மும்பையைத் தொடரும் டக் அவுட் சாதனை
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் இந்த சீசனில் மும்பையின் இஷான் கிஷண், கப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது முறையாக கோல்டன் டக் அவுட்டாயினர்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. இதில் பெங்களூருவில் நடக்கும் 31வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் விளையாடின.
முதலில் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 168 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை முதல் ஓவரிலேயே இஷான் கிஷணை இழந்தது.
இந்த சீசனில் அவர் மூன்று முறை ஓட்டம் ஏதும் எடுக்காமல் டக்அவுட்டாகியுள்ளார். அதில் இரண்டாவது முறையாக முதல் பந்திலேயே அவுட்டாகி, கோல்டன் டக் அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து கப்டன் ரோஹித் சர்மாவும் கோல்டன் டக் அவுட்டானார். இந்த சீசனில் இரண்டாவது முறையாகவும், இதுவரை 9 முறையும் அவர் கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார்.
இந்த சீசனில், மும்பை அணியைச் சேர்ந்த 12 பேர் டக்அவுட்டாகி, புதிய சாதனையைப் படைத்துள்ளனர். அதில் 8 பேர் கோல்டன் டக் அவுட்டாகியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்தான் மிகவும் குறைந்தபட்சமாக, 2 பேர் டக் அவுட்டாகியுள்ளனர். . பஞ்சாப் அணியின் ஆரோன் பிஞ்ச் இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு முறை கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார்.
No comments:
Post a Comment