Saturday, May 12, 2018

பட்லரின் ஆட்டத்தால் கடைசி ஓவரில் வென்றது ராஜஸ்தான்


சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகியவற்றுக்கிடையே ஜெய்பூரில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் நான்கு விக்கெற் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரை இறுதியில் விளையாடும் நம்பிக்கையில் ராஜஸ்தான் இருக்கிறது.தோல்வியடைந்த சென்னை   விளை யாடுவதற்காக இன்னொரு போட்டிக்காகக் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.

சென்னை  அணியில்   துருவ் ஷோரே, லுங்கி நிகிடி ஆகியோர் நீக்கப்பட்டு கரண் சர்மா, சேம் பில்லிங்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். புற்று நோய் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிங்க் உடையில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியிலும் இரு மாற்றங்கள் இருந்தது. அனுரீத் சிங், மகிபால் லாம்ரோர் ஆகியோருக்கு பதிலாக அங்கித் சர்மா, பிரஷாந்த் சோப்ரா ஆகியோர் களமிறக்கப்பட்டனர். இதில் பிரஷாந்த் சோப்ராவுக்கு இது அறிமுக ஆட்டமாக அமைந்தது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற  சென்னை முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து  176 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான்விக்கெற்களை இழந்து 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

வட்சன், ராயுடு ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினார்கள். ஜோப்ரா ஆர்ச்சஸ் வீசிய மூன்றாவது ஓவரில் ராயுடு விக்கெற்றைப் பறிகொடுத்தார். 9 பந்துகளைச் சந்தித்த ராயுடு இரண்டு பவுண்டரிகள் அடங்கலாக 12 ஓட்டங்கள் எடுத்தார். வட்சனுடன் இணைந்த ரெய்னா அதிரடி காட்டினார்.பவர் பிளேயில் ஒரு விக்கெற்றை இழந்த சென்னை, 55 ஓட்டங்கள் எடுத்தது. 6-வது ஓவரை வீசிய ஜெயதேவ் உனத்கட் 6 ஓட்டங்களையும், அடுத்தடுத்த ஓவர்களை வீசிய இஷ் சோதி 4 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 5 ஓட்டங்களையும் மட்டுமே விட்டுக்கொடுத்து சற்று நெருக்கடியை ஏற்படுத்தினர்.

 12 ஆவது ஓவரில் வட்சன் ஆட்டமிழந்தார்.ஷேன் வாட்சன் 31 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 39 ஓட்டங்கள் எடுத்தார். அப்போது   11.3 ஓவர்களில் 105 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் இணைந்து வாட்சன் 86 ஓட்டங்கள் இதையடுத்து டோனி களமிறங்கினார்.32 பந்துகளில் ரெய்னா அரைச்சதம் அடித்தார். சேர்த்தார்

  சிறப்பாக விளையாடிய ரெய்னா 35 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இஷ் சோதி பந்தை   ஸ்டூவர்ட் பின்னியிடம்பிடிகொடுத்துஅ ஆட்டமிழந்தார். சேம் பில்லிங்ஸ், டோனியுடன் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடஓட்ட விகிதம் குறையத் தொடங்கியது. 13 முதல் 17 ஓவர்கள் இடைவெளியில் வெறும் 23 ஓட்டங்களே சேர்க்கப்பட்டது. இந்த 4 ஓவர்களையும் பென் ஸ்டோக்ஸ், உனத்கட், இஷ் சோதி, ஜோப்ரா ஆர்ச்சர் வீசியிருந்தனர்.

22 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் அடங்கலாக 27 ஓட்டங்கள் எடுத்த பில்லிங் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த்தார். . சென்னை அணி, 20 ஓவர்களில் , 4 விக்கெட்டுக்கு, 176 ஓட்டங்கள் எடுத்தது. டோனி 33 ஓட்டங்களுடனும்  டுவைன் பிராவோ 1 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர். இருந்தனர். ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர், 2 விக்கெற்களை வீழ்த்தினார்


177 என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் வீரர் பட்லர் கடைசிவரை போராடி வெற்றியைப்  பெற்றுக்கொடுத்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். பட்லர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

ஸ்டோக்ஸ் 11  ,  ரகானே 4 , சஞ்சு சாம்சன் 21 ,,  பிரசாந்த சோப்ரா 8 ,, பின்னி 22 ,, கிருஷ்ணப்பா கவுதம் 12, ஓட்டங்களில் ஆட்டமிழக்க   பொறுப்பாக ஆடிய பட்லர் அரை சதமடித்து அசத்தினார்.

பரபரப்பான கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஓட்டம் இல்லை. 2வது பந்தில் 2 ஓட்டங்களும், 3-வது பந்தில் 2 ஓட்டங்களும் எடுக்கப்பட்டன.. 4-வது பந்தில் சிக்சர் பறந்தது. 5-வது பந்தில் 2 ஓட்டங்கள் எடுக்க ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 95 ஓட்டங்கள் எடுத்தார்.

சென்னை அணி சார்பில் ஹர்பஜன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகுர், பிராவோ, டேவிட் வில்லே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.



No comments: