புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் குஜராத் அணி வீரர்கள் லாவண்டர் நிற சீருடை அணிந்து களமிறங்கினர். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி அணி "கோ க்ரீன்" என்ற கலாசார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான பச்சை நிற சீருடை அணிந்து ஆர்சிபி வீரர்கள் ஒரு போட்டியில் விளையாடுவார்கள் ஆர்சிபி அணியை பின்பற்றி புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கும் வகையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லாவண்டர் சீருடை அணிந்து குஜராத் அணி வீரர்கள் களமிறங்கினர்.
நாணயச் சுழற்சிக்கு முன்பாக ஹை தராபாத் அணியின் கப்டம் எய்டன் மார்க்ரத்தின் சீருடையில் லாவண்டர் நிற ரிப்பனை ஹர்திக் பாண்டியா குத்திவிட்டார். இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த முன்னெடுப்பை செய்கிறோம். அவர்களுக்கு ஆதரவளிக்க இதுவும் வழியாகும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment