Sunday, May 13, 2018

அதிக ஓட்டங்கள் குவித்து கொல்கட்டா சாதனை


 
கிங்ஸ்லெவன்
பஞ்சாப்புக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற போட்டியில் 245 ஓட்டங்கள் அடித்த கொல்கட்டா நைற் ரைடர்ஸ்  வெற்றி பெற்றது. நானயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கட்டா சுனில் நரேன், கப்டன் தினேஸ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியில்  6 விக்கெற்களை இழந்து 245 ஓட்டங்கள் அடித்தது. 246 இன்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் 8 விக்கெற்கள் இழப்புக்கு 214 ஓட்டங்கள் எடுத்து 31 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
கிரிஸ் லின், நரேன் ஆகியோர் களம் இறங்கினர்  27 ஓட்டங்கள் அடித்த கிரிஸ் லின் ஆட்டமிழந்தார். இந்தஜோடி முதல் விக்கெற்றுக்கு 55 ஓட்டங்கள் எடுத்தது. நரேனுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். 26 பந்துகளில் நரேன் அரைச்சதம் அடித்தார்பவர் பிளேயில் இந்த ஜோடி 55 ஓட்டங்கள் அடித்தது. டை வீசிய 12 ஆவது ஓவரில் நரேன் ஆட்டமிழந்தா.  36 பந்துகலைச்ச சந்தித்த நரேன் 4 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் அடங்கலாக 75 ஓட்டங்கள் அடித்தார். அதே ஓவரில் 24 ஓட்டங்கள் எடுத்த உத்தப்பா ஆட்டமிழந்தார்

நான்காவது விக்கெற்றில்  இணைந்த ரசல், கார்த்திக் ஜோடி அதிரடியாக வி்ளையாடியதால் கொல்கட்டா 200 ஓட்டங்களை விரைவில் எட்டியதுஅன்ரூ டையின் பந்தில் ஆட்டமிழந்த ரசல் 31 ஓட்டங்கள் எடுத்தார். 14 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரசல்ஸ்  3 பவுண்டரி 2 சிக்ஸ் அடங்கலாக 31 ஓட்டங்கள் அடித்தார். ரசல் , கார்த்திக் ஜோடி 76 ஓட்டங்கள் எடுத்தது. 23 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸ் அடங்கலாக 50  ஓட்டங்கள் எடுத்த கப்டன் கார்த்திக் ஆட்டமிழந்தார். கார்த்திக்,ஐபிஎல்லில் தனது முதலாவது அரைச்சதத்தைப் பதிவு செய்தார். 20 ஓவர் முடிவில் கொல்கட்டா 6 விக்கெற்கலை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது. சீர்லெஸ் 6 ஓட்டங்களுடனும் கில் 16 ஓட்டங்களுடனும் ஆட்ட மிழக்காது இருந்தனர்.அன்ரூ டை அதிக பட்சமாக 4 விக்கெற்களை வீழ்த்தினார்


2008 ஆம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக சென்னை அடித்த 240 ஓட்டங்களே அதிக பட்சமாக இருதது. அந்தச் சாதனையை முறியடித்த கொல்கட்ட 254 ஓட்டங்கள் எடுத்தது.  246 என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப்புக்கு கே.எல் ராகுல் அதிரடியாக விளையாடினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெயில்  அடக்கி வாசித்தார். கெயில் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 200 ஓட்ட இலக்கை விரட்டிச் செல்லும்போதெல்லாம் கெயில் ஏமாற்றுவது கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது. 2 முறை டக் அவுட்டிலும், ஒருமுறை 10 , 32 , 76  ஓட்டங்களில் என கெயில் ஆட்டமிழந்துள்லார்.. அது இந்த முறையும் தொடர்ந்தது.

அடுத்து வந்த மயங்க் அகர்வால்ஓட்டம் எடுக்காமலும் , கருண் நாயர் 3   ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். . ரசல், சியர்லஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய ராகுல், 22 பந்தில் அரைசதமடித்தார். பொறுப்பாக ஆடிய ராகுல் 66 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 19,  . ஆரோன் பின்ச் 34 ,  டை (14, அஷ்வின் 45   ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்..

பஞ்சாப் அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 214 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஸ்ரண் (1), மோகித் சர்மா (4) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் ரசல், 3 விக்கெட் கைப்பற்றினார்.


பஞ்சாப் அணிக்கு எதிராக 245 ஓட்டங்கள் குவித்த கோல்கட்டா அணி, இந்த சீசனில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதற்கு முன், கோல்கட்டாவுக்கு எதிராக டில்லி அணி, 219 ஓட்டங்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

*
இது, ஒட்டுமொத்த .பி.எல்., அரங்கில் பதிவான 4வது சிறந்த ஸ்கோர். முதல் மூன்று இடங்களில் பெங்களூரு (263/5, எதிர்:புனே வாரியர்ஸ், 2013), பெங்களூரு (248/3, எதிர்: குஜராத், 2016), சென்னை (246/5, எதிர்: ராஜஸ்தான், 2010) அணிகள் உள்ளன.


No comments: