கோஹ்லியைத் துரத்தும் தோல்வி
துல்லியமான களத்தடுப்பு நேர்த்தியான பந்து வீச்சு ஆகியவற்றினால் எதிரணியைக் கட்டுப்படுத்தி ஹைதராபாத் மீண்டும் ஒரு வெற்ரியைப் பெற்றுள்ளது. 147 இன்ற இலகுவான இலக்கைத் துரத்திய பெங்களூரு கடைசி ஓவரில் 5 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐ.பி.எல்.,
லீக் போட்டியில்
கடைசி ஓவரில்
சொதப்பிய பெங்களூரு
அணி, 5 ரன்
வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 'வேகத்தில்'
மிரட்டிய புவனேஷ்வர்,
கவுல், ஐதராபாத்
அணிக்கு வெற்றி
தேடித்தந்தனர்.
சன்
ரைசர்ஸ்ஸுக்கு எதிராக ஹைதராபாத்தில்
நடைபெற்ற போட்டியில்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற
கப்டன் கோஹ்லி களத்தடுப்பைத் தேர்வு செய்தார். .
முதலில் 'துடுப்படுத்தாடிய
ஹைதராபாத் அணி
வீரர்களான ' அலெக்ஸ் ஹேல்ஸ்
5 ஓட்டங்களுடனும், ஷிகர் தவான்
ஓட்டங்களுடனும்,, மணிஷ் பாண்டே
5ப் ஓட்டங்களுடனும்,
ஆட்டமிழந்தனர். . உமேஷ் யாதவ், யுவேந்திர சகால்
ஆகியோரின் பந்தில் தலா ஒரு சிக்சர்
அடித்த கப்டன்
வில்லியம்சன், இந்த சீசனில் 5வது அரைசதமடித்தார்.
இவர், 56 ஓட்டங்களுடன் உமேஷ் யாதவ் 'வேகத்தில்'
வெளியேறினார்.
முகமது சிராஜ் வீசிய
19வது ஓவரில்,
யூசுப் 12 ஓட்டங்களுடனும்,
விரிதிமன் சகா 8 ஓட்டங்களுடனும்,
ஆட்டமிழந்தனர். சவுத்தீ வீசிய 20வது ஓவரில்
ரஷித் கான்,
சித்தார்த் கவுல் ஆகியோர் தலா ஒரு
ஓட்டத்துடன் 'ரன்-அவுட்'
ஆகினர். கடைசி
பந்தில் சந்தீப்
சர்மா, 'டக்-அவுட்' ஆனார்.
ஐதராபாத் அணி,
20 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 146 ஓட்டங்கள்
எடுத்தது. பெங்களூரு அணி
சார்பில் முகமது
சிராஜ்,, சவுத்தீ
தலா ஆகியோர்
3 விக்கெற்களை வீழ்த்தினர்.
எட்டக்கூடிய இலக்கை
விரட்டிய பெங்களூரு
அணிக்கு பார்த்திவ்
படேல் (20), மனன் வோரா (8) சுமாரான துவக்கம்
தந்தனர். சாகிப்
வீசிய 5வது
ஓவரில், ஒரு
சிக்சர், 2 பவுண்டரி விளாசிய கப்டன் கோஹ்லி
(39), ஆறுதல் தந்தார். டிவிலியர்ஸ் (5), மொயீன் அலி
(10) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.. அடுத்து
வந்த கிராண்ட்ஹோம்,
ரஷித் வீசிய
17வது ஓவரில்
தொடர்ச்சியாக 2 சிக்சர் நம்பிக்கையூட்டினார்.
கடைசி
ஓவரில் பெங்களூரு
வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. புவனேஷ்வர் வீசிய
20வது ஓவரின்,
முதல் 5 பந்தில்
6 ஓட்டங்கள் கிடைத்தது. கடைசி
பந்தில் சிக்சர்
தேவைப்பட்ட நிலையில், கிராண்ட்ஹோம்
33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.. பெங்களூரு
அணி, 20 ஓவர்கலில்,
6 விக்கெற்கலை இழந்து 141 ஓட்டங்கள் மட்டும் எடுத்து
தோல்வியடைந்தது ஹைதராபாத் சார்பில்
சாகிப், 2 விக்கெட்
கைப்பற்றினார்.
இதன்மூலம் 8வது வெற்றியை பதிவு செய்த
ஹைதராபாத் அணி,
16 புள்ளிகளுடன் 'பிளே-ஆப்' வாய்ப்பை பிரகாசப்படுத்திக்
கொண்டது. ஏழாவது
தோல்வியை சந்தித்த
பெங்களூரு அணியின்
அடுத்த சுற்றுக்கான
வாய்ப்பு மங்கியது.
No comments:
Post a Comment