Friday, November 4, 2022

உலகக் கிண்ணப் போட்டிக்கு ஜப்பான் அணி அறிவிப்பு


 கட்டாரில் நடைபெறும் உலகக்கிண்ணப் போட்டிக்கான அணிய ஜப்பான்  பயிற்சியாளர் ஹாஜிம் மொரியாசு வெளியிட்டுள்ளார். இது ஜப்பானின் ஏழாவது உலகக் லகக்கிண்ணப் போட்டியாகும்.

 மூன்று முறை 16வது சுற்றுக்கு வந்துள்ளது. 2018 இல் பெல்ஜியத்திடம் 2-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இது 2010 இல் பெனால்டியில் பராகுவேயால் வெளியேற்றப்பட்டது. 2002 இல்   தென் கொரியாவுடன் இணைந்து  உலகக்கிண்ணப் போட்டியை நடத்தியபோது துருக்கியிடம் 1-0 என தோற்றது.

26 பேர் கொண்ட அணியில் உண்மையான ஆச்சரியங்கள் எதுவும் இல்லை, நிச்சயமாக அதிக அளவில் விளையாடும் வீரர்களின் முதல் வரிசையில் இல்லை.

டிஃபெண்டர்களான மாயா யோஷிடா மற்றும் ஹிரோகி சகாய் ஆகியோர் தொடர்ந்து மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுகின்றனர். டிஃபென்டர் யூடோ நாகாடோமோ ,கோல்கீப்பர் எய்ஜி கவாஷிமா ஆகியோருக்கு இது  நான்காவது போட்டியாகும்.

ஜப்பான் நவம்பர் 23 அன்று ஜேர்மனியை எதிர்கொள்கிறது, நவம்பர் 27 அன்று கோஸ்டாரிகாவையும், டிசம்பர் 1 ஆம் திகதி ஸ்பெயினையும் எதிர்கொள்கிறது. பலமான அணிகளுடன் ஜப்பான்  உள்ளது.

ஜப்பான் அணி:

கோல்கீப்பர்கள்: ஷுய்ச்சி கோண்டா, டேனியல் ஷ்மிட், எய்ஜி கவாஷிமா.

டிஃபெண்டர்கள்: மிகி யமானே, ஹிரோகி சகாய், மாயா யோஷிடா, டேகிரோ டோமியாசு, ஷோகோ தனிகுச்சி, கோ இடகுரா, ஹிரோகி இடோ, யூடோ நாகடோமோ, யூதா நகயாமா.

மிட்ஃபீல்டர்கள்: வதாரு எண்டோ), ஹிடெமாசா மொரிடா, ஏஓ டனகா, காகு ஷிபாசாகி, கவுரு மிடோமா, டைச்சி கமடா, ரிட்சு டோன், ஜுன்யா இடோ, டகுமி மினாமினோ, டேக்ஃபுசா குபோ, யூகி சோமா.

ஃபார்வர்ட்ஸ்: டெய்சன் மேடா, டகுமா அசானோ, அயாசே உடே

No comments: