ஆசிரியர்களால்
மாணவிகள் மேல் நடத்தப் படும் கொடூரங்கள்
அதிகமாக வெளிச்சத்துக்கு வருவதில்லை. அவ்வப்போது சில செய்திகள் வெளிஆகுவதும்,
காலப் போக்கில் அவை மறக்கடிக்கப்படுவதும் வழமையானவை.
சிறுவர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு
பெரியவர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் இப்போது அதிகமாக
வெளியாகின்றன. களுத்துறையில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் பலரது
கண்களைத் திறந்துள்ள நிலையில், இது தொடர்பான பல
பாரதூரமான கேள்விகளுக்கு இலங்கை பதில் தேடுகிறது.
இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எப்படி தண்டனை வழங்குவது
என்ற கவலை இருக்கும் நிலையில்,
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க என்ன
செய்ய வேண்டும்
ன்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
களுத்துறையைச்
சேர்ந்த தனியார் கல்வி ஆசிரியர்
ஒருவர் தனது வகுப்புகளுக்குச் சென்ற
16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக்
கூறி கைது செய்யப்பட்ட சம்பவம்.
ஆசிரியருடன் இருக்கும்போது குழந்தைகள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தகர்த்துள்ளது. குழந்தைகளை தனியார்
கல்வி நிறுவனங்களில் கண்காணிக்காமல் விட்டுச்செல்லும் பல பெற்றோர்களுக்கு இது
ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது.
மேலும் இப்போது தனியார் டியூஷன்
வகுப்புகளை வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து தேசிய அளவிலான பேச்சுக்கு
வழிவகுத்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு
அவசியம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது
வரலாற்றுப்
பெருமை மிக்க கல்லூரியில்
படிக்கும் மாணவர்களும் தனியார் கல்வி நிலையங்களை
நாடுகிறார்கள். பாடசாலைகளில்
கல்வி கற்பிக்கும் பிரபலமான
ஆசிரியர்கள் தான் தனியார் கல்வி
நிலையங்களிலும் கற்பிக்கின்றனர்.
சில தனியார் கல்வி நிலையங்கள் தமக்கென சீருடை கொடுக்கின்றான. மாணவர்களுக்கு
வாகன வசதி செய்து கொடுக்கின்றன. பாடசாலை
முடிந்தது, ரியூஷன், இரவு
வீட்டு வேலை என் மாணவர்களின்
வழ்வி இயந்திர மயமாகி உள்ளது.
ஐந்தாம்
வகுப்பில் மாணவர்கள் மீது
ஏற்றப்படும் கல்விச்சுமை பல்கலைக் கழகாம் வரை தொடர்கிறது.
பொது அரிவு, விளையாட்டு என்பனவற்ரின் பக்கம்
மாணவரின் சிந்தனை திரும்புவதில்லை.
தனியார்
கல்வி வகுப்புகள் வழங்கும் கல்வியின் தரத்தை முறைப்படுத்தவும், அந்த
வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வழிகாட்டுதல்கள்
மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பைத் தயாரிப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், தனியார் கல்வி வகுப்புகள்
தொடர்பான விதிமுறைகளின் தேவை மற்றும் கோரிக்கை
இருந்தபோதிலும், கல்வி இராஜாங்க அமைச்சர்
ஏ. அரவிந்த் குமார் ஒரு முக்கியமான
யதார்த்தத்தை சுட்டிக்காட்டினார். அதாவது, தனியார் கல்வித்
துறையை ஒழுங்குபடுத்துவதில் உள்ள வரம்புகள், தனியார்
கல்வித் துறையின் மீது அரசாங்கம் முழுக்
கட்டுப்பாட்டை வைத்திருக்க முடியாது என்பதால் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைச் செய்வது சாத்தியமற்றது என்று
அவர் கூறினார்.
அரசாங்கம்
என்ன செய்ய முடியும் என்பது
தொடர்பான வரம்புகள், கூறப்பட்ட சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பையும்
நல்வாழ்வையும் மேம்படுத்த அரசாங்கத்தால் மட்டும் முடியாது என்ற
யதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது. எனவே, இந்த முயற்சிக்கு
பெற்றோரின் பங்களிப்பையும் பெற வேண்டும்.
தனியார்
ஆசிரியர்களின் செயல்திறன் மற்றும் நடத்தை கண்காணிக்கப்பட்டு
மதிப்பீடு செய்யப்பட வேண்டும், மேலும் இது பெரும்பாலும்
பெற்றோரின் பொறுப்பாகும். குறிப்பாக மாணவர்களின் வீடுகளுக்குச் செல்லும் தனியார் ஆசிரியர்களின் செயல்பாடுகள்
மற்றும் நடத்தைகளை பெற்றோர்கள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். ஒரு
சில ஆசிரியர்கள் தமிடம் படித்த மாணவிகளைத்
திருமணம் செய்துள்ளனர்.
ஆசிரித்தொழில்
புனிதமானது. அவர்கள் தவறு செய்தால்
தட்டிக் கேட்க வேண்டும். அதற்குரிய
வல்லைமையை பிள்ளைகளிடம்
ஏற்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment