Saturday, May 20, 2023

மே 18 கோலிக்கு ராசியான நாள்


 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் திகதி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராட் கோலி, ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் அணிக்கு எதிராக மே 18 ஆம் திகதி  நடந்த  போட்டியில் விராட் கோலி 62 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் விராட் கோலி 6வது சதத்தைன் விளாசியதோடு, ஏராளமான சாதனைகளையும் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2022ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி வெறும் 341 ஓட்டங்களை மட்டுமே விராட் கோலி அடித்தார். ஆனால் நடப்பு சீசனில் 13 போட்டிகளில் மொத்தமாக 538 ஓட்டங்களை விளாசியுள்ளார்.

ஏப்ரல் 23ஆம் திகதி ஆர்சிபி அணி பச்சை நிற சீருடையுடன் களமிறங்கியது. அந்தப் போட்டியில் விராட் கோலி ஓட்டம்  ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்.   2022ஆம் ஆண்டு ஏப்ரல் 23ல் நடைபெற்ற போட்டியிலும் டக் அவுட்டாகினார்.  2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெற்ற போட்டியிலும் விராட் கோலி டக் அவுட்டானார்.இதனால் விராட் கோலிக்கு ஏப்ரல் 23ஆம் திகதி ராசியே இல்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.

ஆனால், மே 18 விடாட்டுக்கு ராசியான நாளாகும். மே 18ஆம் திகதி  ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் விளாசி அசத்தியுள்ளார்.   2016ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி 8 தையல்களுடன் சதம் விளாசினார்.   2015ஆம் ஆண்டு ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 18 பந்துகளில் 44 ஓட்டங்கள் விளாசி   கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.விராட் கோலியின் சீருடை  இலக்கமும்  18 தான். இது விராட் கோலி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

No comments: