அடிடாஸ் டெல்ஸ்டார் 18
ரஷ்யாவில் அடுத்த
மாதம் 21ஆவது உலகக் கிண்ண
உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற உள்ளது. உலகின்
தலைச் சிறந்த 32 அணிகள் பங்கேற்கும் இந்தப்
போட்டியில் பயன்படுத்தப்படும் பந்து பல சிறப்பு
அம்சங்களை பெற்றுள்ளது
இந்த
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்
பயன்படுத்தப்படும் பந்துக்கு அடிடாஸ் டெல்ஸ்டார் 18 என்று
பெயரிடப்பட்டுள்ள ஸ்பெஷல் பந்து பயன்படுத்தப்பட உள்ளது.
டிவியில் பார்க்கும்போது, பந்து எங்கு உள்ளது
என்பது தெளிவாக தெரியும் வகையில்
இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர அதில்
சிப் பொருத்தப்பட்டுள்ளது. அதன்படி பந்து எங்கு
உள்ளது என்பதை மொபைலில் இருந்து
தெரிந்து கொள்ள முடியும்.
1970ல்
நடந்த உலகக் கிண்ண போட்டியில்
இருந்துதான், அடிடாஸ் நிறுவனம், பந்துகளை
தயாரித்து அளித்து வருகிறது. அப்போது
பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் டெல்ஸ்டார்.
தகவல் ஒலிபரப்புக்காக நாஸா அனுப்பிய டெல்ஸ்டார்
செயற்கைக்கோளை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பெயர்
வைக்கப்பட்டது. இந்த பந்து கறுப்பு,
வெள்ளை நிறத்தினாலானது.. தற்போது 2018 உலகக் கிண்ணப் போட்டிக்குப்
பயன்படுத்தும் பந்துக்கு டெல்ஸ்டார் 18 என்று பெயரிடப்பட்டுள்ளது.
பல்வேறு
சிறப்பு அம்சங்களை கொண்ட இந்தப் பந்துகளை,
பாகிஸ்தானில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள
சியால்கோட் நகரில் உள்ள அடிடாஸ்
நிறுவனத்துக்கு உதைபந்தாட்டப் பந்துகளை தயாரித்து தரும் பார்வர்டு ஸ்போர்ட்ஸ்
நிறுவனம் தயாரித்துள்ளது. 2014 உலகக் கிண்ணப் போட்டிக்கும்
இந்த நிறுவனமே பந்துகளைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கிண்ணப்
போட்டிக்கு எவ்வளவு பந்துகள் தயாராகின்றன
என்ற தகவல் இல்லை.
ஆனால்,
மாதத்துக்கு 7 லட்சம் உதைபந்தாட்டப் பந்துகளை
இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. வழக்கமாக இந்தப் பந்துகள், கைகளால்
தைக்கப்படும். ஆனால் இந்த உலகக்
கிண்ணப் பந்துகள் தெர்மோ முறையில் சூடேற்றப்பட்டு
ஒட்ட வைக்கப்பட்டுள்ளன. 2014லும் இந்த முறையில்
தயாரிக்கப்பட்ட பந்துகளே பயன்படுத்தப்பட்டன.
1990 முதல்
2010 வரை நடந்த உலகக் கிண்ணப்
போட்டிகளுக்குக் கைகளால் தைக்கப்பட்ட பந்துகளை
பாகிஸ்தான் அளித்து வந்தது. உலகிலேயே
அதிக அளவு உதைபந்தாட்டப் பந்து
பாகிஸ்தானில்தான் தயாராகிறது. சியால்கோட் பகுதியில் ஆண்டுக்கு 3 கோடி பந்துகள் ,தயாரிக்கப்படுகின்றன.
இது உலக அளவில் தயாரிக்கப்படும்
பந்துகளில் 40 சதவீதமாகும்
No comments:
Post a Comment