Wednesday, May 9, 2018

ராஜஸ்தானை வென்றது பஞ்சாப்


பஞ்சாப் அணிக்கு சொந்த மைதானமான இந்துாரின் ஹோல்கரில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தானை எதிர்த்து விளையாடிய பஞ்சாப் 5 விக்கெற்றால் வெற்றி பெற்றது.பஞ்சாப்,   நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வென்ற பஞ்சாப் அணி கப்டன் அஷ்வின், 'களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஷார்ட் 2 ஒட்டங்களுடனும்  கப்டன் ரகானே  5 ஒட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.  28 ஒட்டங்கள் எடுத்த சஞ்சு சாம்சன் , ஆன்ட்ரூ டை 'வேகத்தில்வெளியேறினார்.   பென் ஸ்டோக்ஸ் 12 , ஒட்டங்களுடன் ஆட்டமிழந்தார். . முஜீப் வீசிய 15வது ஓவரின் முதலிரண்டு பந்தில் பட்லர்  51 ஒட்டங்களுடனும் ஆர்ச்சர்   ஓட்டமெடுக்காமலும்  அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மூன்றாவது பந்து 'வைடாக' செல்ல, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. கிருஷ்ணப்பா கவுதம் 5 ராகுல் திரிபாதி 11   ஸ்ரேயாஸ் 24 ஓட்டங்கள் எடுத்தனர்.   ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்கள் எடுத்தது.    பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக முஜீப் 3 விக்கெற்களை வீழ்த்தினார்.
153 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கெய்ல்  8 ஒட்டங்களுடனும்   . மயங்க் அகர்வால்   2 ஒட்டங்களுடனும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.   அனுரீத் சிங் பந்தில்  31 ஓட்டங்கள் எடுத்த கருண் நாயர்   ஆட்டமிழந்தார். அக்சர் படேல்  4 ஒட்டங்களுடன் வந்த வேகத்தில் திரும்பினார். ராகுலுடன் கைகோர்த்த ஸ்டாய்னிஸ் நம்பிக்கை தந்தார். ஆர்ச்சர் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ராகுல் அரை சதம் எட்டினார். ராகுலின் ஆட்டத்தால்  பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் 84 ஒட்டங்களுடனும்  ஸ்டாய்னிஸ் 23 ஒட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர். 

பஞ்சாப் அணி வென்றதன் மூலம், .பி.எல்., அரங்கில் ஹோல்கர் மைதானத்தில் நடந்த போட்டியில் 'சேஸ்' செய்த அணி தொடர்ந்து 7வது முறையாக (2011-2, 2017-3, 2018-2) வெற்றி பெற்றது. 

முஜீப் ஜத்ரன் (பஞ்சாப்) வீசிய 13வது ஓவரின் 5வது பந்தை பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான்) துாக்கி அடித்தார். இதனை, பவுண்டரி எல்லைப் பகுதி அருகே 'பீல்டிங்' செய்து கொண்டிருந்த மயங்க் அகர்வால் உயர தாவி பிடித்தார். அப்போது தடுமாறிய இவர், எல்லையை தாண்டும் நிலை ஏற்பட்டது. உடனே சாமர்த்தியமாக செயல்பட்ட அகர்வால், பந்தை அருகில் 'பீல்டிங்' செய்து கொண்டிருந்த மனோஜ் திவாரியிடம் துாக்கி எறிந்தார். அதனை திவாரி பிடிக்க, ஸ்டோக்ஸ் வெளியேறினார்.

No comments: