Sunday, May 6, 2018

பரபரப்பான போட்டியில் வென்றது ஹைதராபாத்



  சன் ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி டேர் டெவில்ஸ் ஆகியவற்றுக்கிடையே ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில்   அணி கடுமையான போராட்டத்துக்குப் பிறகு கடைசி ஒரு பந்து மீதமிருக்கையில், 7 விக்கெட் வித்தியாசத்தில்ஹைதராபாத் வென்றது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த டெல்லி அணி,    எடுத்தபோதும் கடைசி ஓவர் வரை வெற்றிக்காக கடுமையாக போராடியது
 நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் துடுப்படுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கெற் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது. 164 என்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத்  20 ஓவர்களில்3 விக்கெற்களை இழந்து  164 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

டில்லி அணிக்கு பிரித்வி ஷாவுடன் இணைந்து, துவக்கம் தந்த மேக்ஸ்வெல் 2 ஓட்டங்களுடன்  வெளியேறினார். பிரித்வி ஹாவுடன் ஜோடி சேர்ந்த , சந்தீப், சாகிப்  அதிரடியாக விளையாடி , 36 பந்தில்65  ஓட்டங்கள் எடுது  ஆட்டமிழந்தார். கப்டன் ஸ்ரேயாஸ்  44  ,நமன் ஓஜா 1,ரிஷாப் பன்ட் 18, ஒட்டங்களில் ஆட்டமிழந்தனர். டில்லி அணி, 20 ஓவர்களில் , 5 விக்கெட்டுக்கு, 163  ஓட்டங்கள் எடுத்தது. ஷங்கர் 23 ஓட்டங்களுடனும்  கிறிஸ்டியன்  7ஓட்டங்களூடனும்  ஆட்டமிழக்காமல் இருந்தனர்


164
ஓட்ட இலக்குடன்  களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தவான், ஹேல்ஸ் ஜோடி 'சூப்பர்' துவக்கம் தந்தது. 9 ஓட்டங்னில் மேக்ஸ்வெல் தயவில் தப்பிய ஹேல்ஸ், அவேஷ் கான் ஓவரில் 4 சிக்சர் அடித்து மிரட்டினார். இவர், 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தவான் 33 மணிஷ் பாண்டே 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பவுல்ட் ஓவரில், யூசுப் பதான் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, கடைசி ஓவரில், ஐதராபாத் வெற்றிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டன. கிறிஸ்டியன் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்த யூசுப் பதான், 2வது பந்தில் சிக்சர் அடித்தார். 3வது பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்த இரு பந்தில் 2 ஓட்டங்கள் எடுக்கப்பட, ஐதராபாத் அணி 19.5 ஓவரில், 3 விக்கெட்டுக்கு, 164 ஓட்டங்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் (32), யூசுப் பதான் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.


இந்த தோல்வியை அடுத்து, டில்லி அணியின் (10ல் 3 வெற்றி, 7 தோல்வி), 'பிளே ஆப்' வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.

.பி.எல்., தொடரில் இதுவரை நடந்த போட்டிகள் முடிவில், சென்னை, ஐதராபாத் அணிகள், தலா 7 வெற்றி பெற்று, 14 புள்ளிகள் பெற்று, பட்டியலில் 'டாப்-2' இடத்தில் உள்ளன.

இந்த இரு அணிகளும், இன்னும் தலா ஒரு வெற்றி மட்டும் பெறும் பட்சத்தில், 11வது சீசனுக்கான 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறலாம். 3, 4வது இடத்தில் உள்ள கோல்கட்டா (5 வெற்றி, 10 புள்ளி), பஞ்சாப் (5 வெற்றி, 10 புள்ளி) அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளன.



No comments: