Friday, May 11, 2018

இஷாந்த் கிஷான் அதிரடி முன்னேறுகிறது மும்பாய்


கொல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கட்டா நைற் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில்   102 ஓட்ட வித்தியாசத்தில் மும்பாய் இமாலய வெற்ரி பெற்றது. தொடர்  தோல்விகளால் துவண்டிருந்த மும்பாய் அத்ரடியாக விளையாடி வெற்றிகலைக் குவிட்து வருகிறது. 21 பந்துகளில் 62 ஓட்டங்கள்  எடுத்த இஷான்ந்த் கிஷான் மும்பையில் நட்சத்திர வீரராகத் திகழ்கிறார்.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கட்டா அணித் தலைவர் தினேஷ் கார்த்திக் களத்தடுப்பைத் தேர்வு  செய்தார். நடப்புச் சம்பியனான மும்பாய் இந்த சீசனில் தடுமாறுகிறது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் இந்தப் போட்டியிலும் வெற்றி  பெறலாம் என்ற தினேஷ் கார்த்திக்கின் நம்பிக்கையை மும்பாய் தவிடுபொடியாக்கியது. உதலில் துடுப்பெடுத்தாடிய மும்பபை 20 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்தது. கொல்கட்டா 18.1 ஓவரில் சகல விக்கெற்களையுமிழந்து 108 ஓட்டங்கள் எடுத்தது.
மும்பை அணிக்கு சூர்யகுமார், எவின் லீவிஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ரசல் ஓவரில் பவுண்டரி அடித்து,   கணக்கைத் துவக்கிய சூர்யகுமார், பிரசித் பந்தில் சிக்சர் அடித்தார். தன் பங்கிற்கு பவுண்டரிகள் அடித்த லீவிஸ், 18 ஓட்டங்கள் எடுத்தார். பவர் பிளேயில் ஒரு விக்கெற்றை இழந்த மும்பை 46 ஓட்டங்கள் எடுத்தது. 32 பந்துகளைச் சந்தித்த சூர்ய குமார்,   36 ஓட்டங்கள் எடுத்த் போது, சாவ்லா சுழலில் சிக்கினார்.


  கப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷான் இணைந்தனர். இந்திய அணியின் அதிரடி நாயகனான ரோகித் சர்மா வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க இஷான்ந்  கிஷான் அதிரடியில் கலக்கினார்.  10-வது ஓவரில் இருந்து இஷான் கிஷனின்  அதிரடி ஆரம்பித்தது. குல்தீப் யாதவின் ஓவரில் சிக்ஸர் அடித்தவர், அடுத்த சாவ்லா ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசினார்
குல்தீப் யாதவின் 15-வது ஓவரில் இஷானின் வெறித்தனம் உச்சம் தொட்டது. இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் இருந்து தொடர்ந்து நான்கு சிக்ஸர்கள் அடித்தார் இஷான். இந்த ஓவரில் மட்டும் 25 ஒட்டங்கள் அடித்தது மும்பை. எதிர்முனையில்  நின்ற  ரோஹித்,  இஷானின் இந்த வெறித்தனத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அடுத்த ஓவர் வீசிய நரேனின் ப்நது வீச்சில்  இஷாந்த் ஆட்டமிழந்தார். 21 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி என 62 ஓட்டங்கள் அடித்த  இஷான் கிஷன் ஆட்டமிழக்கும்போது  மும்பை அணியின் ரன்ரேட் 10-ஐத் தொட்டிருந்தது.  . 
ரோஹித் ஷர்மா பெரிதாக அடிக்கவில்லை என்றாலும் 7-வது ஓவரில் வந்தவர் 18-வது ஓவர் வரை களத்தில் இருந்தார். 31 பந்துகளில் 36 ஓட்டங்கள் அடித்து பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் வெளியேறினார்.
  பென் கட்டிங், 9 பந்துகளில்தில் 24 ஓட்டங்கள் எடுத்தார். மும்பை அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு, 210 ஓட்டங்கள் எடுத்தது. .   கடைசி 7 ஓவர்களில் மட்டும் அதாவது 42 பந்துகளில் 98 ஓட்டங்களை மும்பை எடுத்தது. 210 ஓட்டங்களில் 70 சதவிகிதம் பவுண்டரி சிக்ஸர்களால் கிடைத்தவை. மும்பை மொத்தம் 16 பவுண்டரி, 14 சிக்ஸர்கள் அடித்திருந்தது 
கடின இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணிக்கு ஒருவரும் கைகொடுக்கவில்லை. 2ஆவது பந்தில்4 ஓட்டங்கள் அடித்த நரைன் ஆட்டமிழந்தார்.அடுத்த வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. ,லின் 21, உத்தப்பா 14, ரசல் 2, தினேஷ் கார்த்திக் 5,.. ராணா, 21 ,, ரின்கு சிங் 5, சாவ்லா11,குர்ரன் 18, என, வரிசையாக ஆட்டமிழந்தனர்   கடைசியில் குல்தீப் 5 ஓட்டங்களி ஆட்ட்மிழக்க , கொகட்டா அணி 18.1 ஓவரில், 108 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.  மும்பை அணி, 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 'பிளே ஆப்' வாய்ப்பை தக்கவைத்தது. தவிர, கோல்கட்டா அணிக்கு எதிராக, மும்பை அணி பெற்ற தொடர்ச்சியான 8வது வெற்றி இது.
 
17 பந்தில் 50 ரன்கள் எடுத்த இஷான் கிஷான், .பி.எல்., தொடரில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த, மும்பை வீரர் என்ற பெருமையை, போலார்டுடன் (17 பந்து) பகிர்ந்து கொண்டார்.

 தவிர, இந்த சீசனில், பஞ்சாப்பின் லோகேஷ் ராகுலுக்கு (14 பந்து) அடுத்து, குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரர் ஆனார்.

கோல்கட்டா வீரர் சுனில் நரைனின் பந்தில், சிக்சர் அடித்த மும்பை அணி கப்டன் ரோகித் சர்மா, கிரிக்கெட் அரங்கில் 500வது சிக்சரை பதிவு செய்தார். இவர், ஒருநாள் போட்டிகளில் 169, 'டுவென்டி-20'ல் 302, டெஸ்டில் 29 சிக்சர் அடித்துள்ளார்



No comments: