Friday, May 25, 2018

ஐபிஎல்லில் சின்ன தல ரெய்னா


   
 ஐபிஎல் சீசன் 11 முடிய இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னா, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இறுதிப்போட்டியில் மற்றொரு சாதனைக்கும் தயாராக உள்ளார். ஐபிஎல் 11வது சீசன் பிளே ஆப் சுற்றுகள் நடந்து வருகின்றன. அடுத்தது 2-வது தகுதிச் சுற்று ஆட்டமும்  இறுதிப்போட்டி மட்டுமே உள்ளன.
 ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓடங்கள் குவித்தோர் பட்டியில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார். பெங்களூர் கப்டன் விராட் கோஹ்லி அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்திருந்தார். இந்த நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது 22 ஓட்டங்களை எடுத்ததன் மூலம், மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ரெய்னா. ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்துடன் இந்த சீசனை அவர் முடிப்பார்.
இதுவரை 175 ஆட்டங்களில் 4,953 ஓட்டங்களை எடுத்துள்ளார் ரெய்னா. கோஹ்லி, 4,948 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் 14 ஆட்டங்களில் 413 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அடுத்து நடைபெறும் இறுதிப் போட்டியில் மேலும் 47 ஓட்டங்கள் எடுத்தால், ஐபிஎல் வரலாற்றில் 5,000 ஓட்டங்கள் கடந்த முதல் வீரராவார் ரெய்னா.

No comments: