கோவை
சிலிண்டர் வெடிப்பு, வரலாறுகாணாத கன மழை இவற்றுக்கிடையே
தமிழக அரசியலில் சில காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன. மேற்கு
வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக
முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இதே நேரத்தில் தமிழக
ஆளுநரிக்கு எதிரான பிரமாஸ்திரத்தை
ஸ்டாலின் தொடுத்துள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சராக திரிணாமுல்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி
உள்ளார். கடந்த
சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மேற்கு
வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை
தக்க வைத்துள்ளார். இதன்மூலம் மேற்கு வங்க முதல்வராக
மம்தா பானர்ஜி பொறுப்பேற்று ஹட்ரிக்
சாதனை படைத்துள்ளார்இவருக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல்
போக்கு உள்ளது. அதற்கு சற்றும்
சளைக்காமல் காங்கிரஸையும்
அவர் கடுமையாக எதிர்க்கிறார். காங்கிரஸை எதிர்க்கும் அரசியல்
தலைவர் ஒருவர் காங்கிரஸுடன்
மிக நெருக்கமாக இருக்கும்
ஸ்டாலினைச் சந்தித்தது அரசியல் அரங்கில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
தேசிய
ரீதியில் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது
அணியை உருவாக்க மம்தா முயற்சி செய்கிறார்.
இதனால் காங்கிரஸ் அவர் மீது கடுப்பாக
உள்ளது. 2024 நாடாளுமன்ற
தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்தும் முனைப்பில்திராவிட
முன்னேற்றக் கழகமும், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் உள்ளதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்பட்டது .
மம்தா
பானர்ஜி இரண்டு நாள்
சுற்றுப்பயணமாக சென்னை வருவதாகவும், சென்னையில்
முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஸ்டாலினுடன் சந்திப்பு மேற்கு வங்க மாநில
ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த இல கணேசன்
உள்ள நிலையில் அவர் சகோதரரின் 80வது
பிறந்தநாள் விழாவில் பங்கேற்க
இல கணேசன் அழைப்பு விடுத்த
நிலையில் மம்தா பானர்ஜி சென்னை புறப்பட்டு வந்தார்.
ஸ்டாலின் மம்தா சந்திப்பை இந்தியாவின் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் உன்னைப்பாக அவதானித்தன. , ‛‛சென்னை பயணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்திக்க உள்ளேன். ஸ்டாலின் எனது அரசியல் நண்பர். சென்னை செல்வதால் மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளேன்'' என்றார். மேலும் அரசியல் பற்றி விவாதிக்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க, அவர், ‛‛இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது அரசியல் பேசுவது வழக்கமானது தான்'' என்றார். தேசிய அளவில் கவனம் மம்தா பானர்ஜி இவ்வாறு கூறியதால் இந்த சந்திப்பு என்பது தேசிய அளவில் கவனம் பெற்றது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உன்னிப்பாக கவனித்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் மம்தா பானர்ஜி காங்கிரஸை விரும்பாத நிலையில் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கிடையே தான் சென்னையில் முதல்வர் ஸ்டாலின்-மம்தா பானர்ஜி ஆகியோர் சந்தித்து பேசினார். இதில் தேசிய அரசியல் பற்றி விவாதிக்கலாம் என்பதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
சென்னை
ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில்
முதல்வர் ஸ்டாலினை, மம்தா பானர்ஜி சந்தித்து
பேசினார். ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோர்
சந்திப்புக்கு பிறகு ஒருசேர பத்திரிகையாளர்களை
சந்தித்தனர். அப்போது ஸ்டாலின் கூறுகையில், ‛‛மம்தா பானர்ஜி என்னை
மேற்கு வங்கத்துக்கு அழைத்தார். இந்த அழைப்பை நான்
ஏற்றுக்கொண்டேன். இது மரியாதை நிமித்தமான
சந்திப்பு. அரசியல், தேர்தல் குறித்து பேசவில்லை''
என்றார். அதேபோல் மம்தா பானர்ஜி, ‛‛தமிழக
முதலமைச்சர் ஸ்டாலின் என் சகோதரர் போன்றவர்.
சென்னை வந்துவிட்டு எப்படி முதல்வர் ஸ்டாலினை
சந்திக்காமல் செல்ல முடியும். இது
மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். இரண்டு அரசியல்
தலைவர்களும் அரசியலை தவிர்த்து வேறு
விஷயங்கள் பற்றியும் பேசலாம். இந்த சந்திப்பில் நாங்கள்
அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை''
என்றார்.
அரசியல் நாகரீகம் கருதி அரசியல் பேசவில்லை எஅ இருஅவ்ரும் சொன்னதை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை.ஆளுநர் இல. கணேசனையும், பாரதீஜ ஜனதாவையும் மிகக் கடுமையாக எதிர்த்த மம்தா இப்போது அடக்கி வாசிக்கிறார். ஆளுநர் இல.கணேசனின் அழைப்பை ஏற்று தமிழகம் வந்துள்ளார் மம்தா. இந்தச் சந்திப்பில் உண்மைத்தன்மை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்படும்.
பாரதீய
ஜனதாக் கட்சி ஆட்சியில் இல்லாத
மாநில முதலமைச்சர்களுக்கும், ஆளுநர்கலுக்கும் இடையில் முட்டல், உரசல்,
மோதல் என்பன உச்சக்கட்டத்தில்
உள்ளது. ஆளுநர் தனது கடமையை விடுத்து பாரதீய ஜனதாவின் அரசியலை முன்னெடுத்து
வருகிறார்.
ஆளுநர்
பதவி விலக வேண்டும் என்று
திமுக தோழமைக்கட்சிகளின் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.
திமுக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட்,
மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக
உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக சேர்ந்து இந்த
அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு
ஆளுநராக ஆர் என் ரவி
பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் ஏதாவது
சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதற்குக் காரணம், தமிழகத்தில் தேவையற்ற
வீண் சர்ச்சைகளை உருவாக்கி குழப்பம் ஏற்படுத்தும் நோக்கமோ, அல்லது தன்னை நோக்கிய
கவனிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்ற
நோக்கமோ என தெரியவில்லை. எதுவாக
இருந்தாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின
மக்கள், திருக்குறள் குறித்து அவர் கூறும் கருத்துகள்
அபத்தமானவையாகவும் ஆபத்தானவையாகவும் இருக்கின்றதாக தமிழகத் தலைவர்கள் குற்றாம் சாட்டுகின்றனர்.
இன்னொரு பக்கம் ஆளுநரை திரும்ப
பெற கோரி திமுக சார்பாக
ஜனாதிபதியிடன் முறையிடப்பட உள்ளது. திமுக சார்பாக
இதற்காக கூட்டணி கட்சிகளிடம் கையெழுத்து
வாங்கப்பட்டு வருகிறது.பாரதீய ஜனதாக் கட்சியின்
செல்லப்பிள்ளையான ஆளுநர் ரவியை மாற்றுவதர்குரிய
சூழல் இப்போதைக்கு இல்லை. ஆனால், இந்தக்
கோரிக்கை அவர் மீதான நம்பிக்கை
இன்மையை வெளிப்படுத்தி உள்ளது.
ஆளுநரும், பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களும் தமிழக அரசி மீது வன்மத்தை வெளிப்படுத்தினாலும், ஸ்டாலின் அரசு இலக்கை நோக்கிப் பயனிக்கிறது.
No comments:
Post a Comment