Friday, May 12, 2023

டக் அவுட்டில் ஹிட்மேன் ரோகித் முதலிடம்


 ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் மும்பை அணியின் கப்டன் ரோகித் சர்மா முதலிடத்தில் இரூக்கிறார்.  சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில்   ரோகித் சர்மா ஸ்கூப் ஷாட் ஆட முயன்று டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.   ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துத்துள்ளார். 16வது ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் ரோகித் சர்மா இதுவரை 16 முறை டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். அதேபோல் கப்டனாக அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலிலும் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை கப்டனாக மட்டும் ரோகித் சர்மா 11 முறை டக் அவுட்டாகியுள்ளார். இவருக்கு பின் கவுதம் கம்பீர் 10 முறை டக் அவுட்டாகி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 15 முறை டக் அவுட்டாகி தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் , மன்தீப் சிங் ஆகியோர் இரண்டாமிடத்தில் உள்ளனர்.   14 முறை டக் அவுட்டாகி அம்பாதி ராயுடு மூன்றாவது இடத்திலும், 13 முறை டக் அவுட்டாகி பியூஷ் சாவ்லா, கிளென் மேக்ஸ்வெல், பார்த்திவ் படேல், ரஹானே, மணீஷ் பாண்டே ,ஹர்பஜன் சிங் ஆகியோர் 4வது இடத்திலும் உள்ளனர்.

ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தொடர்ந்து 5 போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 4 முறை ஒற்றை இலக்க எண்ணில் ஆட்டமிழந்தார். 

ஐபிஎல் தொடரில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை துரத்தும்போது அதிக முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த மூன்றாவது வீரராக ரோகித் இருக்கிறார். 

ரோகித் சர்மாவும்,ம் உமேஷ் யாதவும்  இதுவரை 7 முறை இதுமாதிரியான நேரத்தில் ஆட்டமிழந்துள்ளனர்.  இந்த பட்டியலிலில் தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் சுனில்  நரைன் 9 முறை ஆட்டமிழந்து  முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக் 8 முறை ஆட்டமிழந்து  இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

No comments: