இலங்கைத் தமிழ் அரசியலில்
தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் தலைவர் யார் என்பதில் பெரும்
இழுபறி நடைபெறுகிறது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழ் அரசுக் கட்சி, தமிழர்
விடுதலைக் கூட்டணி,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தமக்குரிய பங்களிப்பை ஒரு காலத்தில் செயற்படுத்தினர்.
இன்று வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கு அதிகமான கட்சிகள் முளைத்துள்ளன. தந்தை செல்வநாயகம், ஜி,ஜி, பொன்னம்பலம் போன்ர தமிழ்த் தலைவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது சிங்களத் தலைவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் முன் வைக்கும் ஆவணங்களும், வாதங்களும் சிங்களத் தலைவர்களை வாயடைக்க்செசெய்யும் வல்லமை யானவை.
இலங்கை சுதந்திரமடைந்த போது
உருவான பிரச்சனைகளுக்கு இன்னமும் தீர்வு
காணப்படவில்லை. அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னர் பேச்சு வார்த்தையின் மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு
காணவேணௌம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
அறிவித்துள்ளார். 50 வருட அரசியல அனுபவம் உள்ள ஜனாதிபதிக்கு
தமிழ் மக்களின் பிரச்சனையின் மூல வேர் எது என்பது மிக அநன்றாகத் தெரியும். ஒறுமையாக
வாருங்கள் பேசித் தீர்ப்போம் என சிங்கள அரசியல்
அமைச்சர் ஒருவர் சொன்ன்ச் போது நீங்கள் முதலில்
ஒற்றுமையாகுங்கள் என தமிழ்த் தலர்வர் ஒருவர்
பதிலளித்தார். இரண்டு பக்கத்திலும் ஒறுமை இல்லை
என்பது வெளிப்படையானது. ஆனால், அரசியல் ஆதாயத்துக் காக சிங்கள அரசியல் தலைவர்கள் ஒன்றுபடுவார்கள். தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக தமிழ்த் தலைவர்கள் ஒன்றுபடுவதுநடக்காத சம்பவம்.
ஜனாதிபதி ரணில் விடுத்த
பொதுவான அழைப்பின் பின்னர் சம்பந்தரின் வீட்டில் ஒன்று கூடுவதற்கு தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் சுமந்திரன் அழைப்பு விடுத்தார். சுமந்திரனின் அழைப்புக்கு
முக்கியத்துவம் கொடுத்து மாவையார் மட்டும் அங்கே சென்றார். மறைய தலைவர்கள் அந்த அழைப்பிப் புறக்கனித்து விட்டனர். சுமந்திரனுக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே காய் நகர்த்துகிறார்கள்.
வயது முதிர்வு காரணமாக இயங்கு நிலை இல்லாதிருக்கும் சம்மந்தனிடம் இருந்து தலைமைப் பதவியைப் பரிக்க வேண்டும் என்ற குரல் அவ்வப்போது ஓங்கி ஒலிப்பதும் பின்னர் அடங்குவதுமாக இருகிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே சம்பந்தனிடம் இருந்து தலைமைப் பதவியைப் பரிக்க வேண்டும் என்று கருதுகையில் மற்றைய கட்சித்தலைவர்கள் எப்படி ஒன்ரு படுவர்கள். கூட்டமைப்பின் கருத்துகள், அறிக்கைகள் அனைத்துக்கும் பின்னால் சுமந்திரன் இருப்பது வெளிப்படையானது. சுமந்திரனுக்குப் பக்க பலமாக சாணக்கியன் இருக்கிறார். இந்த இருவர் அணிக்கு எதிராக அந்தக் கட்சியில் உள்ளவர்களே கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
கூட்டமைப்புக்கு எதிராகவும், சுமந்திரனுக்கு எதிராகவும் கஜேந்திரகுமாரின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகிய இரண்டு
தலைவர்களில் இரண்டு துருவங்களாக இருக்கிறார்கள். உள் நாட்டிலும் ,வெளிநாட்டிலும் இவர்களின் கருத்துடன் ஒத்துப் போபவர்கள் பலர் இருக்கின்றன. ஆனால், இவர்கள் இருவரும் ஒரே கருத்தை ஒரு குரலில் சொல்வதற்கு
முன்வருவதில்லை. இலங்கையில் நடக்கும்
அரசியல் அசிங்கங்கள் வெளிநாடுகளிலும் அரங்கேற்றப் படுகின்றன. கஜேந்திரா குமாரின் கட்சியில் இருந்த மக்களின் செல்வாக்குப்
பெற்ற தலைவர்களில் ஒருவரான மணிவண்ணன் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார். கஜேந்திரனின் அரசியல் எதிரியான டக்ளஸின் ஆதரவுடன் யாப்பாணநகர மேஜராக இருக்கிறார்.
ஆனந்தசங்கரி, கஜேந்திரகுமார் , செல்வம் அடைக்கலநாதன் சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், ஸ்ரீதரன், சி.கா. செந்தில்வேல், கிழக்குத் தமிழர் ஐக்கிய முன்னணி, விக்னேஸ்வரன், ஐங்கரநேசன், அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் – ஸ்ரீகாந்தா என தமிழ்த் தலைவர்களின் பட்டியல் மிக நீளமானது. அரசியல் கட்சி எனும் பெயரில் சிலர் அமைப்புகளை நடத்துகிறார்கள். தேர்தல் திணைக்களத்தில் பதியாமல் காலத்தை ஓட்டுகிறார்கள்.
இந்தியாவுக்குக் கடிதம் அனுப்பியபோதும், ஐநாவுக்குக் கோரிக்கை அனுப்பிய போதும் நடந்த் கூத்துகள் அனைத்தும் சந்திக்கு வந்தன, தேர்தலின் போது ஒன்றுபடாமல் போட்டியிட்டல் வாக்குகள் சிதறும் அபாயம் உள்ளது. தமிழ் மக்களுக்காக தமது வீம்புகளை விடுத்து தமிழ்த் தலைவர்கள் அனைவரும் ஒரு குரலில் பேச வேண்டும். இதைத்தான் மக்கள் விரும்புவார்கள்.
No comments:
Post a Comment