சின்ன தல சுரேஷ் ரெய்னா செய்த சாதனைகள்
ஐபிஎல்லில்
அதிக ஓட்டங்கள்
குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை
சூப்பர் கிங்ஸ்
அணியின் சின்ன
தல சுரேஷ்
ரெய்னா, ராஜஸ்தான்
ரோயல்ஸுக்கு எதிரான போட்டியில் இரண்டு புதிய
சாதனைகளைப் படைத்தார். இந்த சீசனையும் சேர்த்து
11 சீசன்களில் சுரேஷ் ரெய்னா இதுவரை 171 ஆட்டங்களில்
4,853 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் சிஎஸ்கே அணிக்காக
மட்டும் 4012 ஓட்டங்கள் எடுத்துள்ளா
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ்
அணிக்கு எதிரான
ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா 35 பந்துகளில் 6 பவுண்டரிகள்
ஒரு சிக்சருடன்
52 ஓட்டங்கள் எடுத்தார். இந்த ஓட்டகுவிப்பின்போது, சிஎஸ்கே அணிக்காக 4,000 ஓட்டங்கள் குவித்த
முதல் வீரரானார்.
அவர் இதுவரை
சிஎஸ்கே அணிக்காக
142 ஆட்டங்களில், 4,012 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இதைத் தவிர,
இந்த 11 சீசன்களிலும்
ஒவ்வொரு சீசனிலும்
300க்கும் மேற்பட்ட
ஓட்டங்களைக் குவித்த ஒரே வீரராக உள்ளார்.
2008ல் 421, 2009-ல் 434, 2010-ல் 520, 2011ல் 438, 2012ல்
441, 2013ல் 548, 2014ல் 523, 2015ல்
374, 2016ல் 399, 2017ல் 442, 2018ல்
இதுவரை 313 ஓட்டங்கள் குவித்துள்ளார்
No comments:
Post a Comment