Wednesday, May 2, 2018

சாதனைப் பட்டியலில் சென்னையும் டோனியும்


     11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் புனேயில்  நடந்த லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அதன் கப்டன் தோனியும் பல்வேறு குறிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்துள்ளனர்.
புனேயில்  ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டம் நடந்தது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய  டோனி, 22 பந்துகளில் 51 ஓட்டங்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். 
இதற்கு முன் ஐபிஎல் போட்டிகளில் கப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீர் 3,518 ஒட்டங்கள் சேர்த்திருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை உடைத்த டோனி, அவரைக் காட்டிலும், 38 ஓட்டங்கள் அதிகமாக சேர்த்து கப்டன் பதவி வகித்து அதிகமான  3556 ஓட்டங்கள் குவித்த வீரர் எனும் பெருமையை டோனி  பெற்றார். 
அதுமட்டுமல்லாமல் இதுவரை அதிவேகமாக டோனி  அரை சத்தை 20 பந்துகளில் அடித்துள்ளார். கடந்த 2012-ம்ஆண்டு, பெங்களூரில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 20 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதற்குப் பின் இந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக 22 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார் டோனி  . 
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற பெற்றி ரி20 போட்டிகளில் அந்த அணி பெறும் 100-வது வெற்றியாகவும், மறக்கமுடியாத தருணமாகவும் அமைந்தது.
ரி20 போட்டிகளில் 100 வெற்றிகள், அல்லது அதற்கு அதிகமாக பெற்றி அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது அணியாகும். 104 வெற்றிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவது இடத்தில் இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 164 போட்டிகளில் விளையாடி 100 வெற்றிகளும், 61 தோல்விகளையும் அடைந்துள்ளது, ஒருபோட்டியில் முடிவு கிடைக்கவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி 186 போட்டிகளில் விளையாடி 103 வெற்றிகளும், 79 தோல்விகளும், 2 ஆட்டங்களில் முடிவு இல்லாமலும் உள்ளது.
இதில் சென்னை அணி அதிகபட்சமாக பெங்களூரு அணிக்கு எதிராக 14 வெற்றிகளையும், டெல்லி அணிக்கு எதிராக 12 வெற்றிகளையும், கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக11வெற்றிகளையும் பெற்றுள்ளது.
இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 172 போட்டிகளில் விளையாடி 90 வெற்றிகள், 79 தோல்விகள், ஒரு போட்டியில் முடிவு இல்லாமல் உள்ளது. 
1.       புனேயில் நடந்த டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்ஸன், டூபிளசிஸ் முதல் விக்கெட்டுக்கு 102 ஓட்டங்கள் சேர்த்ததை டெல்லி அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட முதல் சதமாகும்.
2.       சென்னை அணி 200 ஓட்டங்களுக்கு மேல் ஐபிஎல் போட்டியில் குவிப்பது 16 முறையாகும்.
3.       டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 5 ஓவர்களில் டோனியின் ஸ்டிரைக் ரேட் 228.37 ஆகும். டோனியின் டி20 ஸ்டிரைக் ரேட் 176 என்று இருக்கும் நிலையில்  அதைக்காட்டிலும் கடந்தது.
4.       டெல்லி அணி வீரர் லியாம் பிளங்கெட் தான் வீசிய 3 ஓவர்களிலும் 6 சிக்ஸர்கள் அடிக்க விட்டுக்கொடுத்தார். இதற்கு முந்தைய போட்டியில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க அனுமதித்திருந்தார்.
5.       சென்னை வீரர் அம்பதி ராயுடு போட்டியில் ரன் அவுட் ஆவது இந்த ஐபிஎல் சீசனில் 4-வது முறையாகும்.
6.       இந்த ஐபிஎல் சீசனில் விக்கெட் கீப்பராக இருந்து அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் டெல்லி வீரர் ரிஸ்பா பிந்த் 306 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். டோனி 286 ஓட்டங்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார்

No comments: