இலங்கையில் இருந்து தொழில் வாய்ப்புப் பெற்று வெளிந்நாடுகளிகுச் செல்லும் பெண்கள் துன்புறுத்தாப்டுவது தொடர்கதியாக உள்ளது. ஓமானில் நடைபெற்ற விழா ஒன்றில், அபுதாபிக்கு வீட்டுப்பணிப் பெண்களாக அழைத்துச் செல்லப்பட்ட 12 இலங்கைப் பெண்கள் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியில் சிக்கித் தவிக்கும் பல
பெண்கள் இலங்கையில் உள்ள பிரபல தம்பதியினரைத் தொடர்பு கொண்டு உதவி கோரியதை அடுத்து
சந்தேகத்திற்கிடமான மனித கடத்தல் மோசடி அம்பலமாகியுள்ளதாக இலங்கையின் ஊடகங்கல்
செய்கிகளை வெளியிட்டுள்ளன. 16 பெண்கள் ஒரு அறையில் அடைத்து வைக்கப்படிருப்பதாக
தகவல் வந்துள்ளது.
சுற்றுலா விசாவில் அபுதாபி ஊடாக ஓமானுக்கு சிலர் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஹட்டனை தளமாகக் கொண்ட தரகர் ஊடாக குறித்த பெண்கள் கட்டுகஸ்தோட்டையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் நிலையமொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மருதானையில் உள்ள பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு உப முகவர் தகவல் அனுப்பியிருந்தார்.ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டுமே பணிபுரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ளது.பதிவு செய்தவுடன், பெண்களுக்கு பயணச்சீட்டுகள் தரகர் மூலம் வழங்கப்பட்டு, சுற்றுலா விசாவில் அபுதாபிக்கு அனுப்பப்பட்டார்கள்.
சுற்றூலா விசாவில் விசாவில் ஓமனுக்குச் சென்று வேலை செய்ய முடியாது
என்பதும் அது சட்டவிரோதமானது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால், ஓமனில் வேலை
கிடைக்கும் என்று கருதிச் சென்றார்கள். அவர்களி வெளிநாட்டுக்கு அனுப்பிய உரவிநர்களுக்
இதனை அரியவில்லை.
பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு ஓமானில் ஸ்பான்சர்கள் இல்லை
என்பது தெரிய வந்தது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப்
பணியக இருக்கிரது அங்கு சென்றால் அல்லது தொலைபேசியில் தொடர்புகொண்டால் முழு விபரமும் அரியலாம் என்பது பலருக்குத் தெரியாது.
இந்த நடை முறைகள் பற்றி எதுவும் தெரியாஅதவர்களே
போலி முகவர்களிடம் சிகி பரிதாபப்படுகிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முற்றப் புலனாய்வுத் ட் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குற்றவாளிகள் எப்படித்தப்பலாம் என்பதைப் பற்ரிச்
சிந்திக்கத் தொடங்குவார்கள். நூற்றுக் கணக்கான
பெண்கள் வெளிநாடுகளில் துன்புறுத்தப்படுவதாகச் செய்திகள் வருகின்றனர்.
இதனைத் தடுப்பதற்கான உரிய
நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
வாழ்க்கைக்கை வளம் பெற வேண்டும் என்பதர்காகவே அவர்கள் குடும்பங்களைத்துறந்து வெளிநாட்டுகுச் செல்கிறார்கள். அந்தத் துன்பம் தொடர்கதையாகக்கூடாது.
No comments:
Post a Comment