வேல்ஸ் ரசிகர்கள் அணிந்திருந்த வானவில் தொப்பிகளையும், சீருடைகளையும் காவலர்கள் அகற்றியதாக வேல்ஸ் உதைபந்தாட்ட கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவுடனான போட்டிக்கு
முன்னதாக, , LGBTQ+ சமூகத்துடன்
ஒற்றுமையாக அணிந்திருந்த ரெயின்போ தொப்பிகளை
அகற்றுமாறு ரசிகர்களிடம் கூறப்பட்டதற்கு வேல்ஸ் உதைபந்தாட்ட
சங்கம் சங்கம்(FAW) எதிர்ப்புத்
தெரிவித்துள்ளது.
வானவில்
சட்டை அணிந்ததற்காக மைதானத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக அமெரிக்க பத்திரிகையாளர் கிராண்ட் வால், கூறினார்.
"இப்போது: பாதுகாப்புக் காவலர் என்னை மைதானத்திற்குள் அனுமதிக்க மறுக்கிறார்" என்று வால் ட்விட்டரில் பதிவிட்டார்.அவர் கிட்டத்தட்ட அரை மணி நேரம் காவலில் வைக்கப்பட்டதாகவும், ஒரு பாதுகாப்பு ஊழியர் அவரது கைகளில் இருந்து தனது தொலைபேசியை வலுக்கட்டாயமாக பறித்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்." என்றும் அவர் கூறினார்.
இதேவேளை பியர் வேண்டும்" என்ற கோஷம் உலக கவனத்தை ஈர்த்தது. மைதானங்களில் மதுபானத்துடன் கூடிய பியர் விற்பனை தடை செய்யப்பட்டது. உலகக் கிண்ண தொடக்க ஆட்டத்தில் ஈக்வடார் ரசிகர்களால் கூறப்பட்ட சிலிக்கு எதிரான கோஷங்களை பீபா கண்டிக்கிறது.
No comments:
Post a Comment