Monday, November 21, 2022

இங்கிலாந்தின் கோல் மழையால் ஈரான் தோல்வியடைந்தது


 கட்டாரில் உள்ள கலிஃபா மைதானத்தில் நடைபெற்ற   குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரானுக்கு எதிரான போட்டியில் 6- 2  எனும் கோல்கணக்கில்  இங்கிலாந்து பிரமாணட்மான  வெற்றியைப் பெற்றது, "ஒன்லவ் ஆர்ம்பேண்ட்" அணியக்கூடாது என்று பீபா கண்ண்டிப்பான  உத்தரவிட்டதால்  இங்கிலாந்து வீரர்கள் முழங்காலில் இருந்து தமது எதிர்ப்பை  வெளிப்படுத்தினர். தேசிய கீதத்தின் போது ஈரானிய வீரர்கள்   மௌனமாக இருந்தனர். போட்டியின் தொடக்கத்தில் வீரர்கள் வரிசையில் நிற்கும் காட்சிகளை ஈரானிய அரசு தொலைக்காட்சி காட்டவில்லை  இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்திய நிலையில் ஈரான் கோல்கம்பத்தை பந்து சுற்றி வந்தது. சக வீரருடன் மோதியதில் ஈரான் கோல் கீப்பர் மஜீத் ஹூசைனுக்கு முகத்தில் பலத்த காயமடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

35 நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜூடு முதல் கோல் அடித்து தனது அணியின் எண்ணிக்கையை தொடக்கிவைத்தார். இதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தனர். பதிலுக்கு ஈரானால் இரு கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இறுதியில் இங்கிலாந்து 6க்கு2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து வீரர்களான ஜூட் பெல்லிங் 35 , புக்யோ சகா 43, 62 , ஸ்டெர்லிங் 45+1, ராஷ்ஃபோர்ட் 71 , கிரீலிஷ் 90 நிமிடங்களில் கோல் அடித்தனர். ஈரான் வீர்ர்  டாரெமி 65, 90+13[ பெனட்லி] நிமிடங்களில் கோல் அடித்தார்.

இங்கிலாந்தின் இளம் வீரரான  பெலிங்காம்  19 வயது 145 நாட்கள். முன்னதாக மைக்கல் ஓவன் 18 வயது 190 நாட்களில்  கோல் அடித்தார்.

நெதர்லாந்து  வென்றது

ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் செனகல் - நெதர்லாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் ஆரம்பம் முதலே சமபலத்துடன் மோதின. முதல் பாதியில் இரு அணிகளின் கோல் முயற்சிகள்  ம் முறியடிக்கப்பட்டன. 

இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டின. இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும், 83 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கக்போ நேர்த்தியாக கோல் அடித்து அசத்தினார்.தொடர்ந்து தாக்குதலை நெதர்லாந்து வீரர்கள் தீவிரப்படுத்திய நிலையில், கூடுதல் நேரத்தின் இறுதி நிமிடத்தில், செனகல் கோல்கீப்பரிடம் இருந்து திரும்பிவந்த பந்தை மீண்டும் கோல் வலைக்குள் தள்ளினார் கிலாசன்.

இறுதி வரை போராடியும் செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட போடமுடியவில்லை இதனால் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.

அமெரிக்காவுடனான  போட்டியை சமப்படுத்திய வேல்ஸ்

64 வருடங்களின்  பின்னர் பெரும் எதிர்பார்புடன்  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய வேல்ஸ்,   அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியை சமப்படுத்தி நம்பிக்கையளித்தது.

முதல் பாதியில் அமெரிக்கா முழு ஆதிக்கம் செலுத்தி 36 நிமிடங்களில் முன்னணியில் இருந்தது, உதைபந்தாட்ட ஜாம்பவான்  ஜார்ஜ் வேவின் மகன் திமோதி வே, கிறிஸ்டியன் புலிசிக்கின் த்ரோ-பந்தில் கோல் அடித்தார். 81 ஆவது நிமிடத்தில் கிடைத பெனால்டிய  வேல்ஸ் அணிதலைவர் கரத் பேலே  கோலாக்கினர்.

1958 இல் ஹங்கேரிக்கு எதிராக டெர்ரி மெட்வின் அடித்த பின்னர் உலகக் கிண்ணப் போட்டியில் வேல்ஸின் முதல் கோல் இதுவாகும்.1- 1 என்றகோல்க்ணக்கில் போட்டி சம நிலையில்  முடிவடைந்தது.

வேல்ஸ் அடுத்த வெள்ளிக்கிழமை காலை ஈரானை எதிர்கொள்கிறது.அதே நாளில் மாலையில் அமெரிக்கா,   இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

No comments: