சன் ரைஸ்சர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதலாவது தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ஒன்பதாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. முன்னையை போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய டிபிளிசி இறுதிவரை ஆட்டமிழக்காது வெற்ரியைத் தேடிக்கொடுத்தார்.
நாணயச்சுழற்சியில்
வெற்றி பெற்ற கப்டன் டோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 139 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 140 ஓட்டங்கள் எடுத்து2 விக்கெற்களால் வெற்றி பெற்றது.
ஹைதராபாத்
அணியில் ஷிகர் தவான், கோஸ்வாமி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.தீபக் சஹாரின் முதல் ஓவரில் முதல் பந்தில் தவான் ஆட்டமிழந்தார்.. அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். 4-வது ஓவரில் கோஸ்வாமி 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்த ஓவரில் 15 பந்தில் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார்.
அதன்பின்
சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. சாகிப் அல் ஹசன் 12 ஓட்டங்களிலும் , மணிஷ் பாண்டே 8 ஓட்டங்களிலும், யூசுப் பதான் 24 ஓட்டங்களிலும் வெளியேறினார்கள். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 88 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
18-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் இரண்டு சிக்சர் விளாசினார். இதனால் 17 ஓட்டங்கள் கிடைத்தது. கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச சன்சைரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் சேர்த்தது. பிராத்வைட் 29 பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 43 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் பிராவோ 2 விக்கெட், சாஹர், நிகிடி, ஷர்துல் தாகுர், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
140 என்ற இலகுவான இலக்குடன் இறங்கிய சென்னை வீரர்கள் ஹைதராபாத் வீரர்களின் பந்து வீச்சில் தடுமாறினர். புவனேஸ்குமார் வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்தில் வட்சன் டக் அவுட்டானார். அடுத்து களம் இறங்கிய ரெய்னா நீண்ட நேரம் நீடிக்கவில்லை 13 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சென்னையின் நம்பிக்கை நட்சத்திரமான ராயுடு ஓட்டம் எடுக்காது அதிர்ச்சியுடன் வெளியேறினார்.
டோனி 9 ஜடேஜா3, சாகர் 10 ஓட்டங்களுடன்
வெளியேறினர் 93 ஓட்டங்களுக்கு 7 விக்கெற்களை இழந்தபோது சென்னை, தோல்வியை நோக்கிச் சென்றது.
சென்னையின் வெற்றிக்கு 18 பந்துகளில் 43 ஓட்டங்கள் தேவைப்பட்டன. பிராத்வைட் வீசிய 18வது ஓவரில் 1 சிக்சர், 3 பவுண்டரி என 20 ஓட்டங்கள் எடுத்த டுபிளசி அரைசதம் எட்ட ஹர்பஜன் (2) ரன் அவுட்டானார். 19வது ஓவரில் ஷர்துல் 3 பவுண்டரி அடிக்க, கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 6 ஓட்டங்கள் மட்டும் தேவைப்பட்டன. புவனேஷ்வர் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில், டுபிளசி சிக்சர் அடிக்க 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்து சென்னை அணி இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. 42 பந்துகளுக்கு முகம் கொடுத்த டுபிளசி ஐந்து பவுண்டரி நான்கு சிக்சர்களுடன் 67 ஓட்டங்களுடனும் , 5 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஷர்துல் 15 ஓட்டங்களுடன் இறுதிவரை இறுதிவரை களத்தில் இருந்தனர்.
தோல்வியடைந்த ஐதராபாத் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது இரண்டாவது தகுதிகாண் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடி வெற்றி பெற்றால் இறுதிப் ப்[ஓட்டியில் விளையாடலாம்.
ஐ.பி.எல்., தொடரில்
9வது முறையாக பங்கேற்கும் சென்னை அணி 7வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இதில் 2010, 2011ல் சம்பியனாகியது.. கடந்த 2009ல் 4, 2014ல் 3வது இடம் பிடித்தது.
டுபிளசி நேற்று சந்தித்த முதல் 35 பந்தில் 41ஓட்டங்கள் மட்டும் தான் எடுத்தார். அடுத்த 7 பந்துகளில் 26 ஓட்டங்கள் விளாச சென்னை 'சூப்பர்' வெற்றி பெற்றது.
டுபிளசி நேற்று சந்தித்த முதல் 35 பந்தில் 41ஓட்டங்கள் மட்டும் தான் எடுத்தார். அடுத்த 7 பந்துகளில் 26 ஓட்டங்கள் விளாச சென்னை 'சூப்பர்' வெற்றி பெற்றது.
ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்கு ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் ஹீரோவாக ஜொலிக்கிறார். பிராவோ (68), பில்லிங்ஸ் (56), வாட்சன் (106), ரெய்னா (54), டோனி (70), அம்பதி ராயுடு (79, 100), ரெய்னா (61), பிராவோ (68), ஜடேஜா (18 / 3 விக்.,), லுங்கிடி (10 / 4 விக்.,) வரிசையில் தற்போது டுபிளசியும் (67) இணைந்தார்.
வில்லியம்சன் 18 ரன் எடுத்த போது சகார் பந்தை எதிர்கொண்டார். இதில் 3வது ரன்னுக்கு ஓடிய போது ரன் அவுட் வாய்ப்பு வந்தது. ஹர்பஜனிடம் இருந்து பந்தை பெற்ற தோனி, அருகில் இருந்த 'ஸ்டம்சை' தகர்க்காமல் தவறு செய்ய கோஸ்வாமி தப்பினார்.
இதேபோல 11.5வது ஓவரில் கிடைத்த பிராத்வைட் 'ரன் அவுட்' வாய்ப்பையும் 'மிஸ்' செய்தார் தோனி.
ஐ.பி.எல்., சீசன் 11ல் அம்பயர் முடிவுகள் மோசமாக இருப்பதாக பலர் விமர்சித்து வருகின்றனர். நேற்றும் இது தொடர்ந்தது. சகார் வீசிய 5.5 வது ஓவரில் கைநழுவிய பந்து பேட்ஸ்மேன் (சாகிப்) தலைக்கு மேல் சென்று விழுந்தது. இதற்கு 'நோ பால்' அல்லது 'வைடு' கொடுத்திருக்க வேண்டும். எராஸ்மஸ் சக அம்பயரிடம் விவாதித்து விட்டு, 'டெட் பால்' என அறிவித்தார்.
ஐ.பி.எல்., தொடரில் நேற்று 175 போட்டியில் களமிறங்கினார் ரெய்னா. இவர் சென்னை அணிக்காக 146, குஜராத் அணிக்காக 29 (2016, 2017) போட்டிகளில் பங்கேற்றார்.
இதேபோல, ஐதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர், நேற்று தனது 100வது ஐ.பி.எல்., போட்டியில் களமிறங்கினார்.
No comments:
Post a Comment