Tuesday, May 16, 2023

அரசியல் தலையீட்டால் அவமானப்படும் விளையாட்டு


இலங்கையை  உலகத்துக்கு உயர்த்திக் காட்டுவதில் விளையாட்டும்  முக்கிய பங்கு வகிக்கிறது. ஆசிய நாடுகளுக்கிடையில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் சாதனைகள் பலவற்றைப் படைத்துள்ளனர். ஒலிம்பிக் பதக்கம், உலகக்கிண்ண கிறிக்கெற் சம்பியன் ஆகியவற்றால் உலகளாவிய ரீதியில் இலங்கை பிரகாசிக்கிறது.

அரசியல் தலையீட்டினால்  இலங்கை விளையாட்டில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.அதிகாரப் போட்டி, பதவி ஆசை ஆகியனவும்  இலங்கையின் விளையாட்டில் பெரும் பாதிப்பைத் தோற்றுவித்துள்ளது.விளையாட்டுடன் சம்பந்தம்  இலாதவர்களால். , விளையாட்டைப் பற்றி எதுவும்தெரியாதவர்களினால் விளையாட்டில் ஆர்வம்  உள்ள வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். உதைபந்தாட்ட நிர்வாகத்தைத் தெரிவு செய்வதில் ஏற்பட்ட குளறுபடியால்  பீபா தடைவிதித்துளது. சர்வதேச  உதைபந்தாட்டப் போட்டிகளில்  இலங்கை அணி விளையாட  முடியாத நிலை தோன்றியுள்ளது. இந்தப் பிரச்சனைகளுக்கு அமைச்சரின் தலையீடுதான் காரணம் என  பீபா  தெரிவித்துள்ளது.

தெற்காசிய உதைபந்தாட்ட sampiyan   போட்டி  ஜூன் 21 முதல் ஜூலை 4 வரை இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ளது. பீபா விதித்த

 தடைகாரணமாக  இலங்கை கலந்து கொள்ள  முடியாத நிலை தோன்றியுள்ளது. 1997 ஆம் ஆண்டு ஆரம்பமான  இந்த சம்பியன் கிண்ணப் போட்டிகள் அனைத்திலும்  இலங்கை பங்குபற்றியுள்ளது.

பீபாவின் தடை காரணமாக உதைபந்தாட்ட வீரர்கள்  பாதிப்படைந்துள்ளனர். பீபாவின் தடையில் இருந்து இலங்கை உதைபந்தாட்ட அணியை  மீட்டெடுப்பதற்கான நடவடிக்கை எதனையும் இலங்கை  அரசாங்கம்  மேற்கொள்ளவில்லை.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக கூறப்படும் உண்மை கண்டறியும் பணியின் ஒரு பகுதியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) துணைத் தலைவர் இம்ரான் குவாஜா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட்  அதிகாரிகள் விளையாட்டுத்துறையின் உலக நிர்வாக சபைக்கு செய்த முறைப்பாடுகளை ஆராய்வதற்காக

மார்ச் மாதம் ஐசிசியால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவில் க்வாஜாவும் ஒருவர். மார்ச் மாதம் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது, இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் நஸ்முல் ஹாசன் ஆகியோர் அடங்குவர்.

கடந்த வருடம் இலங்கையில் நடைபெறவிருந்த ஆசியக் கிண்ணப் போட்டிகள்  இடம் மாற்றப்பட்டதையடுத்து  இலங்கை கிரிக்கெட் அணிக்கும் அமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியது.

பீபாவின் தடை காரணமாக உதைபந்தாட்ட வீரர்கள்  பாதிப்படைந்துள்ளனர். பீபாவின் தடையில் இருந்து இலங்கை உதைபந்தாட்ட அணியை  மீட்டெடுப்பதற்கான நடவடிக்கை எதனையும் இலங்கை  அரசாங்கம்  மேற்கொள்ளவில்லை.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக கூறப்படும் உண்மை கண்டறியும் பணியின் ஒரு பகுதியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) துணைத் தலைவர் இம்ரான் குவாஜா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட்  அதிகாரிகள் விளையாட்டுத்துறையின் உலக நிர்வாக சபைக்கு செய்த முறைப்பாடுகளை ஆராய்வதற்காக மார்ச் மாதம் ஐசிசியால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவில் க்வாஜாவும் ஒருவர். மார்ச் மாதம் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது, இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் நஸ்முல் ஹாசன் ஆகியோர் அடங்குவர்.அரசியல் தலையீடுகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் விளையாட்டை நிர்வகிப்பதில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து   குவாஜா கேட்டறிந்தார்.

கடந்த வருடம் இலங்கையில் நடைபெறவிருந்த ஆசியக் கிண்ணப் போட்டிகள்  இடம் மாற்றப்பட்டதையடுத்து  இலங்கை கிரிக்கெட் அணிக்கும் அமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியது.

அரசியல்வாதிகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் இடையே நிறைய வேருபாடுகள்  உள்ளன. ஆட்சி மாறினால் அரசியல்வாதிகள் கட்சி மாரிவிடுவார்கள். ஆனால், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுத்தான் வாழ்க்கை. அரசியல்வாதிகளின்  போலிக் கெளரவத்தினால் விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

வயது, உடல் நிலை , நோய் எதனையும் பற்றிக் கவலைப்படாமல் அரசியலாதிகள் நாட்களைக் கடத்துவார்கள்.  உடல் நிலை திடகாதிரமாக  இருந்து நோய் நொடி இல்லமல் வயது  போக முன்னர் சாதிக்க வேண்டிய கட்டாயம் விளையாட்டு வீரனுக்கு உள்ளது. விளையாட்டினதும், விளையாட்டு வீரனதும் எதிகால நன்மைக்காக அரசியல் நோக்கத்தைத் துறந்து செயற்பட வேண்டிய கட்டாயம்  அவர்களுக்கு உள்ளது.

No comments: