Monday, May 22, 2023

ஹரியையும் மனைவியையும் துரத்திய பப்பராசிகள்

 

      இங்கிலாந்து இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அமெரிக்காவில் பபப்ராசிகள் எனப்படும்  புகைப்படக்காரர்களாால் காரில் துரத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது மகன் சார்ள்ஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். அரசப் பணிகளை கவனித்து வந்த மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் கடந்த 6-ம் திகதி முறைப்படி முடிசூடிக் கொண்டார். மன்னர் சார்ள்ஸைத்  தொடர்ந்து அவரது மனைவி கமீலாவும் இங்கிலாந்து ராணியாக முடி சூடிக் கொண்டார். இந்த  வைபவத்தில் லகத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.மன்னர் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்ற இந்தக் கொண்டாட்டத்தில்  மன்னர் சார்ள்ஸின் மூத்த மகன் வில்லியம் தனது மனைவி கேத் மிடில்டன், குழந்தைகளுடன் இந்த விழாவில் கலந்து கொண்டார். ஆனால் ஹரி மட்டும்  வைபவத்தில் கலந்துகொண்டார்.  அவருகு மூன்றாஅவ்து வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.

  இளவரசர் ஹரிஅரண்மனையிலிருந்து வெளியேறிவிட்டார். இதனால் அவருக்கும் அரசு பரம்பரைக்கும் இருக்கும் பந்தம் அறுந்துவிட்டது. இந்த நிலையில் சார்லஸின் முடிசூட்டு விழாவில் ஹரி மட்டும் பங்கேற்றார். ஆனால் அவருடைய மனைவி மேகன் உள்பட குழந்தைகள் யாரும் பங்கேற்ற அனுமதி இல்லை என கூறப்பட்டது. நியூயார்க் நகரில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரிக்கும்,, மனைவியும் நடிகையுமான மேகன் மார்க்கெல்லுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஹரி, மேகன், மேகனின் தாயார் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் 3 பேரும் ஒரே காரில் தங்களின் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது இளவரசர் ஹரியையும் அவரது மனைவி மேகனையும் போட்டோ எடுக்க திரண்ட புகைப்படக்காரர்கள் அவர்களை 10 க்கும் மேற்பட்ட கார்களில் விரட்டியுள்ளனர். சுமார் இரண்டு  மணி நேரத்திற்கும் மேலாக புகைப்படக்காரர்கள் இளவரசர் ஹரி சென்ற காரை துரத்தியுள்ளனர். இந்த கார் சேஸில் பல விபத்துகள் நடந்துள்ளன. இதில் ஏராளமான கார்கள் சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என நியூயார்க் நகர பொலிஸார் தெரிவித்தனர்.


1997 ஆம் ஆண்டு   பிரான்ஸில் இளவரசி டயானாவின் உயிரை பறித்த சம்பவத்தை நினைவுப்படுத்தியுள்ளது.   ஹரியின் தாயாரான      டயானா தனது பாதுகாவலர்களுடன் காரில் சென்ற போது அவரை புகைப்படம் எடுக்க     பப்பராசிகள்   துரத்தியதால் பரிஸில் அவரது கார் விபத்துக்குள்ளானது.   வேல்ஸ் இளவரசி டயானா அகால மரணமடைந்தார். டோடி ஃபயீத் என்ற எகிப்து திரைப்பட தயாரிப்பாளரும் இந்த விபத்தில் மரணமடைந்தார். டயானாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பிருந்ததாகவும் அவருடன் டயானா வெளியே செல்கிறார் என்றதும் அவரை படம்பிடித்த புகைப்படக்காரர்கள் முடிவு செய்தனர். இதற்காக எப்படியாவது துரத்தி அந்த நபரை புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் இந்த முயற்சியில் போனது இரு உயிர்கள் பலியாகின   இதுகுறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. டயானாவின் கார் விபத்தில் சிக்கிய போது அவர் உயிருடன் இருந்ததாகவும் அவரை காரில் இருந்து வெளியே தூக்கிய நபர்கள் தெரிவித்தனர். மேலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்ததாகவும் அப்போது 20 வினாடிகளில் அவருக்கு நினைவுத் திரும்பியதாவும் அவரை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும்   தெரிவித்துள்ளனர்.டயானாவுக்கு நடைபெற்றதுபோல ஒரு   திகில் சம்பவம்  ஹரியின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.     

புகைப்படப்பிடிப்பாளர்களால் (பப்பராசிகளால் )துரத்தப்பட்ட  இளவரசர் ஹரிதம்பதியினர் பாரிய விபத்தொன்றில் சிக்கும் ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.நியூயோர்க்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஹரி மேகன் தம்பதியினர் விருதுவழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் அவர்களை புகைப்படப்பிடிப்பாளர்கள் பின்தொடர்ந்து துரத்தியுள்ளனர்.தங்கள் வாகனம் இரண்டு மணிநேரம் துரத்தப்பட்டது என இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக வீதியில் காணப்பட்ட வாகனங்கள் பாதசாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் தங்கள் வாகனம் மோதுப்படும் நிலை உருவானது என இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.விருது வழங்கும் நிகழ்வில் ஹரிதம்பதியினருடன் மேகனின் தாயாரும் கலந்துகொண்டுள்ளார்.அவர்கள் அந்த நிகழ்விலிருந்து வெளியேறுவதை புகைப்படங்கள் காண்பித்துள்ளன.இதன்பின்னர் ஆறிற்கும் மேற்பட்ட கார்கள் அவர்களின் வாகனத்தை துரத்தியுள்ளன கண்மூடித்தனமாக ஹரியின் வாகனத்தை அவர்கள் பின்தொடர்ந்துள்ளனர்ஆங்கில படப்பாணியில் ஹரியின் வாகனம் துரத்தப்பட்டுள்ளது- பப்பராசிகள் வாகனத்தை துரத்தியவாறு ஹரிதம்பதியினரை படம்பிடித்துள்ளனர்.


 

கார் துரத்தலின் போது நியூயார்க் நகரத்தின் வழியாக ஹரியும், மேகனும் பயணம் செய்தசென்ற டாக்ஸி சாரதி  சுக்சர்ன் சிங், அவர்களை பாப்பராசிகள் பின்தொடர்ந்ததாகக் கூறினார் - ஆனால் அது "பேரழிவை நெருங்கிவிட்டது" என்ற தம்பதியரின் மதிப்பீட்டை ஏற்கவில்லை.இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பாப்பராசி ஓட்டுநர், தம்பதியினருடன் தொடர முயற்சிப்பது "மிகவும் பதட்டமாக" இருந்ததாக ஒப்புக்கொண்டார்.

நியூயார்க்கில் நடந்த "துரத்தலின்" போது பாப்பராசி எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஏஜென்சியிடம் ஒப்படைக்குமாறு ஹரியும் மேகனும் கோரியுள்ளனர் - ஆனால் அது மறுக்கப்பட்டது.சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் பேக்கிரிட் ஏஜென்சிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர் -ஆனால் பேக்கிரிட்டின் வழக்கறிஞர்   பதிலுக்கு ஒரு வலுவான கடிதத்தை அனுப்பினார்

 : "அமெரிக்காவில்சொத்து அதன் உரிமையாளருக்குச் சொந்தமானது என்பது  உங்களுக்குத் தெரியும்: மூன்றாம் தரப்பினர் அதைத் தங்களுக்கு வழங்குமாறு கோர முடியாது, ஒருவேளை மன்னர்கள் கோரலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரச வாழ்க்கையை விட்டு வெளியேறினாலும் இளவரசர் ஹரியைத்    துரத்துவதை பப்பராசிகள் கைவிடவில்லை.

 

No comments: