ஜனநாயகம். மன்னர் ஆட்சி, ஒற்றை ஆட்சி, கொம்யூனிசம், இடதுசாரிகள், வலதுசாரிகள் , மத அரசியல் என உலக ஆட்சி வகைப்படுத்தப்பட்டுள்ளது. சீனக் கொம்யூனிஸ்ட்,ரஷ்ய கொம்யூனிஸ்ட் என்று கொம்யூனிஸம் பிரிவடைந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில்
ஆட்சி பீடத்தில் இருந்து கோலோச்சிய வலதுசாரி தலைவர்களும், தீவிர தேசியவாதம் பேசும்
தலைவர்களும் தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்து வருகின்றனர். உலகில் இதுவரை பல தத்துவங்கள்
தோன்றியும் வளர்ந்தும் அழிந்தும் உள்ளன. ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு தத்துவங்கள்
வளர்ச்சிக்கு வித்திட்டு உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே
உலகெங்கும் வலதுசாரிகளுன் கைகளும், தேசியவாதிகளின்
கொள்கைகளும் ஓங்கத் தொடங்கின. அமெரிக்கா முதலே
அவுஸ்திரேலியா வரை பல உலக நாடுகளில் வலதுசாரிகள் அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்தனர்.
இது அங்குள்ள பெரும் நிறுவனங்கள் வளர பெரியளவில் உதவினாலும் கூட, அங்குள்ள உழைக்கும்
மக்கள் மேலும் மேலும் சுரண்டலுக்கே ஆளானார்கள். அதிகார குவியல் சமீப காலங்களில் வலதுசாரிகள்
பெற்ற வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் 2004 ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர்,
அனைத்து அரசுகளும் மிகவும் வலிமையானதாக மாற தொடங்கின. தங்கள் பொலிபோலீஸ் கட்டமைப்பு
என அனைத்தும் வலதுசாரிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டன.
அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியானதால் வலதுசாரிகளின் கை ஓங்கத்தொடங்கியது.அதன் பின்னர் சில நாடுகள் வலது சாரிகளின் கைகளுக்குச்
செல்லத் தொடங்கின. டிரம்ப் இதனால் ஒவ்வொரு
நாடும் மெல்ல வலதுசாரிகளின் கைகளுக்குச் செல்ல தொடங்கின. இருப்பினும், சமீப ஆண்டுகளில்
நிலைமை மெல்ல மாற தொடங்கி உள்ளது. அதி தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட ட்ரம்ப் முதலில்
அமெரிக்காவில் கடந்த 2020இல் வீழ்ந்தார். மெக்சிகோ சுவர் தொடங்கி ட்ரம்ப் காலத்தில்
அவர் செய்த அடாவடிகளுக்கு எல்லையே இல்லை. கொரோனா பெருந்தொற்று பரவ தொங்கிய பின் நடந்த
தேர்தலில் டிரம்ப் படுதோல்வி அடைந்தார். அதன்
பின்னர் உலகின் பல நாடுகளிலும் வலதுசாரிகளின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
ஆஸ்திரேலியாவில் லிபரல்
கட்சியைச் சேர்ந்த ஸ்காட் மாரிசன் இரு தேர்தல்களில் அடுத்தடுத்து வென்று ஆட்சியில்
இருந்தார். அப்போது பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அவர் பல நடவடிக்கையை எடுத்தார். அவரும்
இப்போது ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார். அங்குத் தொழிலாளர் கட்சியை மீண்டும் ஆட்சியைப்
பிடித்து உள்ளது. அதிலும், கடந்த 2007க்கு பின் முதல்முறையாகத் தொழிலாளர் கட்சி தனிப்பெரும்பான்மை
உடன் ஆட்சியைப் பிடித்து உள்ளது.
இதே நிலை தான் அதேபோல வலதுசாரியான
கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருக்கும் பிரிட்டனை சொல்லலாம். அங்கு இப்போது மிக மோசமான
பொருளாதார சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே மூன்று மாதங்களில் மூன்று பிரதமர்களைப்
பிரிட்டன் பார்த்து இருக்கிறது. இப்போதும் கூட அங்கு நிலைமை சரியாகவில்லை
இந்த வரிசையில் பிறேஸிலும்
இணைந்துள்ளது. அங்கு ஜெய் போல்சார்னோ ஜனாதிபத்கியாக இருந்தார் . இவர் தான் கொரோனா ஊசி போட்டால் முதலையாக
மாறிவிடுவோம் என்றெல்லாம் கூறியவர். இப்போது இவரும் வீழ்ந்துள்ளார். இவரையும் அங்குள்ள
தொழிலாளர் கட்சியே வீழ்த்தி உள்ளது. தொழிலாளர் கட்சியின் லூலா சில்வா 12 ஆண்டுகளுக்குப்
பின் ஜனாதிபதியாகினார்.
இஸ்ரேலில் கடந்த 2009 முதல் 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தீவிர வலதுசாரியான பெஞ்சமின் நெதன்யாகு வீழ்த்தப்பட்டார். அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், ஆட்சியைப் பிடிக்க பெஞ்சமின் நெதன்யாகு எவ்வளவோ முயன்ற போதிலும் பலன் தரவில்லை.
இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைக்கப்பட்டு
தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில்
இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி
இஸ்ரேலில் கடந்த முதலாம் 2 ஆம் திகத்க்க்கி பொதுத் தேர்தல் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளில் நடந்த
5-வது பொதுத்தேர்தல் இதுவாகும். உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு
இரவு 10 மணி வரை தொடர்ந்தது. ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே
நீண்டவரிசையில் காத்திருந்து ஜனநாயக கடைமையை ஆற்றினர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக
நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்தததும் உடனடியாக வாக்குகள்
எண்ணும் பணிகள் தொடங்கின
நான்கு ஆண்டுகளில் ஐந்தாவது தேர்தல்.இஸ்ரேலின் வரலாற்றில் மிக வலதுசாரி கூட்டணி ஒன்றில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஆட்சிக்கு வர உள்ளதால், மத்திய கிழக்கு முழுவதும் பதட்டத்தை உண்டாக்கும் என அஞ்சும் பாலஸ்தீனியர்கள் மற்றும் அரபு அண்டை நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெதன்யாகு அரசாங்கம் சர்வதேச ஆதரவுடன் பாலஸ்தீனியர்கள் மாநில அந்தஸ்தை கோரும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தீர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும். ஆனால் ஈரான் மீதான அவரது கடுமையான நிலைப்பாடு இஸ்ரேலின் சமீபத்தில் தாக்கப்பட்ட வளைகுடா அரபு கூட்டணிகள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதாகும்.
உலக நாடுகளில் நடந்த
அனைத்து தேர்தல்களிலும் இடதுசாரிகளே ஆட்சியைப் பிடித்து உள்ளனர் எனச் சொல்ல
முடியாது. பிரான்ஸ் நாட்டில் மக்ரோன் மீண்டும் ஜனாதிபதியானார். இத்தாலியிலும் வலதுசாரியான
ஜார்ஜியா மெலோனி கைகளில் அதிகாரம் சென்று இருக்கிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப்
பார்க்கும் போது, தீவிர வலதுசாரி தத்துவம் பேசுபவர்களுக்கு மக்கள் ஆதரவு குறையத் தொடங்கியுள்ளதையே
இது காட்டுகிறது..
No comments:
Post a Comment