படத்துக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கும்  திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

லியோ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட இருந்தது. பின்னர், பின்னர் பாதுகாப்பு காரணங்களால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது படத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ்.  இதற்கு `முழுக்க அரசியல் அழுத்தமே காரணம்' என சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர். ரகுமானின்  இசை நிகழ்ச்சியில் நடந்த களேபரங்களை எளிதில்  மறந்து விடமுடியாது.

  லியோ படத்தில் பணியாற்றிய நடனக் கலைஞர்களுக்குப் பேசிய சம்பளம் வழங்கவில்லை என சர்ச்சை எழுந்தது. பின்னர் அது பொய்யான தகவல் என சொல்லப்பட்டது.

 லியோ படத்தின் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் சென்றும் 7 மணி சிறப்புக் காட்சிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. காலை 9 மணி முதல் இரவு 1:30 வரை மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. நீதிமன்ற  உத்தரவு சிலரின் கண்களுக்குத் தெரியவில்லை.

``தி.மு.க ஆட்சியில் ஒட்டுமொத்த சினிமா துறையும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சாதகமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரப்படுகிறது. பிறருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது!" என  எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி குற்றம்சாட்டினார்.

  ``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சியில் திரைத்துறையைச் சுதந்திரமாகச் செயல்படவிட்டோம். அன்றைக்கு விஜய் படத்தை ரிலீஸ் செய்யவிட்டோம். ஆனால், இன்றைக்குத் திரைப்படங்கள் ரெட் ஜெயன்ட்டுக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கவில்லையென்றால், பிரச்னைகள், தொல்லைகள் வரும்  என       முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார்   தெரிவித்தார்.

  முன்னாள் அமைச்சர்  கடம்பூர் ராஜு, சீமான், சசிகலா என திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான அரசியல் தலைவர்கள் எல்லோரும் விஜய்க்கு ஆதரவாகக் குரல்  கொடுத்துள்ளனர்.

இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸின் ஆதிக்கம்தான். அதனுடைய உரிமையாளர் இன்று அமைச்சராக உள்ளார். நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடத்த பல்வேறு காரணங்களை கூறி அனுமதி கொடுக்கபடவில்லை. ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படத்திற்கு அனுமதி  கொடுக்கப்பட்டுளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லியோ வெற்றி பெற வேண்டும் என  ரஜினி வாழ்த்தியுள்ளார். அமைச்சர்  உதய நிதி ஒருபடி மேலே போய் டிவிட்டரில்  லியோவைத் தெறிக்க விட்டுள்ளார்.

  லியோ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ட்வீட் செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், ``தளபதி விஜய் அண்ணாவின் லியோ 👍🏽👍🏽, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறந்த படத்தொகுப்பு, அனிருத் இசை வேற லெவல், அன்பறிவ் மாஸ்டர், 7ஸ்கிரீன்ஸ்டுடியோ 👏👏  ! ஆல் தி பெஸ்ட் டீம்!" என வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

லியோ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்து  கருத்துத் தெரிவிக்கையில்

"விஜய் சார் படம் என்றாலே எதோவொரு பிரச்னை வந்துகொண்டேதான் இருக்கும். ட்ரெய்லரில் கூட இடம்பெற்றிருந்த கெட்ட வார்த்தை பிரச்னையாகியிருந்தது. பின்னர் அதை மாற்றினோம். கதாபாத்திரத்திற்கு அது பொருத்தமாக இருந்தது. அதனால்தான் அந்தக் கெட்ட வார்த்தையை படத்தில் வைத்தோம். ஒருவேளை அந்தப் பிரச்னை இல்லையென்றாலும் வேறு எதையாவது ஒன்றை வைத்து பிரச்னை வரத்தான் செய்யும். வைலன்ஸ் அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அது ஆக்ஷன் திரில்லர்தான்..

'மாஸ்டர்' படத்தின் முதல் பாதியில் விஜய் சாரை குடிகாரனாகக் காட்டியிருப்போம். பின்னர், அவரே இரண்டாம் பாதி முழுக்க குடிப்பழக்கத்திற்கு எதிராக பேசியிருப்பார். 18+ வயதிற்குக் கீழ் இருப்பவர்கள் குறிப்பிட்ட படத்தைப் பார்க்க வேண்டாம் என்று சொல்ல திரையரங்கு முன் நிற்கிறார்கள். ஆனால், எந்தவொரு ஒயின்ஸ் ஷாப்பிலும் குடிக்க வேண்டாம் என்று சொல்வதற்கு யாரும் நிற்பதில்லை என்பதை 'மாஸ்டர்' படத்தில் சொல்லியிருந்தோம். படத்தில் ஓரளவிற்குதான் கருத்து சொல்ல முடியும். படம் முழுக்க பாடமாக எடுத்தால் அது நன்றாக இருக்காது. என்னை நம்பிய தயாரிப்பாளருக்கும் முதலீடு செய்த பணத்தைத் திருப்பி எடுத்துத் தர வேண்டும்..

படம் எடுப்பதுதான் என் கையில் இருக்கிறது. திரையரங்கு விநியோகம், டிக்கெட் பிரச்னை எல்லாம் என் கையில் இல்லை. படம் எடுப்பதை விட அது ரிலீஸாகும்போது அழுத்தம் அதிகமாக இருக்கிறது. பெரிய படங்களுக்கு நடக்கும் இயல்பான பிரச்னைகள்தான் இவை.

இசை வெளியீட்டு இடையில் நிறுத்தப்பட்டதற்குக் காரணம்; 6,000 டிக்கெட்கள் வைத்திருந்தோம், ஆனால், 70,000 - 80,000 டிக்கெட்கள் போலியாக புக் செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டோம். இதற்குமுன் நடந்த 'இசை விழாவில்' இதனால்தான் ஒரு பெரிய பிரச்னை வந்தது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கவே இசை வெளியீட்டு விழாவை வைக்க வேண்டாம் என்று முடிவெடுத்தோம். படம் வெளியாகும் சமயத்தில் நெகட்டிவாக பெரும் பிரச்னைகள் வருவதைத் தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடத்துவதையும் இதனால்தான் தவிர்த்தோம்  என்றார்..

லியோ  மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அதற்கான அடித்தளம் அரசியல் அரங்கில்  போடப்பட்டு விட்டது. விஜயின்  அடுத்த படம் வெளியாகும்போது புதிய  பிரச்சனைகள்  உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

 

No comments: