ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை காஸா பகுதிக்கு உதவிகளை வழங்க அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.பணயக் கைதிகள் அனைவரும் வீடு திரும்பும் வரை காஸாவில் ஒரு மின்சார விளக்கும் எரியாது, ஒரு குழாயிலும் தண்ணீர் வராது, ஒரு எரிபொருள் வாகனம் கூட உள்ளே நுழைய முடியாது" என இஸ்ரேலில் எரிசக்தித்துறை அமைச்சர் இஸ்ரேல் கேட்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் ஹெக்ட் வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் தலைவர்கள் கட்டளையிட்டால் படைகள் "தரை சூழ்ச்சிக்கு தயாராகி வருகின்றன". 40 கிலோமீட்டர் (25 மைல்) நீளமுள்ள நிலப்பரப்பில் மக்கள் அடர்த்தியாக நிரம்பியிருக்கும் காசாவில் தரைவழித் தாக்குதல், மிருகத்தனமான வீட்டுக்கு வீடு சண்டையில் இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
சனிக்கிழமையன்று ஹமாஸின்
தாக்குதலில் 247 வீரர்கள் உட்பட 1,300 பேர் இஸ்ரேலில் கொல்லப்பட்டனர் - பல தசாப்தங்களாக
இஸ்ரேலில் காணப்படாத ஒரு எண்ணிக்கை - மற்றும் அதைத் தொடர்ந்து இஸ்ரேலிய குண்டுவீச்சு
காசாவில் 1,400 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது, இரு தரப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி.
இஸ்ரேலுக்குள் சுமார் 1,500 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாகவும், காஸாவில் இறந்த நூற்றுக்கணக்கானவர்கள்
ஹமாஸ் உறுப்பினர்கள் என்றும் இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேல் காஸாவை வான்வெளியில் இருந்து தாக்கும் போது, ஹமாஸ் போராளிகள் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியுள்ளனர். இப்பகுதியில் சண்டை பரவக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், வியாழன் அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் இரண்டு சிரிய சர்வதேச விமான நிலையங்களை சேவையிலிருந்து நீக்கியதாக சிரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் இயக்கமும் இதர தீவிரவாத
அமைப்புகளும் 150க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களைக் கடத்திச் சென்று இருப்பதாகக் கூறப்படுகிறது.
காஸாவில் இஸ்ரேல் நடத்தும்
ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடியாக தான் கடத்தி வைத்திருப்போரில் ஒவ்வொருவராக கொன்றுவிடப்போவதாக
ஹமாஸ் மிரட்டி இருக்கிறது.காஸாவில் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பயந்து 200,000க்கும் மேற்பட்ட
மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு ஓடி இருக்கிறார்கள். இஸ்ரேலும் எகிப்தும் எல்லைகளைத் தடுத்து
இருப்பதால் அவர்கள் காஸா பகுதியைவிட்டு வெளியேற முடியவில்லை. காஸாவுக்கு உணவு, எரிபொருள்,
மின்சாரம், மருந்து அனைத்தையும் இஸ்ரேல் முடக்கி இருக்கிறது.எகிப்தில் இருந்து காஸாவிற்கு
அந்தப் பொருள்கள் வரவிருந்த வழியும் மூடப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
காஸா மீது தொடர்ந்து ஏவுகணைகளை
வீசி வரும் இஸ்ரேல் காஸாவுக்குள் அடிப்படை தேவைகளான
உணவு மருந்து உள்ளிட்டவைகளை
எடுத்துச் செல்வதை தடுத்துள்ளது. மின்சாரத்திற்கு தேவையான எரிபொருளையும் உள்ளே அனுமதிக்காததால்
காஸா பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. இதற்கிடையே அத்தியாவசிய பொருட்களை காஸாவிற்குள்
அனுமதிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் எகிப்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை வீசப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
போர் என்றால் எந்த அளவு
ஆயுதங்கள் முக்கியமோ, அதே அளவுக்கு பணமும் தேவை. ஆயுதங்கள் வாங்க மட்டுமின்றி காயமடைந்தவர்களுக்கு
சிகிச்சை அளிக்கவும் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யவும் அடுத்தடுத்த திட்டங்களை நிறைவேற்றவும்
பணமே பிராதனம்.
எனவேதான் இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள ஏதுவாக, தங்களுக்கு தேவையான நிதியை கிரிப்டோகரன்சி முறையில் அனுப்புமாறு சமூக வலைதளங்கள் வழியாக ஹமாஸ் குழுவினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அறிந்த இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சைபர் க்ரைம் தடுப்புப் பிரிவினர், ஹமாஸ் குழுவினருக்கு சொந்தமான கிரிப்டோகரன்சி கணக்குகளை முடக்கியுள்ளனர்.
இணையம் மூலம் பணபரிவர்த்தனை நடப்பதையும் தடுத்ததாக கூறும் இஸ்ரேல் அதிகாரிகள், 90 சதவிகித நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். முன்னதாக ஹமாஸ் அமைப்பின் பொருளாதார விவகாரங்களை கையாண்ட நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலாவையும் ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றதாக இஸ்ரேல் கூறியிருந்தது. காஸா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினரின் 2021ஆம் ஆண்டு பட்ஜெட் 6611 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அந்த அமைப்புக்கு நிதி உதவி செய்வதில் ஈரான் முதலிடத்தில் இருக்கிறது. எகிப்து, லெபனான், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள அமைப்புகள் ஹமாஸ்க்கு நிதி உதவி செய்து வருகின்றன. பல நாடுகளிலுள்ள பாலஸ்தீனியர்கள் மற்றும் ஹமாஸின் கொள்கையை ஆதரிப்பவர்களும் உதவி செய்கின்றனர். மேற்கு ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்க நாடுகளில் நிதி உதவி வேண்டி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர, காஸா பகுதியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி வருவாயும் முக்கிய நிதி ஆதாரம். எனவேதான், ஹமாஸ்க்கு எதிரான போரில் தாக்குதல் ஒருபுறம், அந்த அமைப்பினருக்கு வரும் நிதி ஆதாரங்களை முடக்குவது மறுபுறம் என தீவிரம் காட்டுகிறது இஸ்ரேல்.
No comments:
Post a Comment