Thursday, May 24, 2018

ராஜஸ்தானை வெளியேற்றிய கொல்கட்டா


   கொல்கட்டாவில் நடந்த இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ராஜஸ்தானை எதிர்த்து விளையாடிய கொல்கட்டா 25 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது.
 நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ராஞச்தான் அணித் தலைவர் ரஹானே பந்து வீச்சைத் தெர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய  கொல்கட்டா 20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 169 ஒட்டங்கள் எடுத்தது. 170  என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து  144 ஓட்டங்கள் எடுத்தது. 
கொல்கட்டா அணிக்கு கவுதம் நெருக்கடி கொடுத்தார்.. இவரது 'சுழலில்' சுனில் நரைன் 4 ஓட்டங்களுடனும் ராபின் உத்தப்பா 3  ஓட்டங்களுடனும் வெளியேறினர்.. நிதிஷ் ராணா 3, . ஓட்டங்களுடன் திரும்பினார். . கிறிஸ் லின் 18 ஓட்டங்களும் எடுத்தனர்.  . சுப்மன் கில் 28 ஓட்டங்கள் எடுத்துஆட்டமிழந்தார்.
. உனத்கட் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கார்த்திக், 35 பந்தில் அரைசதமடித்தார். இவர், 52 ஓட்டங்களில்  ஆட்டமிழந்தார். உனத்கட் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய ரசல், லாக்லின் வீசிய 18வது ஓவரில், 2 சிக்சர் பறக்கவிட்டார். சியர்லஸ் (2) ஏமாற்றினார். கோல்கட்டா அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 169 ஓட்டங்கள் எடுத்தது. ரசல் (49 ரன், 25 பந்து) அவுட்டாகாமல் இருந்தார். ராஜஸ்தான் அணி சார்பில் கவுதம், ஆர்ச்சர், லாக்லின் ஆகியோர் தலா 2 விக்கெற்களைக்  கைப்பற்றினர்.
ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் ரகானே, ராகுல் திரிபாதி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ரசல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரகானே, பிரசித் வீசிய 4வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசினார். சுனில் நரைன் வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட திரிபாதி  20 ஓட்டங்கள் எடுத்தபோது பியுஸ் சாவ்லா 'சுழலில்' சிக்கினார். குல்தீப் வீசிய 9வது ஓவரில், 2 பவுண்டரி அடித்த சஞ்சு சாம்சன், சியர்லஸ் பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 62 ஓட்டங்கள் சேர்த்த போது குல்தீப் 'சுழலில்' ரகானே 46 ஓட்டங்களில் சிக்கினார்.. பொறுப்பாக ஆடிய சாம்சன், 37 பந்தில் அரைசதமடித்தார். இவர், 50 ஓட்டங்களுடன் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்டூவர்ட் பின்னி, 'டக்-அவுட்' ஆனார்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 34 ரன் தேவைப்பட்டது. பிரசித் வீசிய 20வது ஓவரில், 8 ஓட்டங்கள்  மட்டுமே கிடைத்தது. ராஜஸ்தான் அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. கிளாசன் (18), கவுதம் (9) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் பியுஸ் சாவ்லா, 2 விக்கெற்களைவீழ்த்தினார்.
 

கோல்கட்டாவில் இன்று  நடக்கவுள்ள தகுதிச் சுற்று-2ல் கோல்கட்டா அணி, ஐதராபாத்தை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 27ல் மும்பையில் நடக்கவுள்ள இறுதிப் போட்டியில், சென்னை அணியை எதிர்கொள்ளும்.


, ராஜஸ்தான் அணி கப்டன் ரகானே, ஈடன் கார்டன் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த மணியை அடித்து 'எலிமினேட்டர்' போட்டியை துவக்கி வைத்தார்.
 
இந்த சீசனில், ராஜஸ்தான் அணியின் கவுதம், 'பவர்பிளே' ஓவரில் 8 விக்கெற்களை  வீழ்த்தினார். இதன்மூலம் 'பவர்பிளே' ஓவரில் அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளரானார்.

No comments: