ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் ஹெத் ஸ்ட்ரீக் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.தென் ஆப்பிரிக்காவின் ஜோகான்ஸ்பர்க் நகரில் இருக்கும் மருத்துவமனையில் ஸ்டேஜ் 4 புற்று நோயால் அவதிப்பட்டு வரும் அவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக ஸிம்பாப்வே அணியின் முக்கிய வீரர் சீன் வில்லியம்ஸ் சோகத்துடன் கூறியுள்ளார்.
90களில் அவுஸ்திரேலியா, இந்தியா உட்பட உலகின் முன்னணி அணிகளையும்
தோற்கடிக்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்ட ஸிம்பாப்வே அணியில் முக்கிய வீரராக செயல்பட்ட
அவரை ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. அந்த காலகட்டத்தில் மிகச் சிறந்த வேகப்பந்து
வீச்சு ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்த அவர் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கு மிகவும்
பிடித்த வீரராக வலம் வந்தார். கடந்த 1993ஆம் ஆண்டு ஸிம்பாப்வே அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில்
அறிமுகமான அவர் 2005 வரை 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.
5000 ஓட்டங்களையும் 455 விக்கெட்களையும் எடுத்து மிகச் சிறந்த ஆல்
ரவுண்டராக அசத்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் ஸிம்பாப்வே
வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ஓட்டங்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை எடுத்த முதல்
ஸிம்பாப்வே வீரர் போன்ற நிறைய சாதனைகளையும் படைத்துள்ளார். 2005இல் ஓய்வுக்கு பின்
பயிற்சிகளாக செயல்பட்டு வந்த அவர் தற்போது 49 வயதை கடந்துள்ள நிலையில் கல்லீரல் புற்றுநோய்
காரணமாக மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment