பெங்களூருவைக் கட்டுப்படுத்திய சென்னை
சென்னை
சூப்பர் கிங்ஸ், ரோயல் சலஞ்ச்
பெங்களூர் ஆகியவற்றுக்கிடையே புனேயில் நடைபெற்ற போட்டியில் 7 விக்கெற்களால் சென்னை வெற்றி பெற்றது.
. சென்னை அணியில் டுபிளசி, ஆசிப்,
கரண் சர்மா ஆகியோர் விளையாடவில்லை.
டேவிட் வில்லே, ஷர்துல் தாகூர்,
துருவ் ஷோரே ஆகியொர்ர் அணியில்
இடம் பிடித்தனர். பெங்களூரு அணியில் குயின்டன் டி
காக், மனன் வோரா,வாஷிங்டன்
சுந்தர் ஆகியோர்ருக்குப் பதிலாக டிவிலியர்ஸ், பார்த்திவ் படேல், முருகன் அஷ்வின்
ஆகியோர் சேர்க்கப்பட்டனர். நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை
அணி கப்டன் தோனி களத்தடுப்பைத்
தேர்வு செய்தார். பந்துவீச்சு, துடுப்பாட்டம்,களத்தடுப்பு அனைத்தையும் மறந்துவிட்டார் என்ற விமர்சனத்துக்கு ஆட்ட
நாயகன் விருதைப் பெற்று பதிலடிகொடுத்தார் ஜடேஜா.
முதலில்
துடுப்பெடுத்தாடிய பெங்களூர் 9 விக்கெற்களை இழந்து 128 ஓட்டங்கள் எடுத்தது. பட்டேல், சவுத்தி ஆகிய இருவரையும்
தவிர ஏனைய வர்கள் அனைவரும்
ஒற்றை இலக்கத்துடன் ஆட்டம் இழந்தனர். முன்னைஅய
போட்டிகளில் பந்துவீச்சிலும் களத்தடுப்பிலும் கோட்டைவிட்ட சென்னை, ஹைதராபாத்துக்கு எதிரான
போட்டியில் கட்டுக்கோப்புடன் விளையாடி வெற்றி பெற்றது.
மெக்கலம்,பார்த்தீவ் பட்டேல் ஜோடி ஆரம்பத்
துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. இங்கிடியின் பந்தை தாகூரிடம் பிடிகொடுத்து ஐந்து ஓட்டங்களுடன் மெக்கலம்
ஆட்டமிழந்தார். பட்டேலுடன் கப்டன் கோஹ்லி இணைந்தார்.
ஏழாவது ஓவரை வீச, ஜடேஜா
வந்தார். போட்ட முதல் பந்திலேயே
8 ஓட்டங்கள் அடித்த கப்டன் கோஹ்லி விக்கெற்றைப்
பறிகொடுத்தார். சென்னை அணி வீரர்களும்
ரசிகர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். தப்புச் செய்தவரைப் போன்று
ஜடேஜா அதிர்ச்சியுடன் தலையில் கையை வைத்தார். முதல்
பந்திலேயே கோஹ்லி ஆட்டமிழந்தை நம்பமுடியாமல்
நின்றார்.
அடுத்த
ஓவரிலேயே ஹர்பஜன் வீசிய பந்தைப்
பிடித்து ஏபிடி வில்லியர்ஸை ஸ்டம்பிங் செய்தார்
டோனி. பெங்களூர் பெரிதும் நம்பி இருந்த ஏபிடி
வில்லியஸ் ஒரு ஓட்டத்துடன் திரும்பினார்
. அடுத்தடுத்த ஓவர்களில் கோஹ்லியையும் ஏபிடியையும் இழந்தது பெங்களூர்.பெங்களூரின் வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழக்க
வாய்ப்புக்காகக் காத்திருந்த பட்டேல் பட்டையை கிளப்பினார்.
41 பந்துகளுக்கு முகம் கொடுத்த பட்டேல்
53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 8 விக்கெற்களை இழந்து 88 ஓட்டங்களை பெங்களூர் எடுத்தபோது சவுத்தி களம் இறங்கினார்.
100 ஓட்டங்களை பெங்களூர் எடுக்கும் என சந்தேகம் எழுந்த
வேளையில் அதிரடி கொடுத்து அச்சுறுத்தினார்
சவுத்தி
26 பந்துகளுக்கு
முகம் கொடுத்த சவுத்தி 3 பவுண்டரி
ஒரு சிக்ஸர் அடங்கலாக 36 ஓட்டங்கள்
எடுத்தார். 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 127 ஒட்டங்கள் எடுத்தது.
128 என்ற
இலகுவான இலக்குடன் களம் இறங்கிய சென்னை
4 விக்கெற்களை இழந்து வெற்றி பெற்றது.
சவுத்தி வீசிய முதல் ஓவரில்
2 பவுண்டரி விளாசிய வாட்சன் (11 ஓட்டங்களில்
ஆட்டமிழந்தார்.
ராயுடு, ரெய்னா ஜோடி நிதானமாக
ஓட்டங்கள் சேர்த்தது. சவுத்தி வீசிய 6வது
ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி
அடித்தார் ராயுடு. முகமது சிராஜ்
பந்தில் ஒரு சிக்சர் அடித்த
ரெய்னா, சகால் உமேஷ் ஆகியோரின்
பந்தில் தலா ஒரு பவுண்டரி
விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 44 ஓட்டங்கள் சேர்த்திருந்த போது பவுண்டரி எல்லை
பகுதியில் 'பீல்டிங்' செய்து கொண்டிருந்த சவுத்தியின்
அற்புதமான பிடியில் 25 ஓட்டங்கள் எடுத்த ரெய்னா ஆட்டமிழந்தார்.
முருகன்
அஸ்வின் வீசிய 12-வது ஓவர், ஆட்டத்தில்
திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை சென்னையின் பக்கம்
பிரகாசமாய் இருந்த வெற்றி வாய்ப்பு, கொஞ்சமாய்
குறையத் தொடங்கியது. அஸ்வினின் ஓவரில் வெறும் இரண்டு
ஓட்டங்களை மட்டுமே எடுத்து, அம்பதி
ராயுடுவின் - விக்கெட்டையும் இழந்தது
முருகன்
அஸ்வின் வீசிய 12-வது ஓவர், ஆட்டத்தில்
திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுவரை சென்னையின் பக்கம்
பிரகாசமாய் டாலடித்துக் கொண்டிருந்த வெற்றி வாய்ப்பு, கொஞ்சமாய்
டல்லடிக்க ஆரம்பித்தது. அஸ்வினின் ஓவரில் வெறும் இரண்டு
ரஓட்டங்களை மட்டுமே எடுத்து, அம்பதி
ராயுடுவின் விக்கெட்டையும் இழந்தது 25 பந்துகளுக்கு முகம் கொடுத்த ராயுடு
32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரில் கிராந்தோம் பந்தில் 8 ஓட்டங்கள் எடுத்த ஷோரி ஆட்டமிழந்தார்.
5-வது
விக்கெட்டுக்கு எம்எஸ் டோனியுடன் வெயின்
பிராவோ ஜோடி சேர்ந்தார். இந்த
ஜோடி அணியை வெற்றி நோக்கி
அழைத்துச் சென்றது. 18-வது ஓவரை சாஹல்
வீசினார். இந்த ஓவரின் 2-வது
பந்தை இமாலய சிக்சர் அடித்தார்
டோனி. அடுத்த பந்தை நோ-பாலாக வீசினார். இதற்குப்
பதிலாக வீசிய பந்தையும் சிக்சருக்கு
அனுப்பினார்.. அடுத்த பந்தும் சிக்சருக்குப்
பறந்தது. ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து ரசிகர்களை
குஷிப்படுத்தினார்.
இந்த
ஓவரின் கடைசி பந்தில் பிராவோ
ஒருஓட்டம் அடிக்க அடிக்க சென்னை
சூப்பர் கிங்ஸ் 18 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டோனி 23 பந்தில் 31 ஓட்டங்களுடனும் , பிராவோ 17 பந்தில் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது கடைசி வரை களத்தில்
இருந்தனர்
டிவிலியர்ஸ்,
முருகன் அஷ்வின் ஆகியோரை 'ஸ்டம்பிங்'
செய்த சென்னை அணி கேப்டன்
தோனிஇ ஒட்டுமொத்த ஐ.பி.எல்.இ அரங்கில் அதிகமுறை
'ஸ்டம்பிங்' செய்த விக்கெட் கீப்பர்கள்
பட்டியலில் முதலிடத்தை கோல்கட்டா அணியின் ராபின் உத்தப்பாவுடன்
பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா
32 முறை 'ஸ்டம்பிங்' செய்துஉள்ளனர்.
பெங்களூரு
அணியின் டிம் சவுத்தீ, முகமது
சிராஜ் ஜோடி 38 ஓட்டங்கள் சேர்த்தது. இதன்மூலம் ஐ.பி.எல்.இ அரங்கில் 9வது
விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த
ஜோடிகள் பட்டியலில் 3வது இடம் பிடித்தது.
முதலிரண்டு இடங்களில் தலா 41 ஓட்டங்கள் சேர்த்திருந்த
சென்னையின் டோனி - அஷ்வின் (எதிர்:
மும்பைஇ இடம்: கோல்கட்டா, 2013), பிராவோ
- தாகிர் (எதிர்: மும்பை, இடம்:
மும்பை 2018) ஜோடிகள் உள்ளன.
தவிர
இது பெங்களூரு அணியின் சிறந்த 9வது
விக்கெட் 'பார்ட்னர்ஷிப்'. இதற்கு முன்இ 2008ல்
ராஜஸ்தானுக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த
போட்டியில் டிராவிட் - கும்ளே ஜோடி 35 ஓட்டங்கள்
சேர்த்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.
2வது
ஓவரை வீசிய பெங்களூரு அணியின்
சகால் ஒரு ரன் கூட
வழங்கவில்லை. இதன்மூலம்இ இந்த சீசனில் 'மெய்டன்
ஓவர்' வீசிய 7வது வீரரானார்.
ஏற்கனவே அமித் மிஸ்ரா,டுவைன்
பிராவோ, தீபக் சகார், ரஷித்
கான், ஷர்துல் தாகூர், டிரண்ட்
பவுல்ட் தலா ஒரு 'மெய்டன்
ஓவர்' வீசினர்.
சென்னை
அணியின் அம்பதி ராயுடு, இதுவரை
விளையாடிய 10 போட்டியில் 423 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இவர் ஒரு ஐ.பி.எல்.இ சீசனில்
தனது அதிகபட்ச ஓட்டங்களைப் பதிவு செய்தார். இதற்கு
முன் 2011ல் மும்பை அணிக்காக
16 போட்டிகளில் 395 ஓட்டங்கள் எடுத்திருந்தது இவரது அதிகபட்சமாக இருந்தது.
3 சிக்சர்
விளாசிய சென்னை அணி கப்டன்
டோனி இந்த சீசனில் 10 போட்டிகளில்
27 சிக்சர் அடித்துள்ளார். இதன்மூலம் இவர் ஒரு ஐ.பி.எல்.இ
சீசனில் தனது அதிகபட்ச சிக்சரை
பதிவு செய்துள்ளார். இதற்கு முன் 2013ல்
25 சிக்சர் விளாசி இருந்தார்
No comments:
Post a Comment