கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரோயல் சலஞ் பெங்களூர் ஆகியவற்றுக்கிடையே இந்தூரில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற ரோயல் சலஞ் பிளே ஓவ் சுற்றை தக்கவைத்துள்ளது.இந்தப் போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றிருதால் இரண்டு புள்ளிகளைப்பெற்று வலுவான நிலையில் இருந்திருக்கும். அதன் மோசமான துடுப்பாட்டம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது.
நாணயச்ச்சுழற்சியில்
வெற்றிபெற்ற கோஹ்லி துடுப்பாட்த்தைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் சகல விக்கெற்கலையும் இழந்து 88 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் விக்கெற் இழப்பின்றி 92 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ராகுல்,
கிரிஸ் கெயில் ஆகியோரின் ஆட்டம் முதலில் நம்பிக்கையைக் கொடுத்தது. உமேஷின் பந்து வீச்சும் பெங்களூர் வீரர்களின் களத்தடுப்பும் பஞ்சாப்பை முடக்கியது. ராகுல் 21 ஓட்டங்கள், மெயில் 18 ஓட்டங்கள், பிஞ்ச் அதிகபட்சமாக 26 ஓட்டங்கள் எடுத்தனர் ஏனையோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். ஒருவர் டக் அவுட்டாகினர். அஸ்வின், மோகித் சர்மா, ராஜ் புத் ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். 15.5 ஓவர்கள் விளையாடிய பஞ்சாப் சகல விக்கெற்களையும் இழந்து 88 ஓட்டங்கள் எடுத்தது.
89 ஓட்டங்கள் என்ற இலக்குடன் கோஹ்லியும் பாட்டேலும் கள்ம் இறங்கினார்கள். 8.2 ஓவர்களில்விக்கெற் இழப்பின்றி 92 ஓட்டங்கள் எடுத்து பெங்களூர் வெற்றி பெற்றது. ப்ட்டேல் 4 0 ஓட்டங்களும் கோஹ்லி 48 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது உமேஷ் யாதவுக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment