Monday, November 14, 2022

உலகக்கிண்ண மோகத்தால் பிளவுபட்ட கேரள கிராமம்


 கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள புள்ளவூர் கிராமத்தில் உள்ள உதைபந்தாட்ட ரசிகர்கள்  மஞ்சள், நீலம் எனப் பிரிந்துள்ளனர்.  சிலர் சிவப்பு நிற‌த்துக்கு மாறியுள்ளன.

 நெய்மர் [பிறேஸில்],மெஸ்ஸி ஆர்ஜென்ரீனா], ரொனால்டோ [போத்துகல்]  ரசிகர்களால் அந்தக் கிராமம் களைகட்டியுள்ளது. குறுங்காட்டுக் கடவு ஆற்றங்கரையில் மெஸ்ஸி தண்ணீரின் மீது நடந்தார், நெய்மர் அவருக்கு முன்னால் சில அடிகள் செல்கிறார். அவர்களுக்குப் பின்னால்,   45 அடி உயர ரொனால்டோ பார்த்துக் கொண்டிருந்தார்.

சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பான பீபா, புள்ளவூர் ஆற்றில் உள்ள கட்அவுட்களின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "#FIFAWorldCup காய்ச்சல் கேரளாவைத் தாக்கியுள்ளது" என்று ட்வீட் செய்திருந்தது.

விளையாட்டின் மீதான கேரளாவின் ஆவேசத்தை பீபா  ஒப்புக்கொண்டது, முதல்வர் பினராயி விஜயனை ஒரு ட்வீட் மூலம் பதிலளிக்கத் தூண்டியது: “ கேரளாவும் எப்போதும் கால்பந்தை விரும்புகின்றது, மேலும் அது #Qatar2022 உடன் முழு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் மீதான எங்களின் ஈடு இணையற்ற ஆர்வத்தை அங்கீகரித்ததற்கு @FIFA நன்றி”  என அவர் பதிலளித்துள்ளார்.

 

No comments: