பண்டின் அதிரடி சதம் டெல்லிக்கு கைகொடுக்கவில்லை
டெல்லி
டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
ஆகியவற்ருக்கிடையே டெல்லி மைதானத்தில் நடைபெற்ற
போட் டியில் 9 விக்கெற் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. முதலில்
துடுப்பெடுத்தாடி குறைந்த ஓட்டங்கள் அடித்தும்
எதிரணியை சுருட்டி வெற்றி பெறுவதே ஹைதராபாத்தின்
ஸ்ரைல்.அதனைத் தெரிந்து கொண்ட
டெல்லி அணியின் தலைவர் ஸ்ரேயாஸ்
அய்யர் நாணயச் சுழற்சியில் வெற்றி
பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். . ஹைதராபாத் அணியில் விரிதிமன் சகாவுக்கு
பதிலாக ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி இடம் பிடித்தார்
முதலில்
துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவர்களில் 5விக்கெற்களை இழந்து 188 ஓட்டங்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய ரிஷப்
பந்த் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சருடன் 128 ஓட்டங்கள் குவித்தார். 189 என்ற இலக்குடன் களம்
இறங்கிய ஹைதராபாத் 18.5 ஓவர்களில் ஒரு விக்கெற்றை இழந்து
191 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெற் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி
அணிக்கு பிரித்வி ஷா, ஜேசன் ராய்
ஜோடி சுமாரான துவக்கம் தந்தது.
சாகிப் அல் ஹசன் வீசிய
4வது ஓவரின் கடைசி இரண்டு
பந்தில் பிரித்வி 9 ஓட்டங்களுடனும், ராய் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.. . கப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்
3 ஓட்டங்களுடன் 'ரன்-அவுட்' ஆனார்.
நான்காவது விக்கெற்றி இணைந்த படேல் 24 ஓட்டங்களுடன்
ரன் அவுட்டானார். இரண்டு ரன் அவுட்களுக்கும்
ரிஷப் பந்தான் காரணம். ஆனால்
,அவர் அடித்த சதம் அதனை
மறக்கச்செய்து விட்டது.
பவுல்ட்,
விஜய் சங்கர் ஆகியோரின் ஓவர்களில்
பந்தில் தலா ஒரு சிக்சர்
அடித்த ஷிகர் தவான், ஹர்ஷல்
படேல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி,
30 பந்தில் அரைசதமடித்தார். பிளங்கட் வீசிய 10வது ஓவரில்
தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசிய கப்டன் வில்லியம்சன்,
இந்த சீசனில் தனது 6வது
அரைசதமடித்தார். பவுல்ட் பந்தை பவுண்டரிக்கு
விரட்டிய இவர், வெற்றியை உறுதி
செய்தார்.
ஐதராபாத் அணி, 18.5 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு,
191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
50 பந்துகளுக்கு
முகம் கொடுத்த தவான் 4 சிக்சர்
9 பவுண்டரிகளுடன் 92 எடுத்தார். 50 பந்துகளைச் சந்தித்த வில்லியம்சன் 4 சிக்சர் 2 சிக்சர் 8 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் எடுத்தார் இதன்மூலம் 9வது வெற்றியை பெற்ற
ஹைதராபாத் அணி, 18 புள்ளிகளுடன் 'பிளே-ஆப்' வாய்ப்பை உறுதி
செய்தது. எட்டாவது தோல்வியை பதிவு செய்த டில்லி
அணி, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை
இழந்தது.
டில்லி அணியின் ரிஷாப் பன்ட்,
இந்த சீசனில் 500 ஓட்டங்கள் குவித்த முதல் வீரரானார்.
இதுவரை, 11 போட்டியில், ஒரு சதம், 3 அரைசதம்
உட்பட 521 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து லோகேஷ்
ராகுல் (471ஓட்டங்கள், பஞ்சாப்), சூர்யகுமார் யாதவ் (435, ஓட்டங்கள் மும்பை), அம்பதி ராயுடு (423, ஓட்டங்கள்
சென்னை), வில்லியம்சன் (410, ஓட்டங்கள் ஐதராபாத்) உள்ளனர்.
அபாரமாக ஆடிய டில்லி
அணியின் ரிஷாப் பன்ட், ஐ.பி.எல்., அரங்கில்
1000 ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை
எட்டினார். இதுவரை இவர், 35 போட்டியில்,
ஒரு சதம், 6 அரைசதம் உட்பட,
1085 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல்.,
வரலாற்றில் குறைந்த வயதில் (20 ஆண்டு,
218 நாட்கள்) 1000 ஓட்டங்கள் எடுத்த வீரரானார். இதற்கு
முன், சஞ்சு சாம்சன்,(21 ஆண்டு,
183 நாட்கள்) இந்த இலக்கை எட்டியிருந்தார்.
அசத்தலாக ஆடிய டில்லி அணியின்
ரிஷாப் பன்ட்(128 ஓட்டங்கள்), ஐ.பி.எல்.,
அரங்கில் முதன்முறையாக சதம் அடித்தார். இது,
இந்த சீசனில் பதிவான 3வது
சதம். ஏற்கனவே பஞ்சாப் அணியின்
கெய்ல் (104* ஓட்டங்கள் , எதிர்: ஐதராபாத்), சென்னை
அணியின் வாட்சன் (106, எதிர்: ராஜஸ்தான்) சதம்
அடித்திருந்தனர். இதன்மூலம் இந்த சீசனில் ஒரு
இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்த
வீரரானார்.
தவிர இது, ஒட்டுமொத்த ஐ.பி.எல்., அரங்கில்
பதிவான 50வது சதம். அதிகபட்சமாக
கெய்ல், 6 சதமடித்துள்ளார்.
ஐ.பி.எல்., அரங்கில்
குறைந்த வயதில் சதமடித்த வீரர்கள்
பட்டியலில் 2வது இடம் பிடித்தார்
பன்ட் (20 ஆண்டு, 218 நாட்கள்). முதலிடத்தில் மணிஷ் பாண்டே (19 வயது,
253 நாட்கள்) உள்ளார்.
டில்லி அணியின் பிளங்கட் வீசிய
15.4வது பந்தை ஐதராபாத் அணி
கப்டன் வில்லியம்சன், சிக்சருக்கு அனுப்பினார். இது, இந்த சீசனில்
பதிவான 600வது சிக்சர்
No comments:
Post a Comment