பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா அணியும் வீரர்களும் படைத்த சாதனைகள்
1. முன்னதாக இந்த போட்டியில் அடித்த 6 சிக்ஸர்களையும்
சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும்
சாதனையை ரோகித் சர்மா படைத்தார். அவரை தவிர்த்து வேறு எந்த இந்திய வீரரும் 250 சிக்சர்கள்
கூட அடித்ததில்லை. அவருக்கு அடுத்தபடியாக
இந்தியாவின் மற்றொரு ஜாம்பவான் எம்எஸ் டோனி 226 சிக்சர்கள் அடித்து 2வது இடத்தில் இருக்கிறார்.
2. 246 இன்னிங்ஸ்லயே 300 சிக்ஸர்கள் அடித்துள்ள அவர்
ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 300 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை
தகர்த்து உலக சாதனை படைத்தார்.
அந்த பட்டியல்
(இன்னிங்ஸ்):
1. ரோகித் சர்மா : 246*
2. கிறிஸ் கெயில் : 282
3. ஷாஹித் அப்ரிடி : 324
3. உலகக் கிண்ண வரலாற்றில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட
போட்டியில் அதிக ஓஆடன்கள் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையும் தகர்த்த அவர்
புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (ஓட்டங்கள்):
1. ரோகித்
சர்மா : 586*
2. ரிக்கி பாண்டிங் : 519
3. மார்ட்டின் கப்தில் : 504
4. ஆடம் கில்கிறிஸ்ட் : 498
5. ஸ்டீபன் பிளெமிங் : 468
6. விராட் கோலி : 461*
பாகிஸ்தானை
தோற்கடித்து பாக் உலக சாதனையை சமன் செய்த இந்தியா.. 2018 – 2023 வரலாறு காணாத சரித்திர
வெற்றி 4. மேலும் உலகக் கோப்பையில் சேசிங் செய்யப்பட்ட போட்டியில் அதிக முறை 50க்கும்
மேற்பட்ட ஓட்டங்களை அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜக் கலிஸ் (தலா
6) ஆகியோரது சாதனையை உடைத்து சாகிப் அல் ஹசன் (தலா 7) உலக சாதனையையும் ரோகித் சர்மா
சமன் செய்துள்ளார்.
இந்த வெற்றியின் வாயிலாக உலகக்கிண்ண வரலாற்றில் ஒரு
குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக
சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இந்தியாவைப்
போலவே உலகக்கிண்ணத்தில் இதுவரை இலங்கையை எதிர்கொண்ட
8 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி கண்டுள்ளது.
இந்தியா,பாகிஸ்தானை
தவிர்த்து ஸிம்பாப்வேவுக்கு எதிராக மேற்கு
இந்தியா ,பங்களாதேஷுக்கு எதிராக நியூசிலாந்து
ஆகிய அணிகள் இதுவரை உலகக் கோப்பையில் தோற்காமல் தலா 6 வெற்றிகளை பதிவு செய்து இப்பட்டியலில்
2வது இடத்தில் இருக்கின்றன.
2018 ஆசியக்
கோப்பையில் சந்தித்த 2 போட்டிகளில் முறையே 8, 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை
தோற்கடித்த இந்தியா 2019 உலகக் கிண்ணத்தில்
89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தற்போது 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. அதாவது கடைசியாக சந்தித்த 5 போட்டிகளிலும் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்துள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகளில் தொடர்ந்து இந்தியா வரலாறு காணாத வெற்றியையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment