Thursday, May 4, 2023

"6 மாதத்திற்கு ஒரே மாதிரியான உணவு சுவை முக்கியமில்லை" - கோலி

கோலி தனது உணவின் ருசி குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை. காரமான, வறுத்த உணவுகளை கோலி தவிர்க்கிறார். அவர் மசாலா கறிகளில் இருந்து விலகி, பெரும்பாலும் ராஜ்மா மற்றும் தட்டபயறு சாப்பிடுவதாக கூறுகிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பேட்டிங்கில் காட்டும் அதே நேர்த்தியை தனது உடல் ஃபிட்னஸிலும் காண்பிப்பார். கடுமையான வொர்க்அவுட்டுடன், கடுமையான டயட்டையும் பின்பற்றுவதே அதற்கு காரணம். கோலி சமீபத்தில் தனது உணவில் 90 சதவீதம் வேகவைத்த உணவுகள்தான் என்றும், மசாலா பெரும்பாலும் சேர்ப்பது இல்லை என்றும் வெளிப்படுத்தியுள்ளார்.கோலியின் தீவிரமான ஒர்க்அவுட் மூலம் அவரது உடலை மேம்படுத்தி வைத்திருக்கும் அவர் அடிக்கடி பாராட்டப்பட்டாலும், அவரது உணவுமுறையும் அவரது ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது அவர் கூறுவதில் இருந்து தெளிவாகிறது.

விராட் கோலி தனது டயட்டில் வேகவைத்த உணவுகளோடு, சிறிது ஒலிவ் எண்ணெய் அல்லது பிற மசாலாப் பொருட்களுடன் பான்-க்ரில் செய்யப்பட்ட உணவுகளும் சேர்த்துக்கொள்கிறார். காரமான,

அயராது உழைத்து வரும் அவரது உடல்நிலையைக் கண்டு அவரது அர்ப்பணிப்பால் அவரது ரசிகர்கள் ஆச்சர்யமடைந்து வருகின்றனர். அவர் தனது உடற்தகுதி அளவைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், அவரது விளையாட்டில் முன்னணியில் இருக்கவும் தனது வழக்கத்தில் எவ்வாறு மாற்றங்களைச் செய்துள்ளார் என்பதைப் பார்ப்பது பலருக்கும் ஊக்கமளிக்கிறது

வறுத்த உணவுகளை கோலி தவிர்க்கிறார். அவர் மசாலா கறிகளில் இருந்து விலகி, பெரும்பாலும் ராஜ்மா மற்றும் தட்டபயறு சாப்பிடுவதாக கூறுகிறார்.

 

No comments: