Saturday, May 5, 2018

பஞ்சாப்பை வென்றது மும்பை



தோல்விப்பாதையில் பயணித்த மும்பை பஞ்சாப்பை வென்றதன் மூலம் வெற்ரிப்பாதைக்குத் திரும்பி உள்ளது. அடுத்து வரும் போட்டிகள் அனைத்தும் மும்பைக்கு முக்கியமானவையாகும்  மத்திய பிரதேசத்தில்  உள்ள இந்துார் நகரில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதின.நாணயச்சுழற்சியில்  வென்ற மும்பை அணி கப்டன் ரோகித்களத்தடுப்பைத்  தேர்வு செய்தார். மும்பை அணியில் போலார்டுக்குப்பதில் லீவிஸ் இடம் பிடித்தார். பஞ்சாப் அணியில் பின்ச், மனோஜ் திவாரி, பரிந்தர் ஸ்ரண் நீக்கப்பட்டு யுவராஜ் சிங், ஸ்டாய்னிஸ், அக்சர் வாய்ப்பு பெற்றனர்.
 
பஞ்சாப் அணிக்கு லோகேஷ் ராகுல், கெய்ல் ஜோடி 'சூப்பர்' துவக்கம் தந்தது. மெக்லீனகன், பும்ரா பந்துகளை ராகுல் சிக்சருக்கு பறக்கவிட்டார். பாண்ட்யா பந்துவீச்சில் 3 பவுண்டரி அடித்தார் கெய்ல். ராகுல் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய   அரை சதம் விளாசினார். யுவராஜ் சிங் 14  ஓட்டங்கள் எடுத்தார். மெக்லீனகன் 'வேகத்தில்' கருண் நாயர் 23 ஓட்டங்களில்ஆட்டமிழந்தார்.. பாண்ட்யாவின் கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்தார். முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் (29) அவுட்டாகாமல் இருந்தார்.


 175
ஓட்டங்கள் என்ற இலக்குடன், களமிறங்கிய மும்பை அணிக்கு லீவிஸ் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் சூர்யகுமார் 57    இஷான் கிஷான் 25    ஒட்டங்களில் ஆட்டமிழந்தனர்..  .  கப்டன் ரோகித், குர்னல் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. முஜிப் ஓவரில் ரோகித் இரண்டு சிக்சர் பறக்கவிட்டார். ஆண்ட்ரூ டை பந்துவீச்சில் குர்னால் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க வெற்றி உறுதியானது. மும்பை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 176 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் 24 ஓட்டங்களுடனும், குர்னால் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  


இந்த சீசனில் தொடர்ந்து 5 முறை 50 ஓட்டங்களுக்கு அதிகமாக  சேர்த்த இரண்டாவது ஜோடி என்ற பெருமையை கெய்ல், ராகுல் ஜோடி பெற்றது. ஏற்கனவே, பெங்களூருவின் கோஹ்லி, டிவிலியர்ஸ் ஜோடி இந்த இலக்கை எட்டி உள்ளது.

No comments: