ரஷ்யாவில் நடைபெறும் 2018 உலகக்கிண்ண
உதைபந்தாட்டத் தொடருக்கான ஆர்ஜெண்ரீனா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 23 பேர்கள் கொண்ட
இந்த அணியில் சீரி ஏ உதைபந்துத் தொடரில்
இண்டர் மிலன் அணிக்காக ஆடி 29 கோல்களை அடித்த மவ்ரோ இகார்டியைத் தேர்வு செய்யாதது ஆர்ஜென்ரீன
உதைபந்தாட்ட உலகில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
பயிற்சியாளர் சம்போலி மாறாக யுவண்டஸ் அணிக்கு ஆடிய பாவோ டைபலா
மற்றும் கொன்சாலோ ஹிகுவெய்ன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்த எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் ஆடத் தேர்வு
செய்யப்படாத பாவோ டைபலா ஏன் உலகக்கிண்ண அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கேள்வியும் சம்போலா மீது
எழுந்துள்ளது. ஆனால் பாவோ டைபலா சாதாரண வீரர் அல்ல, மெஸ்ஸிக்கு இணையாகப்
பேசப்படும் ஒரு வீரர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதனால்தான் மெஸ்ஸிக்கு
ஒரு பேக்-அப் ஆக எடுத்திருப்பதாக சம்போலி தெரிவிக்கிறார்.
மாறாக இகார்டியை எடுக்காததற்கு அவரது சொந்த வாழ்க்கையே காரணம் என்று
கூறப்படுகிறது. இகார்டியின் மனைவி வாண்டா நாரா ஒரு பிரபலஸ்தர். இகார்டியுடன் ஆடும்
சக வீரர் மேக்ஸ் லோபஸ் உடன் நாரா இருந்த போதே இகார்டி நாராவுடன் உறவு வைத்துக்
கொண்டிருந்தார். மேக்ஸி லோபஸ் ஆர்ஜென்ரீனா அணியில் பலருக்கும் நண்பர், எனவே
இகார்டியை அணியில் சேர்ப்பதற்கு சம்போலியை இந்த விவகாரம் தடுத்திருக்கலாம் என்றும்
ஆர்ஜென்ரீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இகார்டி-நரா விவகாரம் ஆர்ஜென்ரீனாவின்
கிசுகிசு பத்திரிகைகளில் பிரபலம். .
இந்த விவகாரத்தோடு மெஸ்ஸிக்கு நெருங்கிய செர்ஜியோ அகுயெரோ உடற்தகுதி
பெறவில்லையெனில் இகார்டோவை சேர்க்கலாம் என்று இருந்தது ஆர்ஜென்ரீன அணி நிர்வாகம்
ஆனால் செர்ஜியோ அகுயெரோ தகுதி பெற்று விட்டார்.
எப்படிப்பார்த்தாலும் இண்டர் மிலன் அணிக்காக 156 போட்டிகளில் 98
கோல்களை அடித்த மிக முக்கியமான ஒரு வீரரை அணியிலிருந்து புறக்காரணங்களுக்காக
நீக்கலாமா என்ற கேள்வி அங்கு எழுந்துள்ளது
இந்த ஆண்டு நடைபெற்ற பிரெண்ட்லீ போட்டிகளில் இடம்பெறாத பிரமாத கோல்
கீப்பர் பிராங்கோ அர்மனி உலகக்கிண்ண அணியில் இடம்பெற்றுள்ளார். அப்போது அவரை ஏன்
முன்னால் அணியில் சேர்க்கவில்லை? என்ற கேள்வியும் சம்போலா மீது எழுந்துள்ளது.
2014 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஜெர்மனியிடம் தோற்ற ஆர்ஜென்ரீனாஅணியிலிருந்து
8 வீரர்கள் இந்த உலகக்கிண்ண அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மே 27ம் திகதி அர்ஜெண்டீனா அணி வெலேஸ் சர்ஸ்பீல்ட் ஸ்டேடியத்தில்
பயிற்சியில் ஈடுபடுகிறது, இது பொதுமக்கள் பார்வையில் நடைபெறும், இதற்கு 2
நாளுக்குப் பிறகு ஹைட்டி அணியுடன் நட்பு ரீதியான ஆட்டத்தில் விளையாடுகிறது ஆர்ஜென்ரீனா
அத்துடன் ரசிகர்களிடமிருந்து பிரியாவிடை பெறுகிறது.
அடுத்த நாள் ஆர்ஜென்ரீனா அணி ஸ்பெயினுக்குச் சென்று பார்சிலோனாவில்
மேலும் பயிற்சியில் ஈடுபடுகிறது. ஜூன் 9-ம் திகதி இஸ்ரேலுடன் இறுதி நட்பு
ஆட்டத்தில் ஆடுகிறத்.
அணி விவரம்:
கோல்கீப்பர்கள்: செர்ஜியோ ரொமீரோ, வில்பிரெட்
கபலெரோ, பிராங்கோ அர்மானி
தடுப்பாட்ட வீரர்கள்: கேப்ரியல் மெர்காடோ, ஜேவிர
மஸ்செரானோ, நிகோலஸ் ஒட்டாமெண்டி, ஃபெட்ரிகோ ஃபாசியோ, மார்கஸ் ரோஜோ, நிகோலஸ்
டாக்லியாஃபிகோ, கிரிஸ்டியன் அன்சால்டி, மார்கோஸ் அகுனா.
நடுக்கள நாயகர்கள்: லூகாஸ் பிக்லியா, எட்வர்டோ
சல்வியோ, எவர் பனேகா, ஏஞ்செல் டி மரியா, மேனுவல் லான்ஸீனி, கியோவனி லோ செல்சோ,
மேக்ஸிமிலியானோ மேஸா, கிரிஸ்டியன் பவன்.
முன்கள நாயகர்கள்: லியோனல் மெஸ்ஸி, செர்ஜியோ
அகுயெரோ, கொன்சாளோ ஹிகுவெய்ன், பாவ்லோ டைபலா.
No comments:
Post a Comment