Tuesday, October 3, 2023

6 அரையிறுதி , 2 இறுதிப் போட்டிகள் சம்பியனாகாத நியூஸிலாந்து

 நியூஸிலாந்து இதுவரை   12 ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ளது.  6 முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இரண்டு முரை இறுதிப் போட்டியில் விளையாடியது. ஆனாலும்,சம்பியனாகவில்லை.  கடந்த 2015 ஆம் ஆண்டு  அவுஸ்திரேலியாவாலும்,    2019ம் ஆண்டு இங்கிலாந்தாலும்  தோற்கடிக்கப்பட்டு சம்பியனாகும் பொன்னான வாய்ப்பை இழந்தது.    இருப்பினும் இதுவரை உலகக் கோப்பை சாமிபியன் பட்டத்தை மட்டும் நியூசிலாந்து அணியால் வெல்ல முடியவில்லை. கடந்த 2019   அரையிறுதி போட்டியில் இந்தியா அணியை நியூஸிலாந்து அணி வீழ்த்தியது.

1975 ஆம் ஆண்டு முதல்   2019  ஆண்டு வரை வரை நியூசிலாந்து அணி இரண்டு முறை மட்டுமே குரூப் ஸ்டேட்டிலிருந்து (அதாவது லீக் போட்டியில்) வெளியேறியுள்ளது. முதல் முறையாக, 1983 இல் இந்திய அணி முதல் முறையாக சாம்பியனானபோது, குழு நிலையிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. இதற்குப் பிறகு, 1987 , கிவி அணி மீண்டும் குழு நிலையிலிருந்து வெளியேறியது.

1975 முதல் 2019 வரை உலகக் கோப்பையில் நியூசிலாந்தின் பயணம்

 

1975- அரையிறுதிப் போட்டியாளர்

 

1979- அரையிறுதிப் போட்டியாளர்

 

1983- குழு நிலை

 

1987- குழு நிலை

 

1992- அரையிறுதிப் போட்டியாளர்

 

1996- காலிறுதிப் போட்டியாளர்

 

1999- அரையிறுதிப் போட்டியாளர்

 

2003- சூப்பர் 6

 

2007- அரையிறுதிப் போட்டியாளர்

 

2011- அரையிறுதிப் போட்டியாளர்

 

2015- ரன்னர் அப்

 

2019- ரன்னர் அப்.

No comments: