உதைபந்தாட்ட ரசிகர்களின் கனவான உலகக்கிண்ண உதைபந்தாட்டப் ஓட்டிக்கு கட்டார் தயாராகிவிட்டது. விடிந்தால் உலகக்கிண்ண உதைபந்தாட்டம் ஆரம்பமாகிவிரும். பாசம் மிக அவீரர்களை நேரில பார்ப்பதர்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
22 ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரை மிகப் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளுடன் கட்டாரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் அணிகள் கட்டாருக்கு சென்று விட்டன. இலகெங்கிலும் இருந்தி ரசிகர்கள் கட்டாரை நொக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.உலக விளையாட்டு திருவிழாக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுபீபா உலக கிண உதைபந்தாட்டம் .
கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய கட்டார் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானி, கத்தாரில் உலக உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்கிற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போதிருந்தே கத்தார் அரசு இதற்கான முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியது. 2010 ஆம் ஆண்டு 2022ஆம் ஆண்டுக்கான போட்டியை நடத்தும் நாட்டை செய்வதற்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் , ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் கட்டாரும் கலந்து கொண்டது.பலத்த போட்டிகளுக்கிடையே இந்த வாய்ப்பை பெற்றது ட்டார்.
உலகக்
கிண்ணப் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் வெல்வதற்கான
அனைத்து முயற்சிகளையும் கட்டார் அரசு முழுவீச்சுடன் நிறைவேற்றயதாக கூறுகிறார் 2022
பீபா உலகக் கிண்ணப் போட்டியின் முதன்மை செயல்
அலுவலர் நாசர் அல் காதர்.உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் முதன் முறையாக மத்திய கிழக்கு நாடான
கட்டாரில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற
உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றும், அதை கட்டார் அரசு நடத்துவது நெகிழ்ச்சியானது என்றும்
குறிப்பிட்டுள்ளார் நாசர் அல் காதர். ஏலத்தில்
வென்று உலகக் கிண்ணப் போட்டி நடத்தும் வாய்ப்பை பெற்ற உடனே அதற்கான கட்டமைப்பு
வேலைகளை தொடங்கியது கட்டார் அரசு. ஆனால், அதற்கும் பல பிரச்சினைகள் உருவாகின.
ஏறத்தாழ 500 கோடி அமெரிக்க டொலர் செலவில் தற்போது ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட தயாராக உள்ளன. உலகத் தரத்திலான எட்டு மைதானங்களை கட்டமைத்துள்ளது கட்டார் அரசு. அதோடு போட்டிகள் நடைபெறும் நகரங்களுக்கிடையே ரசிகர்கள் எளிதாக சென்றுவர பிரத்யேக மெட்ரோ ரயில் சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு ரசிகர்கள், வீரர்கள், அலுவலர்கள் என வெளிநாட்டினர் தங்குவதற்கான ஏற்பாடுகள், உட்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தையும் கச்சிதமாக செய்து முடித்து தயாராக உள்ளது கட்டார்.
உலகின்
முன்னணியில் இருக்கும 32 அணிகள் மோதும் உலகக் கிண்ணப் போட்டியின் முதல் போட்டி 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில்
கட்டப்பட்டுள்ள அல் பைத் மைதானத்தில் நவம்பர் 20 ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில்
கட்டார் அணியும் ஈக்வடார் அணியும் மோத உள்ளன. 64 போட்டிகளுக்காக 30 லட்சம் டிக்கெட்டுகள்
அச்சடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 12 லட்சம் ரசிகர்கள் வருவார்கள்
என எதிர்பார்ப்பதாக கட்டார் அரசு அறிவித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் போது ரசிகர்களையும் வீரர்களையும்
உற்சாகப்படுத்துவதற்காக 90 வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் கட்டார்ர் அரசு
ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான கட்டாரில் நடைபெறும் இந்தப் போட்டிதான் உலகக் கிண வரலாற்றிலேயே குளிர்காலத்தில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment